காலக்கூத்து

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காலக்கூத்து
இயக்கம்எம். நாகராஜன்
கதைஎம். நாகராஜன்
இசைஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு
ஒளிப்பதிவுபி.வி.சங்கர்
படத்தொகுப்புசெல்வா ஆர்.கே.
கலையகம்மதுரை ஸ்ரீ கள்ளழகர் எண்டர்டெயின்மெண்ட்
வெளியீடுமே 25, 2018 (2018-05-25)
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காலக்கூத்து (Kaalakoothu) 2018 ஆம் ஆண்டு பிரசன்னா, கலையரசன், தன்சிகா மற்றும் சிருஷ்டி டங்கே நடிப்பில், எம், நாகராஜன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3][4]. இப்படம் ஏப்ரல் 2015 இல் தொடங்கப்பட்டது. 25 மே 2018 இல் திரையரங்குகளில் வெளியானது.

கதைச்சுருக்கம்

சிறுவயது கதை: பள்ளியில் ஹரியின் வகுப்பில் புதிதாக சேருகிறான் ஈஸ்வரன். ஹரிக்கும் ஈஸ்வரனுக்கும் ஆரம்பத்திலிருந்தே சரியான நட்பு இல்லை. இருவருக்கும் ஒரு நாள் சண்டை நடந்ததில் ஹரி, ஈஸ்வரனை அடித்துவிடுகிறான். அதனால் ஹரியின் தாயை பள்ளிக்கு வரச் சொல்கின்றனர். பள்ளிக்கு வரும் ஹரியின் தாய் ஈஸ்வரன் யாருமற்ற அனாதை என்று அறிகிறாள். தன்னை அவன் தாயாக எண்ணிக்கொள்ளும்படி கூறுகிறாள். சில நாட்களில் அவள் இறந்துபோக ஈஸ்வரன், ஹரிக்கு ஆறுதல் கூறி துணை நிற்கிறான்.

சில வருடங்களுக்குப் பிறகு ஹரி (கலையரசன்) காயத்ரியைக் (தன்சிகா) காதலிக்கிறான். தனக்கென யாரும் இல்லாததால் ஈஸ்வரன் (பிரசன்னா) தன்னை நேசிக்கும் ரேவதியை (சிருஷ்டி டங்கே) காதலிக்கத் தயங்குகிறான். ஹரியின் தங்கையிடம் தவறாக நடக்கும் மாநகராட்சித் தலைவரின் மகனை நண்பர்கள் இருவரும் சேர்ந்து அடித்து அவனது கரத்தை ஒடித்துவிடுகின்றனர். இதனால் இவர்களை எதிரிகளாக எண்ணி பழிவாங்க நினைக்கிறார் மாநகராட்சித் தலைவர். ஹரியின் வற்புறுத்தலால் ரேவதியைக் காதலிக்கத் தொடங்குகிறான் ஈஸ்வரன். எல்லாம் நல்லவிதமாக சென்றுகொண்டிருக்கும்போது அவர்களுக்குத் திடீரென ஒரு பிரச்சனை வருகிறது. அதன்பின் நடந்தது மீதிக்கதை.

நடிகர்கள்

விமர்சனம்

மின்னம்பலம்: சாதியின் பெயரால் நடைபெறும் ஆணவக் கொலைகள் தேவையா என்பதைத்தான் படம் பேசுகிறது[5].

விகடன்: ஒரே வருடம் ஒரே நாளில் பிறந்த வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ள இருவரின் கதைதான் இந்த 'காலக்கூத்து'[6].

தினமலர்: பி. வி. சங்கரின் ஒளிப்பதிவு யதார்த்தமாக காட்சிகளைப் பதிவு செய்துள்ளது[7].

தினபூமி: மதுரையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நாகராஜன்[8].

பிலிம்பீட்: விலை மதிப்பில்லா மனித உயிர்களை அழிக்கக்கூடாது என்பதை நட்பு, காதல் கலந்து சொல்கிறது 'காலக்கூத்து'[9].

தமிழ் வெப்டுனியா: கலையரசன், தன்ஷிகா நடிப்பு மற்றும் பாடல்களுக்காக நிச்சயம் இந்த படத்தை பார்க்கலாம்[10].

தி இந்து தமிழ்: காட்சிகளை மெதுவாக நகர்த்தினால் எதார்த்தமான சித்தரிப்பாக அமைந்துவிடும் என்ற இயக்குநரின் தீர்மானம் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது[11].

டெய்லி ஹண்ட்: "காலக்கூத்து - காதல் கூத்து!"[12]

ஜீதமிழ்நியூஸ்: காலக்கூத்து – துன்பியல் நட்பு[13]

இசை

படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். படத்தின் பாடல்கள் 2017 சனவரி 4 ஆம் நாள் வெளியிடப்பட்டது.

வ. எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 அல்லிக் கொடியே சத்யப்ரகாஷ் 4:18
2 எங்கேயோ போகும் ஸ்ரீராம் பார்த்தசாரதி 5:17
3 ஜீவன் இந்தக்கணமே சத்யப்ரகாஷ், லதா கிருஷ்ணா 1:48
4 கண்ணக்கட்டி ஹரிசரண், லதா கிருஷ்ணா 4:31
5 கண்ணுக்குள்ள சத்யப்ரகாஷ், சரண்யா ஸ்ரீனிவாஸ் 4:22
6 நெற்றி குங்குமம் வி.வி.பிரசன்னா, சின்மயி 4:14

மேற்கோள்கள்

  1. "காலக்கூத்து". https://news.google.com/stories/CAAqOQgKIjNDQklTSURvSmMzUnZjbmt0TXpZd1NoTUtFUWpnbktyT2tJQU1FWkJPbzM3UmhQbmNLQUFQAQ?hl=ta&gl=IN&ceid=IN%3Ata. 
  2. "காலக்கூத்து" இம் மூலத்தில் இருந்து 2018-07-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180719191235/http://www.cineulagam.com/films/05/100936. 
  3. "காலக்கூத்து". https://www.cinemainbox.com/new-movie-reviews/kaalakoothu-movie-review-130.html. 
  4. "காலக்கூத்து". https://yarl.com/forum3/topic/212946-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/. 
  5. "விமர்சனம்". https://www.minnambalam.com/k/2018/05/26/21. 
  6. "விமர்சனம்". https://cinema.vikatan.com/movie-review/126056-kaalak-koothu-movie-review.html. 
  7. "விமர்சனம்". https://cinema.dinamalar.com/movie-review/2113/kalakoothu/. 
  8. "விமர்சனம்". http://www.thinaboomi.com/2018/05/26/91253.html. 
  9. "விமர்சனம்". https://tamil.filmibeat.com/reviews/kaalakkoothu-movie-review-053826.html. 
  10. "விமர்சனம்". http://tamil.webdunia.com/article/movie-review-in-tamil/kaala-koothu-movie-review-118052400071_1.html. 
  11. "விமர்சனம்". https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24003506.ece. 
  12. "விமர்சனம்". https://m.dailyhunt.in/news/india/tamil/kalakkal+cinema-epaper-kalakcin/kalakkoothu+tirai+vimarchanam-newsid-88685224. 
  13. "விமர்சனம்". https://gtamilnews.com/kaalakkoothu-review/. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=காலக்கூத்து&oldid=32212" இருந்து மீள்விக்கப்பட்டது