உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம்
Jump to navigation
Jump to search
உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற பதினொன்றாவது படலமாகும்.
படலச் சுருக்கம்
இப்படலம் மலயத்துவசனை அழைத்த படலத்தின் தொடர்ச்சியாக வருகிறது. இப்படலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்குப் பிறகு முருகப்பெருமானை மீனாட்சியின் வயிற்றில் மகனாக பிறக்க சிவன் வேண்டுவதும், கர்ப்பமுற்ற மீனாட்சிக்கு சிறப்புற நடந்த சீமந்தமும், பின் முருகப்பெருமான் உக்கிரபாண்டியனாக அவதரித்தமையையும் விளக்கப்பட்டுள்ளது.
காண்க
ஆதாரங்கள்