சாம்ராட் (1997 திரைப்படம்)
சாம்ராட் | |
---|---|
இயக்கம் | சி. தினகரன் |
தயாரிப்பு | லட்சுமிகரண் |
கதை | சி. தினகரன் |
மூலக்கதை | ஏ கிஸ் பிபோர் டையிங் (நாவல்) படைத்தவர் இரா லெவின் |
இசை | மனோஜ் சரண் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | எஸ். ராஜசேகரன் |
படத்தொகுப்பு | லான்சி-மோகன் |
கலையகம் | லட்சுமிகரண் என்டர்ப்ரைசஸ் |
வெளியீடு | அக்டோபர் 10, 1997 |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சாம்ராட் 1997 ஆம் ஆண்டு ராம்கி மற்றும் வினிதா நடிப்பில், சி. தினகரன் இயக்கத்தில்,லட்சுமிகுமார் தயாரிப்பில், மனோஜ் சரண் இசையில் வெளியான தமிழ் திரைப்படம். இரா லெவின் எழுதிய எ கிஸ் பிஃபோர் டையிங் என்ற நாவலைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது[1][2][3][4].
கதைச்சுருக்கம்
அருக்காணியின் (வாசுகி) கணவர் (ஆர். சுந்தர்ராஜன்). அருக்காணியின் தொலைந்துபோன சிறுவயது தம்பியாக அறிமுகமாகி கிராமத்திலுள்ள அவள் வீட்டிற்கு வருகிறான் அசோக் (ராம்கி). அந்த ஊரின் பணக்கார மனிதரான சுந்தரின் (மோகன் நடராஜன்) மகள் தமயந்தி (ருக்மா). அசோக்கும் தமயந்தியும் காதலிக்கிறார்கள். தமயந்திக்கு பணக்கார மாப்பிளையோடு திருமண ஏற்பாடு செய்கிறார். அசோக்கைத் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்யும் தமயந்தியின் கழுத்தில் அக்கிராமத்துக் கோயிலில் வைத்துத் தாலி கட்டுகிறான். அதன்பின் அவனே கட்டாயப்படுத்தி அந்தத் தாலியைக் கழட்டுகிறான். இதை ஒளிப்பதிவு செய்து அதை சுந்தருக்கு அனுப்புகிறான் அசோக். சுந்தரைத் தொலைபேசியில் தொடர்புகொள்ளும் அசோக் "இது தொடரும்" என்று எச்சரிக்கிறான். மனநிலை பாதிக்கப்படும் தமயந்தி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள்.
நகரத்திற்குத் திரும்பும் அசோக் தன் பெயரை சாம்ராட் என்று மாற்றிக்கொள்கிறான். காவலர் பயிற்சிப்பள்ளியில் பயிலும் சுந்தரின் இரண்டாவது மகள் சந்திரமுகியைச் (வினிதா) சந்திக்கிறான். இருவரும் காதலிக்கிறார்கள். பயிற்சி முடித்துக் காவலராக பணியேற்கும் சந்திரமுகி தன் அக்கா மனநிலை பாதிக்கப்படக் காரணமான அசோக்கைத் தேடிக்கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்கிறாள். அவளுடன் கூடவே இருக்கும் அசோக் அவளுக்குத் தேவையான சாட்சிகள் ஒவ்வொருவரையும் கொல்கிறான். மனநிலை பாதிப்பிலிருந்து குணமடையும் தமயந்தியையும் கொல்கிறான்.
சாம்ராட்தான் அசோக் என்று சந்திரமுகி சந்தேகம் கொள்கிறாள். அவனைப் பிடிக்கத் திட்டமிடுகிறான். அவளின் திட்டத்தை அறியும் அசோக் அவளையும் சுந்தரையும் கடத்துகிறான். தான் சுந்தரையும் அவன் குடும்பத்தையும் பழிவாங்குவதற்கான காரணத்தைக் கூறுகிறான். சாம்ராட்டின் தாய், தந்தையரைக் கொன்று அவனை அனாதையாக்கியவன் சுந்தர். அதற்குப் பழிதீர்க்க இப்போது இருவரையும் கொல்லப் போவதாக சொல்கிறான். காவல்துறை அங்கு வர அப்போது ஏற்படும் சண்டையில் சுந்தரைக் கொன்று இறக்கிறான் சாம்ராட்.
நடிகர்கள்
- ராம்கி - சாம்ராட் / அசோக்
- வினிதா - சந்திரமுகி
- ருக்மா - தமயந்தி
- மோகன் நடராஜன் - சுந்தர்
- ஆர். சுந்தர்ராஜன்
- தலைவாசல் விஜய் - சாம்ராட்டின் தந்தை
- சபிதா ஆனந்த் - சாம்ராட்டின் தாய்
- வாசுகி - அருக்காணி
- ராஜசேகர் - மருத்துவர் இலியாஸ்
- வீர பாண்டியன் - காளிதாஸ்
- எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
- விசித்திரா
- ஜோதி மீனா
இசை
படத்தின் இசையமைப்பாளர் மனோஜ் சரண். பாடலாசிரியர்கள் முத்துலிங்கம், பிறைசூடன் மற்றும் சி. தினகரன்.
வ.எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | பூவே | சிந்து | 3:56 |
2 | வா வாத்தியாரே | மனோ, அனுராதா ஸ்ரீராம் | 4:35 |
3 | ஜீபூம்பா | சுரேஷ் பீட்டர்ஸ், வாசு, சுவர்ணலதா | 4:35 |
4 | தாயே என் ஜீவனே | சந்திரபோஸ் | 2:14 |
5 | ஓ ஓ ஓ ஓ | சிந்து | 1:13 |
மேற்கோள்கள்
- ↑ "சாம்ராட்". http://spicyonion.com/movie/samrat/.
- ↑ "சாம்ராட்" இம் மூலத்தில் இருந்து 2010-02-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100212074335/http://www.jointscene.com/movies/Kollywood/Samrat/7768.
- ↑ "சாம்ராட்" இம் மூலத்தில் இருந்து 2004-11-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041118132848/http://www.cinesouth.com/cgi-bin/filmography/allCast.cgi?id=2079.
- ↑ "சாம்ராட்". http://cinematoday2.itgo.com/Hot%20News1%20.htm.