வினா வெண்பா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search


வினா வெண்பா சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. உமாபதி சிவாச்சாரியாரால் 14ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இது பதின்மூன்று பாக்களை மட்டுமே கொண்டது. வினா வடிவில் அமைந்துள்ள வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஆசிரியர் தம் குருவாகிய மறைஞான சம்பந்தரை வினவுவது போலவும், அவரைப் பாராட்டுவது போலவும் பாடலிலுள்ள வினாக்கள் அமைந்துள்ளன. இதற்குத் திருவாடுதுறை நமச்சிவாய தம்பிரான் எழுதிய உரை ஒன்றும் அச்சாகியுள்ளது. இவையன்றி, சில ஏட்டுப்பிரதிகளில் காணப்படுவதாக அருணாசலம் குறிப்பிடுகிறார்.

இவற்றில் ஆசிரியர் உமாபதியார் தம் ஆசிரியர் மறைஞான சம்பந்தரை 'மருதைச் சம்பந்தா', 'கடந்தைச் சம்பந்தா' என விளித்து வினாக்களை வினவியுள்ளார்.

உசாத்துணைகள்

  • இராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
  • உமாபதி சிவாச்சாரியார், நெஞ்சுவிடு தூது பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம், மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=வினா_வெண்பா&oldid=14678" இருந்து மீள்விக்கப்பட்டது