குலசேகரன்பட்டினம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குலசேகரபட்டினம்
குலசேகரபட்டினம்
இருப்பிடம்: குலசேகரபட்டினம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°24′00″N 78°03′00″E / 8.400000°N 78.050000°E / 8.400000; 78.050000Coordinates: 8°24′00″N 78°03′00″E / 8.400000°N 78.050000°E / 8.400000; 78.050000
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் திருச்செந்தூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

குலசேகர பட்டிணம் (Kulasekharapatnam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், உடன்குடி ஊராட்சி ஒன்றியம், குலசேகரன்பட்டினம் ஊராட்சியில் மன்னார் வளைகுடா கடற்கரையில் அமைந்த ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூரில் புகழ்பெற்ற முத்தாரம்மன் கோயில் உள்ளது. மேலும் இவ்வூரில் இஸ்ரோவின் இராக்கெட் ஏவுதளம் அமையவுள்ளது.

அமைவிடம்

திருச்செந்தூர் - கன்னியாகுமரி செல்லும் சாலையில் அமைந்த குலசேகரன்பட்டினம் உடன்குடிக்கு கிழக்கே 5 கிமீ தொலைவிலும், திருச்செந்தூருக்கு தெற்கே 18 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடகிழக்கே 80 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

தொழில்கள்

இங்கு கடல் மீன் பிடித்தலே முக்கியத் தொழில். இங்கு புதிய அனல் மின் நிலையம் ஒன்று கட்டப்பட்டுகிறது. 760 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தினில் இது கட்டப்படுகிறது தமிழ் நாடு மின்சார வாரியமும், பாரத மிகு மின் நிறுவனமும் (பெல்) இணைந்து 2x800 மெகாவாட் மிக உய்ய அனல் மின் திட்டம் ஒன்றை, உடன்குடி பவர் கார்ப்பரேசன் லிட் (Udangudi Power Corporation Ltd) என்ற பெயரில் உடன்குடி கிராம எல்லைக்குட்பட்டு, குலசேகரபட்டிணத்தின் நுழைவில் அமைக்கப்படவுள்ளது. ஆரம்ப வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. திட்ட மதிப்பீடு ரூ.8694 கோடி; முடிவடைந்து பயனுக்கு வரும் காலம் 2015. இதற்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையம் ஒன்றும் இங்கு கட்டப்படவுள்ளது. இந்த நீரைக் கொண்டு இயந்திரங்கள் குளிர்விக்கப்படும். மேலும் இந்த மின் நிலையம் நிலக்கரியின் எரி சக்தியால் இயங்கப் படவுள்ளதால், கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட்டு அனல் மின் நிலையத்திற்கு கன்வேயர் பெல்ட்டுகள் மூலம் கொண்டு வர திட்டம். இதற்காக கடலுக்குள் 7 கி.மீ தொலைவில் ஒரு நிலக்கரி கப்பல்துறை கட்டப்படவுள்ளது. ராட்சத மின் இயந்திரங்கள் பெல் நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்டுக் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எந்த ஆபத்துமில்லை என திட்ட அறிக்கைகள் கூறுகின்றன.

ராக்கெட் ஏவுதளம்

சதீஸ் தவான் விண்வெளி மையம் அமைந்த ஸ்ரீஹரிக்கோட்டாவை விட குலசேகரன்பட்டினம் நிலநடுக் கோட்டிற்கு அருகில் இருப்பதால் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல தரப்பினர் இந்திய நடுவண் அரசை வற்புறுத்தி வருகின்றனர்.[3][4] தற்போது இஸ்ரோ நிறுவனம் குலசேகரன்பட்டினத்தின் இராக்கெட் ஏவுதளம் அமைக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.[5][6] குலசேகரன்பட்டினத்தின் கடற்கரையை ஒட்டியப் பகுதியில் விண்வெளியில் ஏவுகணை ஏவும் தளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அதற்கான நிலம் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

ஏவுகணை தளத்திற்கு நிலம் எடுப்பு

தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை நிலம் எடுப்பு அதிகாரிகள் மூலம் திருச்செந்தூர் வட்டம், உடன்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாதவன்குறிச்சி ஊராட்சி, செட்டியாபத்து ஊராட்சி மற்றும் சாத்தான்குளம் வட்டத்திற்குட்பட்ட பள்ளக்குறிச்சி ஊராட்சி, படுக்கபத்து ஊராட்சி ஆகிய ஊராட்சிகளிலிருந்து 2,233 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. மேலும் குலசேகரன்பட்டினம் அருகே கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் நிலம் எடுக்கப்பட்டு, கையகப்படுத்தப்பட்டு நிலங்கள் அனைத்தும் இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.[7]

கோயில்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. ISRO’s second satellite launch pad to come up in Tamil Nadu
  4. குலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு?
  5. Govt may set up new rocket launch pad near Kulasekarapattinam in Tamil Nadu
  6. Why Thoothukudi was chosen as ISRO’s second spaceport
  7. குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்

வெளி இணைப்புகள்

Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வரும்.,
குலசேகரபட்டினம்
என்பதின் ஊடகங்கள் Wikimedia-விலும் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=குலசேகரன்பட்டினம்&oldid=42455" இருந்து மீள்விக்கப்பட்டது