பிரபு (நடிகர்)

பிரபு (பிறப்பு: 25 திசம்பர் 1956) தமிழகத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள் தமிழ்மொழி திரைப்படங்களே அதிகம். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ஆவார். சங்கிலி திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத் தம்பி திரைப்படத்திற்காகப் பெற்றார். கும்கி, அரிமா நம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் விக்ரம் பிரபு இவரது மகனாவார்.

பிரபு
Prabhu In Ooty (cropped).jpg
பிறப்புமகாபிரபு (பிரபு)
25 திசம்பர் 1956 (1956-12-25) (அகவை 67)[1]
இந்தியாசென்னை, இந்தியா
மற்ற பெயர்கள்இளைய திலகம், பிரபு கணேசன்
பணிநடிகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1982– தற்போது வரை
உயரம்5 அடி 8 அங்குலம்
பெற்றோர்சிவாஜி கணேசன்
கமலா கணேசன்
வாழ்க்கைத்
துணை
புனிதா பிரபு
பிள்ளைகள்விக்ரம் பிரபு
ஐஸ்வர்யா பிரபு
உறவினர்கள்ராம்குமார் கணேசன் (அண்ணன்)

நடிப்பு

பெங்களூருவில் உள்ள பிஷப் காா்டன் பள்ளியில் படித்து முடித்த பிறகு, அவரது சித்தப்பா வி. சி. சண்முகம் தனது அண்ணன் சிவாஜி கணேசனின் பல திரைப்படங்களின் கால்ஷீட் மற்றும் அவர் சிவாஜியின் நடிப்பு கதாபாத்திர ஆலோசனைகள் தீர்மானித்தல் மற்றும் சிவாஜி நடிக்கும் பட தயாரிப்பு தளங்களில் அவருடன் இணைந்து நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றினார். திரைப்படத் தயாரிப்பில் உள்ள நுணுக்கங்களை இவர் சிறந்த முறையில் தனது சித்தப்பாவிடமே கற்றார். பிரபுவின் தந்தையான நடிகர் சிவாஜி கணேசன், பிரபு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார். ஆனால் அவர் சித்தப்பா சண்முகத்தின் உறுதியான உதவியால் பிரபுவின் நடிப்புத் திறமையைப் பார்த்து பல தயாரிப்பாளர்களிடம் இருந்து புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தன.[2][3][4]

வாழ்க்கைக் குறிப்பு

பிரபுவின் பெற்றோர் நடிகர் சிவாஜி கணேசன், கமலா ஆகியோருக்கு 3வது மகனாக பிறந்தாா்.[5][6] இவரது அண்ணன் ராம்குமார், திரைப்படத் தயாரிப்பாளராவார். இவருக்கு சாந்தி என்ற அக்காவும், தேன்மொழி என்ற ஒரு தங்கையும் உள்ளனர். இவர் புனிதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இவரது மகனான விக்ரம் பிரபு, 2012வது ஆண்டில் வெளியான கும்கி திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானார்.[7]

