ரவளி
ரவளி | |
---|---|
பிறப்பு | சைலஜா 22 திசம்பர் 1972 குடிவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
மற்ற பெயர்கள் | ரவளி கிருஷ்ணா, அப்சரா, மைதிலி |
பணி | நடிகை, மாடல் |
செயற்பாட்டுக் காலம் | 1990–2007, 2009-தற்போது |
வாழ்க்கைத் துணை | நீலி கிருஷ்ணா[1] |
ரவளி என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். அத்துடன் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் பிற மொழியில் சுபகன்சகலு, பெல்லி சண்டடி, வினோதம் மற்றும் மர்டு ஆகிய திரைப்படங்களில் நடித்தமையின் மூலம் அறியப்படுகிறார்.[2]
திரைத்துறை
ரவளி தமிழில் பட்டத்து ராணி என்ற திரைப்படத்தின் மூலம் 1992 இல் அறிமுகமானார். இருப்பினும் விஜயகாந்த்தின் இணையாக திருமூர்த்தி என்ற படத்தில் நடித்த பின்பு தமிழின் கவனிக்கத்தக்க நடிகை ஆனார். அதன்பின்பு காந்தி பிறந்த மண், அபிமன்யு போன்ற பல படங்களில் நடித்தார். நாகலிங்கம் (திரைப்படம்) என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக சம்பள பணம் தயாரிப்பாளரிடமிருந்து ரவளிக்கு கிடைக்கவில்லை. இது தொடர்பாக விஜயகாந்த் தலைமையில் இருந்த நடிகர் சங்கத்தினை அணுகி பெற்றுக்கொண்டார்.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
ரவளி 9 மே 2007 இல் நீலி கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். [4] இத்தம்பதிதளுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். [5]
அரசியல்
ரவளி 02 மார்ச் 2009 இல் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவை ஐதராபாத்தில் சந்தித்து பேசிய பின்பு, ஊடகங்களுக்கு தெரிவித்தார்.[6]
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1990 | ஜர்ஜ்மென்ட் | மலையாளம் | ||
1991 | ஜெயபாரி | தெலுங்கு | ||
1992 | பட்டத்து ராணி (1992 திரைப்படம்) | சாந்தி | தமிழ் | |
மிஸ்டர் & மிசஸ் | மலையாளம் | |||
1994 | அலிபாபா அரடஜனு தொங்கலு | பூலான்தேவி | தெலுங்கு | |
வாடு பாவா தப்பு | மஞ்சு | தெலுங்கு | ||
1995 | ரியல் ஹீரோ | தெலுங்கு | ||
ஒரே ரிக்சா | தெலுங்கு | |||
திருமூர்த்தி (திரைப்படம்) | உமா | தமிழ் | ||
காந்தி பிறந்த மண் | ருக்மணி | தமிழ் | ||
1996 | வினோதம் | அஷ்ட லட்சுமி | தெலுங்கு | |
பெல்லி சண்டடி | கல்யாணி | தெலுங்கு | ||
அக்கா பாகுன்னாவா | தெலுங்கு | |||
ராமூதோசாடு | தெலுங்கு | |||
பெல்லலா ராஜ்யம் | தெலுங்கு | |||
ராயூடுகாரு நாயூடுகாரு | தெலுங்கு | |||
சின்னப்பாயி | தெலுங்கு | |||
தேவராகம் | குக்கூ | மலையாளம் | ||
1997 | பெரிய மனுஷன் | இந்து | தமிழ் | |
அபிமன்யு | மஞ்சு | தமிழ் | ||
புத்தம் புது பூவே | தமிழ் | |||
சின்னப்பாயி | தெலுங்கு | |||
குரால ராஜ்யம் | தெலுங்கு | |||
முடுல்ல மொகடு | தெலுங்கு | |||
பிரியமைன சிறிவரு | தெலுங்கு | |||
