கார் எட்டு
Jump to navigation
Jump to search
கார் எட்டு பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.
10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நக்கீரதேவ நாயனார் இதன் ஆசிரியர்.
நூலின் பெயர்
சிவபெருமானைக் கார்காலத்தோடு ஒப்பிட்டுப் பாடிய எட்டு வெண்பாக்கள் இதில் உள்ளன. எட்டு பாடல்களைக் கொண்ட நூலை ‘எட்டு’ என்றும், பத்துப் பாடல்கள் கொண்ட நூலைப் 'பத்து' என்றும், ‘பதிகம்’ என்றும் கூறுவர். இந்த வகையில் இந்த நூல் ‘காரெட்டு’ என்னும் பெயரைப் பெற்றுள்ளது. பதினெண்கீழக்கணக்கு நூல்களில் ஒன்றான ‘கார்நாற்பது’ என்பதன் பெயரோடு இதை ஒப்பிடலாம்.
பாடல் எடுத்துக்காட்டு
- பாரும் பனிவிசும்பும் பாசபதன் பல்சடையும்
- ஆரும் இருள் கீண்டு மின் விலகி ஊரும்
- அரவம் செல அஞ்சும் அஞ்சொலார் காண்பர்
- கரவிந்த மென்பாரக் கார்.
- இந்தப் பாடலின் செய்தி
- கார் காலத்தில் பாரும் விசும்பும் இருண்டது. அந்த இருளைக் கிளறிக்கொண்டு ஒரு மின்னல். அந்த மின்னல் போல் சிவபெருமானின் செஞ்சடை தோன்றியது.
காலம் கணித்த கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005