பிரமிளா
பிரமிளா | |
---|---|
பிறப்பு | 1956 (aged 64) இந்தியா, தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி |
தேசியம் | இந்தியர், ஐக்கிய அமெரிக்கா |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1972-1990 |
வாழ்க்கைத் துணை | பால் ஸ்க்லாக்டா (திருமணம்.1993)[1] |
உறவினர்கள் | எஸ். ஏ. அசோகன் (தாயாதி) வின்சென்ட் அசோகன் (மருமகன்) |
பிரமிளா ( டி. ஏ. பிரமிளா ) என்பவர் தென்னிந்திய படங்களில் நடித்த ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 1970 மற்றும் 1980 களில் மலையாளத்தில் ஒரு முக்கிய முன்னணி நடிகையாக இருந்தார். இவர் சில கன்னட மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார். இவர் தனது கவர்ச்சியான பாத்திரங்களுக்காக புகழ் பெற்றார். 50 க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். 1970 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான "இன்ஸ்பெக்டர்" மூலம் அறிமுகமானார். 1973 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான அரங்கேற்றம் படத்தின் மூலமாக இவருக்கு பெரிய முன்னேற்றம் கிடைத்தது. இவர் ஒரு அமெரிக்கரை மணந்து கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்சில் குடியேறினார். இவர் ஒரு ரோமன் கத்தோலிக்கர். இவரது தாய்மொழி தமிழ் ஆகும்.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் அமல் தாஸ் மற்றும் சுசீலாவுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் இரண்டாவது மகளாகப் பிறந்தார். இவரது அண்ணன் சீசர், ஒரு தங்கையான ஸ்வீட்டி ஒரு தம்பியான பிரபு ஆகியோர் உள்ளனர். இவரது திரைப்பட வாழ்க்கைக்காக குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது. இவர் தனது ஆரம்பக் கல்வியை சென்னையின் சாரதா வித்யாலயாவில் மேற்கொண்டார். 1968 இல் வெளியான இன்ஸ்பெக்டர் திரைப்படத்தில் தனது 12 வயதில் அறிமுகமானார். இவர் நான்கு தென்னிந்திய மொழிகளில் 250 திரைப்படங்களில் நடித்தார்.
இவர் பால் ஸ்க்லாக்டாவை மணந்து கலிபோர்னியாவில் குடியேறினார். இந்த தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை.
அமெரிக்க டாலர் நோட்டுகள் அச்சடிக்கும் மத்திய அரசின் நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக 25 வருடங்கள் வேலை பார்த்து பின் ஓய்வு பெற்றார்.[2]
திரைப்படவியல்
தமிழ்
- வாழையடி வாழை (1972) - தமிழில் நடிகையாக அறிமுகம்
- அரங்கேற்றம் (1973) லலிதாவாக
- கோமாதா என் குலமாதா (1973)
- மல்லிகைப் பூ (1973)
- வள்ளி தெய்வானை (1973)
- ராதா (1973)
- சொந்தம் (1973)
- மனிதரில் மாணிக்கம் (1973)
- அன்புச் சகோதரர்கள் (1973)
- வீட்டு மாப்பிள்ளை (1973)
- தங்கப்பதக்கம் (1974) ஜகனின் மனைவி
- தாய் பாசம் (1974)
- பெண் ஒன்று கண்டேன் (1974)
- பருவகாலம் (1974)
- கை நிறைய காசு (1974)
- பிரியா விடை (1975)
- மதன மாளிகை (1976)
- வாயில்லா பூச்சி (1976)
- தேவியின் திருமணம (1977)
- பலப் பரிட்சை (1977)
- புனித அந்தோணியார் (1977)
- உன்னை சுற்றும் உலகம் (1977)
- சதுரங்கம் (1978)
- பாவத்தின் சம்பளம் (1978)
- தங்க ரங்கன் (1978)
- உள்ளத்தில் குழந்தையடி (1978)
- ஸ்ரீ காஞ்சி காமாட்சி (1978)
- மக்கள் குரல் (1978)
- கவரிமான் (1979)
- தேவதை (1979)
- ஜெயா நீ ஜெயிச்சிட்டே (1979)
- வேதனை தேடிய மான் (1980)
- ரத்தபாசம் (1980)
- 47 நாட்கள் (1983)
- வில்லியனூர் மாதா (1983)
- சூரக்கோட்டை சிங்கக்குட்டி (1983)
- ராஜதந்திரம் (1984)
- பௌர்ணமி அலைகள் (1985)
- கெட்டிமேளம் (1985)
- நாம் (1985)
- இரவுப் பூக்கள் (1986)
- ஜல்லிக்கட்டு (1987)
- காவலன் அவன் கோவலன் (1987)
- என் தங்கை கல்யாணி (1988)
- அத்தைமடி மெத்தையடி (1989)
- முத்தலையம்மா (1990)
மலையாளம் / தெலுங்கு
- நிஜம் செப்பித்தே நம்மாரு (1973)
- ஜீவித ரங்கமு (1974)
- இன்டி கோடலு (1974)
- ஆஸ்திக் கோசம் (1975)
- 47 ரோஜுலு (1981)
- பலந்தி புலி (1984) பார்வதி
- பிரேம சாம்ராட் (1987)
- டிரைவர் பாபு (1986)
கன்னடம்
- அண்ணா அத்திகே (1974)
- நாககன்யே (1975)
- தாயிகிந்த தேவரில்லா (1977)
- பராசங்கட கெண்டெதிம்மா (1978)
- தாகா (1979)
- பக்த சிரியாலா (1980)
- பக்த ஞானதேவா (1982)
- அன்வேஷேனே (1983)
குறிப்புகள்
- ↑ https://www.mangalam.com/news/detail/430345-latest-news-prameela-opens-up.html
- ↑ "அமெரிக்காவில் 25 வருடம் செக்யூரிட்டியாக பணிபுரிந்தேன் - அரங்கேற்றம் நடிகை பிரமிளா பேட்டி". மாலை மலர். 11 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 30 மே 2021.