அச்சமில்லை கோபி
அச்சமில்லை கோபி | |
---|---|
பிறப்பு | வி. கோபாலகிருஷ்ணன் 9 மே 1955 |
மற்ற பெயர்கள் | கதிர்மணி கோபி அச்சமில்லை கோபி |
பணி | திரைப்பட நடிகர், பாடகர், நடகவியலாளர், பின்னணி குரல் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1975–தற்பொது வரை |
வாழ்க்கைத் துணை | சோபனா கோபி |
பிள்ளைகள் | ஐஸ்வர்யா, அஜிதா கோபால் |
கோபாலகிருஷ்ணன் (பிறப்பு 9 மே 1955), தொழில் ரீதியாக அச்சமிலை கோபி என்று அழைக்கப்படுபவர், ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர், பாடகர், நாடக ஆசிரியர், பின்னணி குரல் கலைஞர் ஆவார். இவர் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார், மேலும் பல மொழிகளில் பல்வேறு திரைப்பட நடிகர்களுக்காகவும் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவர் ஒரு பாடகர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக "கோபி மெலடிஸ்" என்ற இசைக்குழுவை வைத்திருக்கிறார். அதன்மூலம் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். இவர் பாடகர் வாணி ஜெய்ராமின் மருமகனும் ஆவார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் 1,000 க்கும் மேற்பட்ட தொலைப் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களிலும் பணியாற்றியுள்ளார்.
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாநில அரசு வெளியீடுக்காக பல குறும்படங்களை இவர் செய்துள்ளார். மேலும் 1998 ஆம் ஆண்டில் தமிழக அரசால் வழங்கபட்ட டாக்டர் மால்கம் ஆதிசேசையா விருதையும் பெற்றுள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்
இவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்தார். இவரது பெற்றோர், ஓய்வு பெற்ற தொடருந்து அதிகாரி, திரு எம் வெங்கட்ராமன், திருமதி மீனாட்சி ஆவர். கலை, கலாச்சாரத்துடனான ஈடுபாடு கோபாலகிருஷ்ணனனுக்கு குழந்தை பருவத்திலிருந்தே தொடங்கியது.
சிக்கில் சகோதரிகள், மாலா சந்திரசேகர், வீணைப் பண்டிதர் பிச்சுமணி, வாணி ஜெயராம் போன்றோர் இவரது உறவினர்களாக இருந்ததால், இவர் பள்ளி நாட்களிலிருந்தே நாடகம், இசை போன்றவற்றில் இயல்பான ஆர்வம் கொண்டிருந்தார்.
இசை, நாடகத்தின் மீதான இவரது ஆர்வம் வயதாகவயதாக வளர்ந்து வந்தது.
திரைப்படவியல்
நடிகராக
- படங்கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1981 | தில்லு முல்லு | ||
1984 | அச்சமில்லை அச்சமில்லை | பலவேசம் | |
1985 | தவம் | ||
1985 | படிக்காத பண்ணையார் | பண்ணையாரின் மகன் | |
1985 | ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது | ||
1986 | மறக்கமாட்டேன் | ||
1987 | வேலைக்காரன் | கோவ்ஸல்யாவின் சகோதரர் | |
1987 | புதியவன் | ||
1987 | இவர்கள் இந்தியர்கள் | ||
1988 | ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் | ||
1988 | நல்லவன் | ||
1988 | பார்த்தால் பசு | ||
1988 | கைகொடுப்பாள் கற்பகாம்பாள் | ||
1988 | காலையும் நீயே மாலையும் நீயே | ||
1989 | அத்தைமடி மெத்தையடி | ||
1989 | ஆவதெல்லாம் பெண்ணாலே | ||
1990 | வேடிக்கை என் வாடிக்கை | ||
1990 | வரவு நல்ல உறவு | ||
1990 | பணக்காரன் | ||
1990 | 13-ம் நம்பர் வீடு | முத்து | |
