சாய் தன்சிகா
(தன்சிகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| சாய் தன்சிகா | |
|---|---|
2014-இல் தன்சிகா | |
| பிறப்பு | தன்சிகா 20 நவம்பர் 1989 தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 2006 – தற்போது வரை |
| துணைவர் | விஷால் (2025–தற்போது வரை) |
தன்சிகா (ஆங்கிலம்: Dhansika) (20 நவம்பர் 1989) தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் ஓர் இந்திய நடிகையாவார். பேராண்மை திரைப்படத்தில் நடித்ததன்மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் பிரபலமானார்.[1] தஞ்சையில் பிறந்த இவரது தாய் மொழி தமிழ் ஆகும்.[2] அரவான், பரதேசி போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ரஜினிகாந்த்துடன் கபாலி படத்தில் நடத்துள்ளார்.[3] ஒரு சில தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இரண்டு முறை தென்னிந்திய பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார்.
சொந்த வாழ்க்கை
மே 2025 இல், சாய் தன்சிகா, யோகி டா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது நடிகர் விஷாலுடனான தனது உறவை வெளிப்படையாக அறிவித்தார். மேலும் தாங்கள் ஆகஸ்ட் 29, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார்.[4][5]
திரைப்படப் பட்டியல்
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
| ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
|---|---|---|---|---|
| 2006 | திருடி | பூங்காவனம் | தமிழ் | அறியப்படாதப் பாத்திரம் |
| 2006 | மனதோடு மழைக்காலம் | கதாநாயகியின் தோழி | தமிழ் | அறியப்படாதப் பாத்திரம் |
| 2009 | பேராண்மை | ஜெனிப்பர் | தமிழ் | |
| 2010 | மாஞ்சா வேலு | அஞ்சலி | தமிழ் | |
| 2010 | நில் கவனி செல்லாதே | ஜோ | தமிழ் | |
| 2012 | அரவான் | வனப்பேச்சி | தமிழ் | மிகத் தைரியமான பாத்திரத்திர்க்காக எடிசன் விருது |
| 2013 | பரதேசி | மரகதம் | தமிழ் | |
| 2013 | யா யா | சீதா | தமிழ் | |
| 2014 | சங்குத்தேவன் | தமிழ் | ||
| 2017 | விழித்திரு | சரோஜா தேவி | தமிழ் |
ஆதாரம்
- ↑ "தன்சிகா பிறப்பு வரலாறு". filmibeat.com. 2014. Retrieved January 1, 2015.
- ↑ வாழ்க்கை வரலாறு – தன்சிகா – யூடியூப்
- ↑ http://m.dinamalar.com/cinema_detail.php?id=63407
- ↑ "Tamil actors Vishal, Sai Dhanshika to get married on August 29". தி இந்து. 19 May 2025. https://www.thehindu.com/entertainment/tamil-actors-vishal-sai-dhanshika-to-get-married-on-august-29/article69595247.ece.
- ↑ "Vishal and Sai Dhanshika announce their official marriage date at 'Yogi Da' audio launch". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 May 2025. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vishal-and-sai-dhanshika-announce-their-official-marriage-date-at-yogi-da-audio-launch/articleshow/121273743.cms.