கருப்பு சுப்பையா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கருப்பு சுப்பையா
பிறப்புஎம். சுப்பையா
திருமங்கலம்
மதுரை
தமிழ்நாடு
இறப்பு1997 [1]
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்சுப்பையா, மொட்டை சுப்பையா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1962-1997

கருப்பு சுப்பையா (Karuppu Subbiah) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 300 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் சிறு வேடங்களிலும் நடித்தார். இவருக்கு 'மொட்டை' சுப்பையா என்ற மற்றொரு பெயரும் உண்டு.[2] நடிகர் கவுண்டமணியுடன் நடித்த நகைச்சுவை வேடங்களுக்காக இவர் குறிப்பிடப்படுகிறார். 1960 கள் மற்றும் 1970 களில் சிவாஜி கணேசனின் பெரும்பாலான படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். மேலும், 1980 கள் மற்றும் 1990 களில் நகைச்சுவை வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் படம் 1962 இல் வெளிவந்த இந்திரா என் செல்வம் ஆகும். ஜம்பலகிடி பம்பா என்ற வசனத்துக்காக இவர் நன்கு அறியப்பட்டவர்.[3]

திரைப்படவியல்

இது ஒரு பகுதி திரைப்படவியல் ஆகும். நீங்கள் இதை விரிவாக்கலாம்.

1960 கள்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1961 குமுதம் பெரியசாமி அறிமுக திரைப்படம் / சுப்பையா என குறிக்கபட்டுள்ளது
1962 இந்திரா என் செல்வம்
1964 பச்சை விளக்கு கரீம்
1965 பழனி
1965 அன்புக்கரங்கள்
1966 மகாகவி காளிதாஸ் கவிஞர்
1969 அன்பளிப்பு

1970 கள்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1970 வியட்நாம் வீடு வீட்டுவேலைகாரர் சுப்பையா என்று குறிப்பிடப்பட்டுள்ளது
1970 அனாதை ஆனந்தன்
1970 ராமன் எத்தனை ராமனடி
1970 சொர்க்கம்
1970 எங்கள் தங்கம்
1971 முகமது பின் துக்ளக்
1972 இதோ எந்தன் தெய்வம்
1972 ஜக்கம்மா நட்டாமை 'மொட்டை' சுப்பையா என்று குறிப்பிடப்பட்டுள்ளது
1973 சொந்தம்
1974 அவளுக்கு நிகர் அவளே
1974 தீர்க்கசுமங்கலி
1974 தாய்
1976 சத்யம்
1976 எதற்கும் துணிந்தவன் 'மொட்டை' சுப்பையா என்று குறிப்பிடப்பட்டுள்ளது
1979 ரோசாப்பூ ரவிக்கைக்காரி
1979 சக்களத்தி

1980 கள்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1980 வண்டிச்சக்கரம்
1980 இளமைக்கோலம்
1980 தூரத்து இடிமுழக்கம்
1982 ஆயிரம் முத்தங்கள்
1983 இமைகள் 'மொட்டை' சுப்பையா என்று குறிப்பிடப்பட்டுள்ளது
1983 சரணாலயம்
1985 ஆகாயத் தாமரைகள் 'கருப்பு' சுப்பையா என்று குறிப்பிடப்பட்டுள்ளது
1985 கீதாஞ்சலி குதிரை உரிமையாளர்
1986 கண்ணத் தொறக்கணும் சாமி
1986 கரிமேடு கருவாயன் கான்ஸ்டபிள்
1986 ஓரு இனிய உதயம்
1986 ரசிகன் ஓரு ரசிகை
1986 மரகத வீணை
1987 நினைவே ஒரு சங்கீதம்
1987 குடும்பம் ஓரு கோயில்
1987 உழவன் மகன்
1987 மண்ணுக்குள் வைரம்
1988 செந்தூரப்பூவே
1988 நேத்திஅடி கருப்பு
1989 என்னெப் பெத்த ராசா
1989 தங்கமான ராசா

1990 கள்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
1990 புதுப்பாட்டு
1990 நம்ம ஊரு பூவாத்தா
1990 சேலம் விஷ்ணு
1991 நாடு அதை நாடு
1991 ஊரெல்லாம் உன் பாட்டு
1991 மரிக்கொழுந்து
1992 பட்டத்து ராணி ரிக்சா ஓட்டுநர்
1992 அபிராமி
1992 சோலையம்மா மாரிமுத்து
1992 பெரிய கவுண்டர் பொண்ணு
1992 மகுடம் அழகுமணியின் மாமா
1992 நட்சத்திர நாயகன்
1992 வில்லுப்பாட்டுக்காரன்
1993 மூன்றாவது கண்
1993 ராக்காயி கோயில்
1993 ராஜதுரை
1993 மறவன்
1993 உள்ளே வெளியே
1993 கட்டப்பொம்மன்
1994 வரவு எட்டணா செலவு பத்தணா
1994 புதிய மன்னர்கள்
1994 வாங்க பார்ட்னர் வாங்க
1994 சிந்துநதிப் பூ
1994 மணி ரத்னம்
1994 ஜல்லிக்கட்டுக்காளை ஜம்பலக்கிடி பம்பா
1994 பெரிய மருது
1995 நீலக்குயில்
1995 என் பொண்டாட்டி நல்லவ
1995 ராஜா எங்க ராஜா
1995 தமிழச்சி
1995 வாரார் சண்டியர்
1995 முறை மாப்பிள்ளை
1996 அருவா வேலு
1996 கோயமுத்தூர் மாப்ளே
1996 உள்ளத்தை அள்ளித்தா
1996 கட்டபஞ்சாயத்து
1996 விஸ்வநாத்
1996 புது நிலவு
1996 அவதார புருஷன்
1996 திரும்பிப்பார்
1997 தாலி புதுசு
1997 சாம்ராட்
1997 தெம்மாங்கு பாட்டுக்காரன்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கருப்பு_சுப்பையா&oldid=21609" இருந்து மீள்விக்கப்பட்டது