ஆர். என். ஆர். மனோகர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆர். என். ஆர். மனோகர்
பிறப்பு(1960-05-17)17 மே 1960[சான்று தேவை]
தமிழ்நாடு இந்தியா
இறப்பு17 நவம்பர் 2021(2021-11-17) (அகவை 61)
சென்னை, தமிழ்நாடு
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1993-2021
பெற்றோர்
  • ஆர்.என். ரங்கநாதன் (தந்தை)
  • ரஞ்சிதன் (தாய்)
பிள்ளைகள்
  • ரஞ்சன்
உறவினர்கள்என். ஆர். இளங்கோ (சகோதரர்)

ஆர். என். ஆர். மனோகர் (R. N. R. Manohar, இறப்பு: 17 நவம்பர் 2021) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் மாசிலாமணி (2009), வேலூர் மாவட்டம் (2011) போன்ற படங்களை இயக்கியுள்ளார்.[1]

தொழில்

பேண்ட் மாஸ்டர், சூரியன் சந்திரன் போன்ற படங்களில் கே. எஸ். ரவிக்குமாருக்கு உதவியாளராக ஆனதன் மூலம் ஆர். என். ஆர் மனோகர் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] இவர் கோலங்கள் திரைப்படத்திற்கு உரையாடல்களை எழுதினார். மேலும் இயக்குநருக்கு உதவியாளராகவும் பணியாற்றினார். மேலும் அந்த படத்தில் நிருபராக ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். தென்னவன், புன்னகை பூவே போன்ற படங்களுக்கு உரையாடல்களை எழுதினார். விவேக்கைக் கொல்ல முயற்சிக்கும் ஒரு குண்டராக தென்னவன் படத்தில் மனோகர் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். ஒரு நடிகராக இவர் தில், சுட்ட பழம் போன்ற படங்களில் சிறிய எதிர்மறை வேடங்களில் நடித்தார். மேலும் இவர் வீரம் படத்தில் நாசரின் மைத்துனராக நடித்தார்.

2002 ஆம் ஆண்டில், மனோகர், பிரசாந்த், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேலு என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார், ஆனால் அந்த படம் பின்னர் தயாரிக்கப்படவில்லை.[3]

இவர் பின்னர் மாசிலாமணி மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[4][5] இவரது இரண்டாவதாக வேலூர் மாவட்டம் என்ற காவல் துறை குறித்த நாடகத் திரைப்படத்தை இயக்கினார்.[6]

திரைப்படவியல்

இயக்குனராகவும் எழுத்தாளராகவும்

ஆண்டு படம் குறிப்பிடப்பட்டது குறிப்புகள்
இயக்குனர் எழுத்தாளர்
1994 மைந்தன் Red XN Green tickY இணை இயக்குநரும்
1995 கோலங்கள் Red XN Green tickY இணை இயக்குநரும்
1998 புதுமைப்பித்தன் Red XN Green tickY இணை இயக்குநரும்
2003 தென்னவன் Red XN Green tickY
2003 புன்னகை பூவே Red XN Green tickY
2009 மாசிலாமணி Green tickY Green tickY
2010 வந்தே மாதரம் Red XN Green tickY
2011 வேலூர் மாவட்டம் Green tickY Green tickY

நடிகராக

ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
1995 கோலங்கள் மாதவன் உதவி இயக்ககுநரும்
1999 கள்ளழகர் உதவி இயக்ககுநரும்
2001 தில்
2003 தென்னவன் நாகப்பா
2006 டான் சேரா "ராயபுரம்" பாவா
2007 சபரி மனோகர்
2008 சுட்ட பழம் தேவாலய தந்தை
2013 யா யா தீதாவின் தந்தை
2014 வீரம் மாணிக்கம்
2014 சலீம் தவப்புண்ணியம்
2014 காடு
2015 என்னை அறிந்தால் சத்தியதேவின் மாமா
2015 நானும் ரௌடி தான் தலைவர்
2015 வேதாளம் ஊழல் காவல் அதிகாரி
2015 ஈட்டி சம்பத்
2016 மிருதன் அமைச்சர்
2016 ஆறாது சினம் அமைச்சர்
2016 ஆண்டவன் கட்டளை அமைச்சர்
2016 அச்சம் என்பது மடமையடா மகேசின் தந்தை
2016 சஹாசம் ஸ்வாசாக சாகிபோ மகேசின் தந்தை தெலுங்கு படம்
2017 தீரன் அதிகாரம் ஒன்று அமைச்சர்
2017 எனக்கு வாய்த்த அடிமைகள் கிருஷ்ணாவின் தந்தை
2017 கவண் திலகாவின் தந்தை
2017 ரூபாய்
2017 புயலா கிளம்பி வர்றோம்
2017 பிச்சுவா கத்தி
2018 வீரா மாவட்டம் தமிழ்ழகன்
2018 காலக்கூத்து காயத்திரியின் தந்தை
2018 என்ன தவம் செய்தேனோ கிராமத்து கவுண்டர்
2019 விசுவாசம் தூக்குதுரையின் மாமா
2019 அகவன்
2019 காஞ்சனா 3 சங்கரின் நண்பன்
2019 அயோக்யா Advocate
2019 குப்பத்து ராஜா கை சாம்சின் நண்பர்
2019 காப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்
2019 சிக்சர் அரசியல்வாதி
2019 கைதி மூத்த காவல் அதிகாரி
2020 அடவி தோட்ட முதலாளி
2020 சீறு ச.ம.உ
2020 நுங்கம்பாக்கம் காவல் துறை தலைவர்
2020 நாங்க ரொம்ப பிசி
2021 வி
2021 பூமி நீதியரசர்
2021 டெடி

மறைவு

மாரடைப்பு காரணமாக, நவம்பர் 17, 2021 அன்று தனது 61 வயதில் காலமானார்.[7]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஆர்._என்._ஆர்._மனோகர்&oldid=20779" இருந்து மீள்விக்கப்பட்டது