திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் பெயரில் பதினோராம் திருமுறையில் இரண்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன.

96 வகையான சிற்றிலக்கியங்களில் ‘மறம்’ என்பதும் ஒன்று.

மறம் பற்றிய நூல்கள்

எதிரிகளை வெல்வது ஒருவகை மறம். மன்ன்னுக்கு என் மகளைத் தரமாட்டேன் என முழங்குவது மற்றொரு மறம். இந்த நூல் காட்டுவது திருமறம்.

பாரி முல்லைக்குத் தேர் தந்தது, பேகன் மயிலுக்குப் போர்வை தந்தது ஆகியவற்றைக் ‘கொடைமடம்’ என்றனர். கண்ணப்பன் தன் கண்ணைத் தானே பிடுங்கித் தந்தது ‘கொடைமறம்’. இந்தக் கொடைமறத்தைத் திருமறமாக்குகிறது இந்த நூல்.

கண்ணப்பன் கதை

பொத்தம்பி நாட்டு உடுப்பூரில் வாழ்ந்த வேடன் திண்ணன். வேட்டையாடிச் செல்லும் வழியில் காளத்தி மலைமேல் இருந்த சிவலிங்கத்தைக் கண்டான். பசியோடு இருக்குமே என எண்ணித் தான் வேட்டையாடிக் கொண்டுவந்த இறைச்சிகளைப் படைத்து வைத்துவிட்டுப் போய்விட்டான். வழக்கமாகப் படைக்கும் அந்தணனர் அவற்றை நீக்கிவிட்டுத் தன் சைவ உணவைப் படைத்தார். திண்ணனின் அன்பு மேலானது என்பதை அந்தணனுக்கு வெளிப்படுத்த இறைவன் விரும்பினார். சிவலிங்க்கதின் வலக்கண்ணில் குருதி ஒழுகச் செய்தார். திண்ணனின் மூலிகை மருத்துவம் பயன் தரவில்லை. தன் கண்களில் ஒன்றைப் பிடுங்கி அதன்மீது ஒட்டவைத்தான். ஒழுகிய குருதி நின்றுவிட்டது. பின் லிங்கத்தின் மற்றொரு அதேபோல் குறுதி. திண்ணன் தன் மறுகண்ணையும் பிடுங்கி அப்பினான். இறைவன் “கண்ணப்பா! என் கண் குருதி நின்றுவிட்டதைப் பார்” என்றார். கண்ணப்பன் கண் பெற்றான்.

காலம் கணித்த கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005