சனரஞ்சனி

தமிழர்விக்கியிலிருந்து
imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 10:27, 13 சனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (பகுப்பு:சங்கராபரணத்தின் ஜன்னிய இராகங்கள்‎)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சனரஞ்சனி இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி231 ப த2 ப நி3 ச்
அவரோகணம்: ச் த2 ப ம1 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூரண ஔடவ" இராகம் என்பர். இதன் ஆரோகணத்தில் பஞ்சமம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=சனரஞ்சனி&oldid=350220" இலிருந்து மீள்விக்கப்பட்டது