சிவபெருமான் திருஅந்தாதி
Jump to navigation
Jump to search
சிவபெருமான் திருஅந்தாதி என்னும் பெயரில் இரண்டு நூல்கள் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன.
96 வகையான சிற்றிலக்கியங்களில் அந்தாதி என்பதும் ஒன்று.
அந்தம் ஆதியாக வரும்படி தொடுத்துப் பாடுவது அந்தாதி
இரண்டு நூல்களிலுமே முதல் பாடல் ‘ஒன்று’ எனத் தொடங்குகிறது. கடைசிப்பாடல் ‘ஒன்று’ என முடிகிறது. அடுத்தடுத்த பாடல்களில் அந்தாதித்தொடை வருவதோடு மட்டுமல்லாமல், நூலின் முதலும், முடிவும் ஒன்றிவரத் தொடுப்பதுதான் அந்தாதி.
சிவபெருமான் புகழ் 100 வெண்பாக்களில் அந்தாதியாக இந்த நூல்களில் தொடுக்கப்பட்டுள்ளன.
- ஒன்று கபிலதேவ நாயனார் பாடியது.
- மற்றொன்று பரணதேவ நாயனார் பாடியது.
இருவருமே 10ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் வாழ்ந்தவர்கள்.
கபிலபரணர் என்னும் தொடர் இவர்களையே குறிக்கும்.
சங்க காலக் கபிலரையும் பரணரையும் குறிக்காது.
கபிலதேவ நாயனார் அந்தாதி
- ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந்து
- ஒன்றும் மனிதர் உயிரைஉண்டு – ஒன்றும்
- மதியாத கூற்றுகைத்த சேவடியான் வாய்ந்த
- மதியான் இடப்பக்கம் மால். [1]
இது முதல் பாடல்.
- நூறான் பயன்நாட்டின் நூறு மலர்சொரிந்து
- நூறா நெடிவதனின் மிக்கதே – நூறா
- உடையான் பரித்தெரி உத்தமனை வெள்ளேறு
- உடையானைப் பாடலால் ஒன்று.[2]
இது இறுதிப் பாடல்.
பரணதேவ நாயனார் அந்தாதி
- ஒன்றுஉரைப்பீர் போலப் பலஉரைத்திட்டு ஓயாதே
- ஒன்றுஉரைப்பீர் ஆயின் உறுதுணையாம் – ஒன்றுஉரைத்து
- பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுஉழலும்
- பேரரவம் பூணும் பிரான்.[3]
இது நூலின் தொடக்கப் பாடல்.
- உறுமும்தம் முன்னே உடையாமல் இன்னம்
- உறுமும்தம் முன்னே உடையாமல் – உறுமும்தம்
- ஓர்ஐந்து உரைத்துஉற்று உணர்வோடு இருந்துஒன்றை
- ஓர்ஐந்தும் காக்கவல்லார்க்கு ஒன்று.[4]
இது நூலின் இறுதிப் பாடல்.
காலம் கணித்த கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
அடிக்குறிப்பு
- ↑ கூற்றுவனை உதைத்த சேவடியும், மதியமும் கொண்டுள்ள சிவனின் இடப்பக்கம் திருமால் அம்மைக் கூறாக இருக்கிறான்.
- ↑ இந்த நூலின் பயனை நிலைநாட்டிக்கூறினால், சிவனை 100 மலர் சொரிந்து வணங்கவேண்டும். நூறு என்னும் அணிந்துகொள்வது அதனினும் மேலானது.
- ↑ ஒன்று சொல்வது போலப் பலவற்றை ஓயாது சொல்கிறீர்கள். ஒன்றே ஒன்று சொல்வீராயின் அது பெருந்துணையாக அமையும். அந்த ஒன்று ‘சிவன்’
- ↑ ஐம்புலன்களும் உறுமி உடைவதற்கு முன், தன் பிணத்துக்கு முன் உறுமிமேளம் முழங்குவதற்கு முன், ஐம்புலன்களும் உறுமிக்கொண்டு உணர்வோடு இருக்கும்போதே, ஐம்புலன்களையும் காத்துச் சிவன்பால் ஒன்றுக.