அப்துல் அசீஸ் (இலங்கை அரசியல்வாதி)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அப்துல் அசீஸ் (Abdul Aziz, 6 அக்டோபர் 1921 – 5 சூன் 1990) இலங்கை அரசியல்வாதியும், தொழிற்சங்கத் தலைவரும் ஆவார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு

இந்தியாவில் பிறந்த அப்துல் அசீஸ் மும்பை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று தனது தந்தையுடன் இலங்கை]]யில் குடியேறினார். ஜவகர்லால் நேரு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டபோது, 1939 சூலை 15 இல் இலங்கை இந்தியக் காங்கிரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அப்துல் அசீஸ் அதன் நிறுவனர்களில் ஒருவராவார். ஆரம்பத்தில் அக்கட்சியின் இணைச் செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றினார்.[3] 1942 இல் இலங்கை இந்தியக் காங்கிரசின் தொழிற்சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943 மார்ச்சில், அன்றைய அரசின் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பான அன்றைய இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு அசீஸ் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால், உலகப் போர் முயற்சிகளுக்கு முட்டுக்கட்ட போடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் இவர் உச்ச நீதிமன்றத்தினால் விடுவிப்பட்டார். 1944 இல் இந்திய வம்சாவளித் தமிழரின் குடியுரிமை மற்றும் வாக்குரிமை போன்றவற்றை வலியுறுத்தி இலங்கை இந்தியக் காங்கிரசு குழுவிற்குத் தலைமைதாங்கி சோல்பரி ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். ஆனாலும் ஆணைக்குழுவிலிருந்து கணிசமான உத்தரவாதங்களைப் பெற முடியவில்லை.

1950 இல் இலங்கை இந்திய காங்கிரசின் பெயர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இதொகா) எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1950 மார்ச்சில் முதலாவது நாடாளுமன்றத்திற்காக மலையகத்தில் மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் நடப்பு உறுப்பினர் ஜி. ஆர். மோத்தா காலமானதால் நடைபெற்ற இடைத்தேர்தலில் அப்துல் அசீஸ் இலங்கை இந்தியக் காங்கிரசு கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4][5]

1956 இல், இக்கட்சியின் தலைவர் எஸ். தொண்டமானுக்கும், செயலாளர் அசீசிற்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதால், அசீசு அக்கட்சியில் இருந்து விலகி, தேசிய தொழிலாளர் காங்கிரசு என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.

1970 இல் நாடாளுமன்றத்திற்கு நியமன உறுப்பினராக ஐக்கிய முன்னணி அரசினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்,[3] 1972 இல் புதிய அரசியலமைப்பு அறிமுகமானதை அடுத்து நியமன உறுப்பினர் முறை ஒழிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

வார்ப்புரு:இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்