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

நடித்த திரைப்படங்கள்

1982 முதல் 1989 வரை

ஆண்டு எண் திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
1982 1 சங்கிலி தமிழ்
2 அதிசய பிறவிகள் தமிழ்
3 லாட்டரி டிக்கெட் தமிழ்
4 கோழி கூவுது தமிழ்
5 நலந்தானா தமிழ்
1983 6 சூரப்புலி தமிழ்
7 ராகங்கள் மாறுவதில்லை தமிழ்
8 முத்து எங்கள் சொத்து தமிழ்
9 வெள்ளை ரோஜா தமிழ்
10 மிருதங்க சக்கரவர்த்தி தமிழ்
11 கே தமிழ்
கைராசிக்காரன் ராதா தமிழ்
சந்திப்பு தமிழ்
சூரக்கோட்டை சிங்கக்குட்டி தமிழ்
நீதிபதி தமிழ்
1984 எழுதாத சட்டங்கள் தமிழ்
சரித்திர நாயகன் தமிழ்
தராசு தமிழ்
உங்க வீட்டு பிள்ளை தமிழ்
நியாயம் தமிழ்
பொழுது விடிஞ்சாச்சு தமிழ்
புதிய சங்கமம் தமிழ்
பிரியமுடன் பிரபு தமிழ்
ராஜா வீட்டு கண்ணுக்குட்டி தமிழ்
திருப்பம் தமிழ்
சிம்ம சொப்பனம் தமிழ்
இருமேதைகள் தமிழ்
1985 கன்னிராசி லட்சுமிபதி தமிழ்
அடுத்தது ஆல்பர்ட் ஆல்பர்ட் தமிழ்
நீதியின் நிழல் தமிழ்
நம்பினார் கெடுவதில்லை தமிழ்
ராஜரிஷி தமிழ்
நேர்மை தமிழ்
1986 சாதனை தமிழ்
ராஜா நீ வாழ்க தமிழ்
பாலைவன ரோஜாக்கள் தமிழ்
அறுவடை நாள் முத்துவேல் தமிழ்
நாளெல்லாம் பௌர்ணமி தமிழ்
1987 சின்னபூவே மெல்லப்பேசு டேவிட் தமிழ்
சின்னத்தம்பி பெரியதம்பி சின்னத்தம்பி தமிழ்
காவலன் அவன் கோவலன் தமிழ்
ஆனந்த் ஆனந்த் தமிழ்
பூப்பூவா பூத்திருக்கு தமிழ்
மேகம் கறுத்திருக்கு தமிழ்
வைராக்கியம் தமிழ்
இவர்கள் வருங்காலத் தூண்கள் தமிழ்
முப்பெரும் தேவியர் தமிழ்
அஞ்சாத சிங்கம் தமிழ்
1988 அண்ணாநகர் முதல் தெரு தமிழ் சிறப்புத் தோற்றம்
குரு சிஷ்யன் பாபு தமிழ் ரஜினிகாந்த் உடன் முதல் திரைப்படம்
உரிமை கீதம் தியாகு தமிழ்
என் உயிர் கண்ணம்மா தமிழ்
என் தங்கச்சி படிச்சவ தமிழ்
மனசுக்குள் மத்தாப்பூ சேகர் தமிழ் தாலவட்டம் மலையாளப் படத்தின் மறுஆக்கம்
தர்மத்தின் தலைவன் ராஜு தமிழ்
அக்னி நட்சத்திரம் கௌதம் தமிழ்
ரத்த தானம் தமிழ்
மணமகளே வா தமிழ்
பூவிலி ராஜா ராஜா தமிழ்
ஒருவர் வாழும் ஆலயம் தமிழ்
கலியுகம் தமிழ்
1989 நாளைய மனிதன் தமிழ்
வெற்றி விழா விஜய் தமிழ்
பொண்ணு பாக்க போறேன் தமிழ்
நினைவுச் சின்னம் முத்திகல் ராசு தமிழ்
வரம் தமிழ்
பிள்ளைக்காக தமிழ்
வெற்றிமேல் வெற்றி தமிழ்
உத்தம புருஷன் ரகு தமிழ்
மூடு மந்திரம் தமிழ்

1990களில்

ஆண்டு எண் திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
1990 காவலுக்குக் கெட்டிக்காரன் திலீப் தமிழ்
ராஜா கைய வெச்சா ராஜா தமிழ்
மை டியர் மார்த்தாண்டன் மார்த்தாண்டன் தமிழ்
அரங்கேற்ற வேளை சிவராம கிருஷ்ணன் தமிழ்
நல்ல காலம் பொறந்தாச்சு தமிழ்
உறுதிமொழி தமிழ்
சத்தியவாக்கு தமிழ்
அஞ்சலி தமிழ் சிறப்புத் தோற்றம்
1991 தாலாட்டு கேக்குதம்மா ராசைய்யா தமிழ்
கும்பக்கரை தங்கய்யா தங்கையா தமிழ்
ஆயுள் கைதி சேகர் தமிழ்
வெற்றிக் கரங்கள் தமிழ்
சின்னத் தம்பி சின்னத் தம்பி தமிழ் தமிழக அரசின் திரைப்பட விருது - சிறந்த நடிகர்
கிழக்குக் கரை முரளி தமிழ்
இரும்பு பூக்கள் தமிழ் சிறப்புத் தோற்றம்
1992 மன்னன் அவராகவே தமிழ் சிறப்புத் தோற்றம்
பாண்டித்துரை பாண்டித்துரை தமிழ்
நாங்கள் கீர்த்தி தமிழ்
சின்னவர் முத்து தமிழ்
நாளைய செய்தி தமிழ்
செந்தமிழ்நாட்டு தமிழச்சி முத்து தமிழ்
1993 சின்ன மாப்ளே தங்கவேலு தமிழ்
உத்தமராசா தமிழ்
97 மறவன் தமிழ்
98 தர்மசீலன் தமிழ் செல்வன்,
தர்மசீலன்
தமிழ்
99 உழவன் தமிழ்
1994 100 ராஜகுமாரன் ராஜகுமாரன் தமிழ் 100வது திரைப்படம்
டூயட் குணா தமிழ்
பிரியங்கா அர்ஜுன் தமிழ்
வியட்நாம் காலனி வெங்கடகிருஷ்ணன் தமிழ் வியட்நாம் காலனி மலையாள