ராம் | தெலுங்கு | |||
சுபகன்சகலு | தெலுங்கு | |||
1998 | மர்டு | இந்தி | ||
கதிபிடி கிருஷ்ணா | கன்னடம் | |||
வீரண்ணா | கன்னடம் | |||
பிரதிஸ்டா | தெலுங்கு | |||
டாடி டாடி | ரஞ்சனி | தெலுங்கு | ||
1999 | குபேரா | ஐஸ்வர்யா | கன்னடம் | |
மறவாதே கண்மணியே | தமிழ் | |||
காலநாயகா | ஜோதி | கன்னடம் | ||
2000 | கரிசக்காட்டு பூவே | நாகமணி | தமிழ் | |
நின்னே பிரேமிஸ்தா | சிறீலட்சுமி | தெலுங்கு | ||
பில்லா ரங்கா | கன்னடம் | |||
நாகலிங்கம் | பிரியா | தமிழ் | ||
உன்னைக் கண் தேடுதே | காயத்ரி | தமிழ் | ||
2001 | ஜெய்புனா நானா கதா | கன்னடம் | ||
போர்ட் கொச்சி | மலையாளம் | |||
பிரஜா | தெய்னா | மலையாளம் | ||
2002 | படை வீட்டு அம்மன் | தமிழ் | ||
பாரதசிம்ஹா ரெட்டி | தெலுங்கு | |||
2003 | அன்புத் தொல்லை | சின்னதாயி | தமிழ் | |
அமுலு | தெலுங்கு | |||
2004 | சாந்தி சண்டீசம்' | தெலுங்கு | ||
எஸ்பி சிம்ஹா ஐபிஎஸ் | தெலுங்கு | |||
2005 | வீரண்ணா | கன்னடம் | ||
கீழு குர்ரம் | தெலுங்கு | |||
கௌதம் எஸ்எஸ்எல்சி | தெலுங்கு | |||
முல்ல கிரீதம் | தெலுங்கு | |||
மிஸ்டர் பக்ரா | கன்னடம் | |||
2006 | 47ஏ பெசன்ட் நகர் வரை | தமிழ் | ||
அஸ்ட்ரம் | தெலுங்கு | |||
ஸ்டாலின் | தெலுங்கு | |||
டென்த் கிளாஸ் | தெலுங்கு | |||
பாஸ் | தெலுங்கு | |||
2007 | சந்திரதாஸ் | தெலுங்கு | ||
2009 | லைப் ஸ்டெயில் | தெலுங்கு | ||
2011 | பில்லா தொரிகடதே பெல்லி | தெலுங்கு | ||
மாயகாடு | தெலுங்கு |
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
தலைப்பு | ஆண்டு | மொழி | குறிப்பு |
---|---|---|---|
நமோ வெங்கடேசா | 2012 | தெலுங்கு | |
சுவாதி சின்னக்குலு | 2013–தற்போது | தெலுங்கு | |
சசிரேகா பரினயம் | 2013-2016 | தெலுங்கு | |
சரவணா சமீரலு | 2013-2016 | தெலுங்கு | |
அத்தரின்டிக்கி தாரேதி | 2016-2018 | தெலுங்கு | |
வந்தாள் ஸ்ரீதேவி (தொலைக்காட்சித் தொடர்) | 2018 | தமிழ் | மீராகிருஷ்ணனுக்காக |
பொண்ணுக்கு தங்க மனசு | 2018 | தமிழ் | சித்ரா சலோனிக்காக |
அபிலாசா | 2019-2020 | தெலுங்கு |
References
- ↑ "Ravali & Neeli Krishna Wedding Function". Ragalahari.com. பார்க்கப்பட்ட நாள் 2018-04-22.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-24. பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
- ↑ "Hot New". Cinematoday2.itgo.com. பார்க்கப்பட்ட நாள் 2018-04-22.
- ↑ "Ravali weds Neeli Krishna - Telugu cinema". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2018-04-22.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-24. பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
- ↑ தெலுங்கு தேசம் கட்சியில் நடிகை ரவளி- தினமலர் - மார்ச் 02,2009