புன்னகை பூவே
| புன்னகை பூவே | |
|---|---|
| இயக்கம் | சபாபதி தட்சிணாமூர்த்தி |
| தயாரிப்பு | கலைப்புலி எஸ். தாணு |
| திரைக்கதை | டி. சபாபதி |
| இசை | யுவன் சங்கர் ராஜா |
| நடிப்பு | நந்தா ரேகா வேதவியாஸ் காவேரி வடிவேலு (நடிகர்) |
| ஒளிப்பதிவு | சுரேஷ் தேவன் |
| படத்தொகுப்பு | மு. காசி விசுவநாதன் |
| கலையகம் | வி. கிரியேசன்ஸ் |
| வெளியீடு | 20 ஏப்ரல் 2003 |
| ஓட்டம் | 140 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
புன்னகை பூவே (Punnagai Poove) என்பது 2003 ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். என். ஆர். மனோகர் எழுதி, சபாபதி தட்சிணாமூர்த்தி இயக்கிய இப்படத்தில் மௌனம் பேசியதே புகழ் நந்தா, புதுமுகம் ரேகா வேதவியாஸ், காவேரி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க வடிவேலு, செந்தில், எம். எஸ் .விஸ்வநாதன் ஆகியோர் பிற துணை வேடங்களில் நடிதுள்ளனர். கமல்ஹாசனின் முன்னாள் மனைவியும், பாலிவுட் நடிகையுமான சரிகா, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் வழியாக மீண்டும் நடிக்க வந்தார். மேலும் இந்த படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றினர்.[1][2]
நடிகர்கள்
- நந்தா - வெங்கடராமன் (வெங்கட்)
- ரேகா வேதவியாஸ் - மீரா
- காவேரி - நித்தியா
- வடிவேலு (நடிகர்) - ஆறுமுகம்
- ம. சு. விசுவநாதன் - சச்சிதானந்தன்
- செந்தில்
- அச்சமில்லை கோபி
- சார்லி சுதாகர்
- அனு மோகன்
- முத்துக்காளை
- தியாகு - வட்டிக்குப் பணம் கொடுப்பவர்
- யுவன் சங்கர் ராஜா (கௌரவத் தோற்றத்தில்)
- பிரேம்ஜி அமரன் (கௌரவத் தோற்றத்தில்)
- சரிகா (சிறப்புத் தோற்றத்தில்)
இசை
திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையை யுவன் சங்கர் ராஜா அமைத்தார். அவர் இயக்குநர் சபாபதி தீட்சிணாமூர்த்தியுடன் இப்படத்தின் மூலமாக முதல் முறையாக இணைந்தார். 3 நவம்பர் 2002 அன்று வெளியிடப்பட்ட பாடல் பதிவில், அறிவுமதி, பா. விஜய், பழனி பாரதி, எம். ரத்னகுமார் ஆகியோரால் எழுதப்பட்ட எட்டு பாடல்கள் உள்ளன. முதன்முறையாக, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்பட்டதின் வழியாக திரைப்படத்தில் தோன்றினார்.
| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
|---|---|---|---|---|
| 1. | "வீனஸ் வீனஸ் பெண்ணே" | தேவன், ஹரிணி | 4:42 | |
| 2. | "வானம் தூவும் பூ மழையே" | ஹரிஷ் ராகவேந்திரா, கோவை ரஞ்சனி | 4:21 | |
| 3. | "ஏனோ உயிர்மேலே" | பவதாரிணி | 2:16 | |
| 4. | "ஜாகிங் செய்யும் சீசர்" | பாப் ஷாலினி | 1:55 | |
| 5. | "திலக்காணி கானா" | கார்த்திக், திப்பு | 3:27 | |
| 6. | "சிறகாகி போனதே" | சுசித்ரா, கங்கா, கோவை ரஞ்சனி | 1:48 | |
| 7. | "ஒரு பூங்கிளி" | ஸ்ரீநிவாஸ், பிரசன்னா | 4:45 | |
| 8. | "என் காதலி" | யுவன் சங்கர் ராஜா | 3:24 | |
மொத்த நீளம்: |
26:38 | |||
- இசைப்பதிவில் இல்லதவை
படத்தில் இடம்பெற்ற பாடல் பதிவில் இல்லாத பாடல் பின்வருமாறு:
- "இது இன்னிசையா" - யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஹேமா சர்தேசாய், யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பாடியது
வெளியீடு
படம் 20 ஏப்ரல் 2003 அன்று வெளியிடப்பட்டது.
குறிப்புகள்
- ↑ "Sarika makes a comeback". Rediff.com. Retrieved 2016-12-01.
- ↑ "The Hindu : "Punnagai Poovae"". www.thehindu.com. Archived from the original on 2003-09-02. Retrieved 2021-02-07.