தோக்கா
தமிழர்விக்கியிலிருந்து
imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 10:33, 13 சனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (→இலக்கணம்: பகுப்பு:கனகாங்கியின் ஜன்னிய இராகங்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
தோக்கா முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த காந்தாரம் (க1), பஞ்சமம் (ப1),சுத்த தைவதம் (த1),சுத்த நிசாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
| ஆரோகணம்: | ச க1 ப த1 நி1 ச |
| அவரோகணம்: | ச நி1 த1 ப க1 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர்.
"https://tamilar.wiki/w/index.php?title=தோக்கா&oldid=408593" இலிருந்து மீள்விக்கப்பட்டது