கயத்தாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>AswnBot சி Bot:Removing stub template from long stubs |
imported>TNSE SELVAMDIET NKL |
||
| வரிசை 69: | வரிசை 69: | ||
{{தூத்துக்குடி மாவட்டம்}} |
{{தூத்துக்குடி மாவட்டம்}} |
||
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
'''கயத்தாறு''' |
|||
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு ஆறு ஆகும். கயம் என்றால் ஆழமான நீர்நிலை என்று பொருள். சமவெளியில் ஆழமான நீரூற்று ஒன்றிலிருந்து இந்த ஆறு உருவாகிறது. தற்போது கயத்தாறு என்ற பெயர் ஓர் ஊரின் பெயராகவும் வழங்கப்பட்டு வருகிறது. வீரபாண்டிய கட்டபொம்மனை இந்த ஊரில்தான் தூக்கிலிட்டனர். |
|||
<ref>கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 893, 895</ref> |
|||
10:14, 17 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்
| கயத்தாறு | |
| — பேரூராட்சி — | |
| அமைவிடம் | 8°57′32″N 77°47′43″E / 8.9587558°N 77.7953053°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | விசு மகாஜன், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை | 9,497 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கயத்தாறு (ஆங்கிலம்:Kayatharu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
வரலாற்று நிகழ்வுகள்
பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்த வீரபாண்டிய கட்டபொம்மன் அக்டோபர் 16 , 1799, அன்று ஆங்கிலேயரால் இவ்வூரில் தான் தூக்கிலிடப்பட்டார்.
வீரபாண்டி கட்டபொம்மனின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவிடம் இவ்வூரில் உள்ளது. இந்த நினைவிடம் அக்டோபர் 16 1970 ஆம் ஆண்டு அன்று பத்மஸ்ரீ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் சிலை நிறுவப்பட்டு, திரு N.சஞ்சீவ ரெட்டி M.P அவர்கள் விழாத் தலைவராகவும். மற்றும் காங்கிரஸ் பெருந்தலைவர் திரு கு. காமராஜ் M.P அவர்களால் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடம் தேசிய நெடுஞ்சாலையும் உள்ளூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பில் இந்த நினைவிடம் உள்ளது.
இங்கு ஆங்கிலேயர் களால் உருவாக்கப்பட்ட பழைய விமானதளம் ஒன்று உள்ளது. பெயர்தான் பழையது ஆனால் அதன் உறுதி இன்னும் ஒரு சதவீகிதம் கூட குறையவில்லை, அரசின் பராமரிப்பு இல்லாத காரணத்தினால் நல்ல நிலையில் இல்லை.
வேளாண்மை சிறப்புகள்
சந்தைகள் : இவ்வூரில் வாரசந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை சந்தை நடைபெருகின்றது. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இடத்தில் செயல்படுகின்றது. இங்கு சமையலுக்குத் தேவையான அனைத்துக் காய் கறிகள், தானியங்கள், கனி வகைகள், மற்றும் இறைச்சி வகைகள், ஒரு பக்கமாகவும். மறுபக்கத்தில் பசுமாடுகள், ஆடு, கோழிகள், என மிருகங்கள் சார்ந்தவைகள் மற்றபகுதிகளிளும் விற்க்கப்படுகின்றது. இந்த சந்தைக்கு பக்கத்தில் உள்ள 50 கிராமங்களின் மக்கள் வருகைத்தருகின்றார்கள்.
குட்டி குளம்
இங்கு மழைக் காலங்களில் மழை நீர் இந்த நீர் நிலையில் சேமிக்கப்பட்டு விவசாயத்திற்க்காகவும் மற்றும் மேச்சல் கால் நடைகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றது.
தெழில்கள்
இங்கு பாய் தயாரிப்புடன் மிகப்பெரிய தொழில்சாலையும், இந்த வட்டாரத்திலேயே மிகப் புகழ்பெற்ற மின்சாரக் காற்றாலை உள்ளது. இதையேற்று மத்திய அரசின் ஒரு அலுவலகமும் உள்ளது. இதை முன்னால் இந்தியப் பிரதமர் திரு. வாச்பாய் அவர்கள் தொடங்கிவைத்தார்.
சமயங்கள்
இங்கு இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்க்கள் ஆகிய அனைத்து சமயத்தவர்களும் இங்கு உள்ளனர்.
படிமம்:AUM symbol, the primary (highest) name of the God as per the Vedas.svg இந்துக் கோயில்கள்
1)அகிலாண்ட நாயகி - கோதண்ட ராமேஸ்வரர் கோயில்.
2)திருமலை நாயகி - திருநீலக்கண்டேஸ்வர் கோயில். இவைகள் மன்னர்கள் ஆட்சி காலக்கட்டத்தில் எழுப்பப்பட்ட கோயில்கள் என அறியப்பட்டவைகள்.
3)கயத்தாறு ஆத்தங்கரை சுடலை மாடன் சாமி கோயில். இந்த கோவிலின் கொடைத் திருவிழா வருடாவருடம் ஓர் குறிப்பிட்ட நாள் அன்று விழா நடைபெருகின்றது.
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: தேவாலயம்
1)புனித லூர்த் மாதா தேவாலயம். இது ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும்.
2)தென்னிந்திய திருச்சபைகள் மற்றும் இதரக்குழுக்களின் தேவாலயங்களும் இங்கு உள்ளது.
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: மசூதி(பள்ளி வாசல்)
இந்த ஊரில் புகழ்பெற்ற மசூதி(பள்ளி வாசல்) ஒன்று உள்ளது இது இந்த நகரத்தின் மேற்கு திசையில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9497 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கயத்தாறு மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கயத்தாறு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)
வெளி இணைப்புகள்
கயத்தாறு
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு ஆறு ஆகும். கயம் என்றால் ஆழமான நீர்நிலை என்று பொருள். சமவெளியில் ஆழமான நீரூற்று ஒன்றிலிருந்து இந்த ஆறு உருவாகிறது. தற்போது கயத்தாறு என்ற பெயர் ஓர் ஊரின் பெயராகவும் வழங்கப்பட்டு வருகிறது. வீரபாண்டிய கட்டபொம்மனை இந்த ஊரில்தான் தூக்கிலிட்டனர்.
- ↑ கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 893, 895