1990 | அதிசயப் பிறவி | ||
1991 | இதய வாசல் | முரளி | |
1991 | மறுபக்கம் | ||
1991 | வழக்கு மூலம் | ||
1993 | இனியராஜா | ||
2003 | புன்னகை பூவே | ||
2006 | வஞ்சகன் | வழக்கறிஞர் | |
2007 | நீ நான் நிலா | நிலாவின் தந்தை |
- தொலைக்காட்சி
- அக்சயா
- எங்கே பிராமணன்
- வண்ணக் கோலங்கள்
- மாங்கல்யம்
- படங்கள்
நடிகர் | படம் | குறிப்புகள் |
---|---|---|
ரவீந்திரன் | பொய்க்கால் குதிரை (1983) | |
கோவிந்தா | ராக்கம்மா கையத்தட்டு (1989) | |
ரகுமான் | புரியத புதிர் (1990), ஆரத்தி எடுங்கடி (1990), பட்டிக்காட்டான் (1990) பட்டணம்தான் போகலாமடி (1990) சீதா (1990) தம்பி பொண்டாட்டி (1992), மாப்பிள்ளை வந்தாச்சு (1992), உடன் பிறப்பு (1993), கருப்பு வெள்ளை (1993) பாட்டு பாடவா (1995), கல்கி (1996) நினைக்காத நாளில்லை (2001) |
|
வெங்கடேஷ் | கூலி நம்பர் 1 (1991), முதலமைச்சர் ஜெயந்தி (1991) எங்க ஊர் சிங்கம் (1996), கல்லூரி கலாட்டா (1997) |
|
அருண் பாண்டியன் | அதிகாரி (1991) | |
பிரமோத் | ஜென்ம நட்சத்திரம் (1991) | |
ஜெகதீஷ் | கஸ்தூரி மஞ்சள் (1992) | |
ராஜபிரபு | சின்னப் பூவைக் கிள்ளாதே (1992) | |
ஆனந்த் | நான் பேச நினைப்பதெல்லாம் (1993) | |
ஜெகபதி பாபு | போக்கிரி காதலன் (1994) | |
சுரேஷ் கோபி | திரு. தேவா (1995), தி கிங் (1995) நரசிம்ம நாயக்கர் (2001) |
|
தேவராஜ் | சர்கிள் இன்ஸ்பெக்டர் (1996) | |
அனுபம் கெர் | விஐபி (1997) | |
நாகார்ஜுனா | ஆட்டோக்காரன் (1998) சத்ரிய தர்மம் (1999) |
|
அர்ஜுன் | அர்ஜுனா (1998) | |
மனோஜ் கே. ஜெயன் | விளையாட்டு (2002) | |
நசிருதீன் ஷா | கிரிசு (2006) | |
சரண்ராஜ் | வேல் (2007) | |
சோப்ராஜ் | லேடி டைகர் (2010) | |
நாசர் | இனி ஓரு விதி செய்வோம் (2014) |
- தொலைக்காட்சி
நடிகர் | தொடர் | குறிப்புகள் |
---|---|---|
ஸ்ரீதர் | சஹானா | |
சுபலேகா சுதாகர் | சித்தி , கோலங்கள் , தென்றல் மாதவி இளவரசி பிரியமானவள் |
|
ஸ்ரீநாத் | தியாகம் |
குறிப்புகள்
- "V.Gopalakrishnan (a.k.a) Achamillai Gopi | Official Site of South Indian Artists Association, Nadigar Sangam, Tamil Nadigar Sangam". www.nadigarsangam.org. பார்க்கப்பட்ட நாள் 5 May 2017.
- "Achamillai Gopi on Moviebuff.com". www.moviebuff.com. பார்க்கப்பட்ட நாள் 5 May 2017.
- PMDStyles. "achamillai gopi – Male Artists". www.tamilstar.com. பார்க்கப்பட்ட நாள் 5 May 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
- "Tamil Supporting Actor Achamillai Gopi | Nettv4u". http://www.nettv4u.com/celebrity/tamil/supporting-actor/achamillai-gopi.
- "Achamillai Gopi Profile | CineBee App". CineBee. பார்க்கப்பட்ட நாள் 5 May 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
- chennai. "Tamil Actors Film Cine Address Contact Information Contacts Profile Movies Acted Reviews Previews Gallery". www.moviesupdated.com. Archived from the original on 11 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 7 May 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)