கராத்தே தியாகராஜன்
கராத்தே தியாகராஜன் | |
---|---|
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சி | |
பதவியில் அக்டோபர் 2002 – அக்டோபர் 2005 | |
முன்னவர் | மு. க. ஸ்டாலின் |
பின்வந்தவர் | மா. சுப்பிரமணியம் (அரசியல்வாதி) |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | கராத்தே தியாகராஜன் |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (1986-1996,1998-2001, 2006-2019) |
பிற அரசியல் சார்புகள் |
தமிழ் மாநில காங்கிரசு (1996-1998), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (2001-2005) |
கராத்தே தியாகராஜன் (English: Karate R. Thiagarajan) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் கராத்தே பயிற்சியாளராவார். இவர் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்துள்ளார்.
கராத்தே பயிற்றுநராக இருந்து, பல லட்சம் நபர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். இவர் கராத்தே போட்டிகளில் இந்தியாவின் முன்னாள் வாகையராவார்.[1] இவர் அகில இந்திய கராத்தே கூட்டமைப்பின் தலைவராக இருந்து பின்னர் நிதி கையாடல் தொடர்பான சர்ச்சைகளை அடுத்து பதவி விலகினார்.[2] அதன்பிறகு இந்திய கராத்தே சங்கம் (கே.ஏ.ஐ) என்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராகவும் உள்ளார்.[3]
அரசியல் வாழ்க்கை
பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளாட்சி உறுப்பினராகத் தேர்வானார். நகரத்தந்தை பதவியிலிருந்து மு. க. ஸ்டாலின் விலகிய பின்னர் 2002 முதல் 2005 வரை பொறுப்பு நகரத்தந்தையாகப் பதவி வகித்தார்.[4][5] 2001 இல் கருணாநிதி கைதிற்குக் காரணமான மேம்பாலங்கள் கட்டுமான புகாருக்குப் பின்னணியாக இருந்தவர்.[6] 2005 இல் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். ஆறு மாதக்கால தலைமறைவிற்குப் பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.[7][8] தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 27 ஜூன் 2019 இல் நீக்கப்பட்டார்.[9]
மேற்கோள்கள்
- ↑ "`Karate' Thiagarajan's distinction". தி இந்து. https://www.thehindu.com/2005/09/15/stories/2005091512162000.htm. பார்த்த நாள்: 28 June 2019.
- ↑ "Karate Thiagarajan dismissed for allegedly misappropriating funds". DNA news. 2 January 2010. http://www.dnaindia.com/sport/report-karate-thiagarajan-dismissed-for-allegedly-misappropriating-funds-1330022. பார்த்த நாள்: 6 May 2016.
- ↑ "Police raid leaves karate officials red- faced". யாகூ! செய்திகள். 21 September 2015. https://in.news.yahoo.com/police-raid-leaves-karate-officials-000000993.html. பார்த்த நாள்: 6 May 2016.
- ↑ "When civic sense got a headstart". Saptarshi Bhattacharya (தி நியூ இந்தியன் எக்சுபிரசு). 16 May 2012. http://www.newindianexpress.com/cities/chennai/article353690.ece?service=print. பார்த்த நாள்: 6 May 2016.
- ↑ "DMK members evicted en masse". தி இந்து. 1 May 2003. http://www.thehindu.com/thehindu/2003/05/01/stories/2003050107410300.htm. பார்த்த நாள்: 6 May 2016.
- ↑ "Tamil Nadu: Corporation personnel face axe in flyover scam". Kenath Jayashankar Menon (Asian Tribune). 27 May 2005. http://www.asiantribune.com/news/2005/05/27/tamil-nadu-corporation-personnel-face-axe-flyover-scam. பார்த்த நாள்: 6 May 2016.
- ↑ "Chennai Deputy Mayor expelled from AIADMK". டெக்கன் ஹெரால்டு. 15 October 2005. http://archive.deccanherald.com/deccanherald/oct152005/national19514220051014.asp. பார்த்த நாள்: 6 May 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Thiagarajan joins Congress". The Hindu. 17 April 2006. http://www.thehindu.com/todays-paper/thiagarajan-joins-congress/article3148589.ece. பார்த்த நாள்: 6 May 2016.
- ↑ "காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை!". indianexpress.com. https://tamil.indianexpress.com/tamilnadu/karate-thiagarajan-suspends-from-congress-party/. பார்த்த நாள்: 28 June 2019.