காந்தி பிறந்த மண்
காந்தி பிறந்த மண் | |
---|---|
குறுந்தகடு அட்டைப்படம் | |
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
இசை | தேவா |
நடிப்பு | விஜயகாந்த் ரேவதி ரவளி ராதாரவி |
ஒளிப்பதிவு | ராஜராஜன் |
படத்தொகுப்பு | ஜி.ஜெயசந்திரன் |
விநியோகம் | தமிழன்னை கிரியேஷன்ஸ் |
வெளியீடு | 21 ஜூலை 1995 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காந்தி பிறந்த மண் (Gandhi Pirantha Mann) ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த், ரேவதி, ரவளி ஆகியோர் முதன்மை கதாபாத்திரம் ஏற்றிருந்தனர். தமிழ் பாத்திமா தயாரிப்பில், தேவா இசையமைக்க 21 ஜூலை 1995இல் வெளியானது. இத்திரைப்படம் வசூலில் தோல்வியை சந்தித்தது.[1][2][3]
கதை
ருக்மணி (ரவளி) பெரியவர் (ராதாரவி) மற்றும் நான்கு சித்தப்பாக்களின் செல்ல மகளாக வளர்கிறார். பாலு (விஜயகாந்த்) ஒரு உண்மையை மறைத்து ருக்மணியை மணமுடிக்கிறார். ஏன் ருக்மணியை கல்யாணம் செய்தார் என்கிற காரணத்தை பாலு விளக்குகிறார். பாலு தந்தையான காந்தி (விஜயகாந்த்), தாயார் லட்சுமியும் (ரேவதி) இளகிய மனம் படைத்த ஆசிரியர்கள் கிராமத்திற்கு மாற்றலாகிவருகின்றனர். காந்தியும், லட்சுமியும் பள்ளியில் நிலவும் ஜாதி அமைப்பு முறையை ஒழிப்பதில் உறுதியாக உள்ளனர். அதனால் பெரியவர் மற்றும் அவருடைய தம்பிகளுடன் மோதல் உண்டாகிறது. கடைசியில் அப்பாவியான காந்தி கொல்லப்படுகிறார்.
இப்பொழுது பாலு பெரியவர் கிராமத்தில் உள்ள ஜாதி அமைப்பை ஒழிப்பதில் உறுதியாக போராடுகிறார். என்ன நடக்கிறது என்பது மீதியுள்ள கதை.
நடிகர்கள்
|
|
பாடல்கள்
காந்தி பிறந்த மண் | |
---|---|
பாடல்கள்
| |
வெளியீடு | 1995 |
ஒலிப்பதிவு | 1995 |
இசைப் பாணி | திரைப்படப் பாடல்கள் |
நீளம் | 29:07 |
இசைத் தயாரிப்பாளர் | தேவா |
இத்திரைப்படத்திற்கு பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு தேவா இசையமைத்திருந்தார். கங்கை அமரனும், ஆர்.சுந்தர்ராஜனும் 6 பாடல்களை எழுதி 1995ஆம் ஆண்டு பாடல்கள் வெளிவந்தது.[4]
பாடல்கள் | பாடல் | பாடியவர்(கள்) | கால அளவு |
---|---|---|---|
1 | 'ஆலமரத்துல' | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:13 |
2 | 'இந்தியன் என்று' | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:52 |
3 | 'ஒட்டகத்திலே நீ' | மனோ, எஸ். ஜானகி | 5:10 |
4 | 'பட்டம் பட்டம்' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:45 |
5 | 'பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம்' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:34 |
6 | 'தலைவா நான்' | குழந்தை வேலு, எஸ். ஜானகி | 4:33 |
மேற்கோள்கள்
- ↑ "Gandhi Pirandha Mann (1995) Tamil Movie". spicyonion.com. http://spicyonion.com/movie/gandhi-pirandha-mann/. பார்த்த நாள்: 2013-06-23.
- ↑ "Gandhi Pirantha Mann - Oneindia Entertainment". entertainment.oneindia.in இம் மூலத்தில் இருந்து 2013-12-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131224105633/http://entertainment.oneindia.in/tamil/movies/gandhi-pirantha-mann.html. பார்த்த நாள்: 2013-06-23.
- ↑ "Tamil Movie News--1995 Review". groups.google.com. 1996-01-09. https://groups.google.com/d/msg/soc.culture.tamil/fwLpyN6aWTk/R4FfCjmQ3AsJ. பார்த்த நாள்: 2013-06-23.
- ↑ "MusicIndiaOnline - Gandhi Pirantha Mann(1995) Soundtrack". mio.to இம் மூலத்தில் இருந்து 2013-12-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131224094934/http://mio.to/album/29-tamil_movie_songs/43853-Gandhi_Pirantha_Mann__1995_/. பார்த்த நாள்: 2013-06-23.
வெளி இணைப்புகள்
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- 1995 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படங்கள்
- விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்
- ரேவதி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ராதாரவி நடித்த திரைப்படங்கள்
- டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- விவேக் நடித்த திரைப்படங்கள்
- சார்லி நடித்த திரைப்படங்கள்
- தலைவாசல் விஜய் நடித்த திரைப்படங்கள்