கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கோயில் திருப்பண்ணியார் விருத்தம் என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

விருத்தம் ஒருவகைச் சிற்றிலக்கியம்.நூலின் பெயர் 'விருத்தம்' என்று இருந்தாலும் இதில் உள்ள பாடல்கள் கட்டளைக்கலித்துறைப் பாடல்களாக உள்ளன. கட்டளைக்கலித்துறைப் பாடல்களையும் ஐந்து சீர் கொண்ட விருத்த வகையாகவே புலவர்கள் கருதியுள்ளனர்.

கோயில் திருப்பண்ணியார் விருத்தம் நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி.

காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. இராசராச சோழன் காலம். தில்லை சிவபெருமானை இந்த நூல் போற்றிப் பாடுகிறது.

கோயில்
கோயில் என்னும் சொல் சிதம்பரம் நடராசர் கோயிலைக் குறிக்கும். பட்டினத்தார் பாடிய கோயில் நான்மணிமாலை என்னும் நூலாலும் இதனை அறியலாம். (திருவரங்கம் கோயிலைப் ‘பெரியகோயில்’ எனக் குறிப்பிடுவது வழக்கம்)
திருப்பண்ணியார்
திருப்பண்ணியார் என்னும் சொல் கோயில் திருப்பணி பண்ணுவோரைக் குறிக்கும். கோயிலில் பூசை பண்ணுவோர் தில்லைவாழ் அந்தணர். கோயிலில் துப்புரவுப்பணி செய்வோர் கோயில் பணியாளர்கள். தானம் வழங்குவோர் கோயில் புரவலர். இருப்பண்ணியார் என்னும் சொல் இவர்கள் அனைவரையும் குறிக்கும். என்றாலும் சிறப்பு வகையால் கோயிலில் பண் பாடுவோரைக் குறிக்கும். பண் பாடுபவர் ஒருவர் கோயிலின் பெருமைகளைப் பாடுவதாக இந்த நூல் அமைந்துள்ளது.

நூல் அமைதி

இந்த நூல் 70 கட்டளைக்கலித்துறைப் பாடல்களைக் கொண்டது.

பாடல் (4)
பயில்கின்றி லேன்திறத் திறத்திரு நாமம் பனிமலர்த்தார்
முயல்கின்றி லேன்உன் திருவடிக் கேஉவப்ப முன்னுதில்லை
இயல்கின்ற நாடகச் சிற்றம் பலத்துள்எந் தாய்இங்கனே
உயர்கின்ற நான்எங்ங னேபெறு மாறுநின் ஆரருளே.[1]

காலம் கணித்த கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. தில்லைச் சிற்றம்பலத்து எந்தையே! உன் பெயரின் திறத்தை நான் பயிலவில்லை. உன் திருவடிகளில் பூவும் போட முயலவுமில்லை. இப்படிப்பட்ட நான் உன் அருளைப் பெற்று உயர்வது எங்ஙனம்?