திரைப்படத்தின் மறுஆக்கம்

தலைவனின் அருள் உள்ளம் தமிழ்
ஜல்லிக்கட்டுக்காளை கோபாலகிருஷ்ணன் தமிழ்
1995 கட்டுமரக்காரன் முத்தழகு தமிழ்
பசும்பொன் தங்கபாண்டி தமிழ்
சின்ன வாத்தியார் சந்திரமௌலி/அரவிந்த் தமிழ்
பெரிய குடும்பம் தமிழ்
மிஸ்டர். மெட்ராஸ் முருகன் தமிழ்
சீதனம் முத்து மாணிக்கம் தமிழ்
1996 பரம்பரை பரமசிவம் தமிழ்
காலாபானி முகுந்த் ஐயங்கார் மலையாளம்
சிவசக்தி சிவா தமிழ்
பாஞ்சாலங்குறிச்சி கிச்சா தமிழ்
1997 மாப்பிள்ளை கவுண்டர் தமிழ்
தேடினேன் வந்தது வேலுமணி /கோபாலகிருஷ்ணன் தமிழ்
பெரியதம்பி சிவா தமிழ்
1998 பொன்மனம் ஆனந்தன் தமிழ்
என் உயிர் நீதானே தமிழ்
இனியவளே பிரபாகர் தமிழ்
1999 கும்மிப்பாட்டு தமிழ்
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா வெங்கடேசன் தமிழ்
சுயம்வரம் ஆவுடையப்பன் தமிழ்
மனம் விரும்புதே உன்னை சண்முகம் தமிழ்

2000 முதல் 2009 வரை

ஆண்டு எண் திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2000 திருநெல்வேலி துளசி தமிழ்
தை பொறந்தாச்சு கிரி தமிழ்
கந்தா கடம்பா கதிர்வேலா கந்தா தமிழ்
பட்ஜெட் பத்மநாபன் பத்மநாபன் தமிழ்
வண்ணத் தமிழ்ப்பாட்டு பூபதி, ரத்னவேல் ராஜா தமிழ்
2001 தாலி காத்த காளியம்மன் சந்திரபோஸ் தமிழ்
மிடில் கிளாஸ் மாதவன் மாதவன் தமிழ்
சூப்பர் குடும்பம் அருண் தமிழ்
மிட்டா மிராசு செல்லையா தமிழ்
2002 மலையாளி மாமனு வணக்கம் பெரியகுளம் கண்ணையா மலையாளம் கவுண்டர் வீட்டு மாப்பிள்ளை என தமிழில் மறுஆக்கம்
சார்லி சாப்ளின் ராமகிருஷ்ணன் தமிழ் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
2003 வார் அன் லவ் சரத்சந்திரன் மலையாளம் காலம் என தமிழில் மொழிமாற்றம்
எஸ் மேடம் சிவராமகிருஷ்ணன் தமிழ்
பந்தா பரமசிவம் பரமன் தமிழ்
2004 கண்ணிணும் கண்ணடிக்கும் அவராகவே மலையாளம் சிறப்புத் தோற்றம்
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் வத்தி தமிழ்
2005 சந்திரமுகி செந்தில்நாதன் தமிழ்
2006 பாசக் கிளிகள் சேதுபதி தமிழ்
குஸ்தி ஜீவநாதன் தமிழ்
உனக்கும் எனக்கும் முத்துபாண்டி தமிழ்
2007 தாமிரபரணி சரவண பெருமாள் தமிழ்
வேகம் தமிழ்
பில்லா ஜெயபிரகாஷ் டிஜிபி தமிழ்
2008 குசேலன் செந்தில்நாதன் தமிழ் சிறப்புத் தோற்றம்
சிலம்பாட்டம் முத்துவேல் தமிழ்
2009 அ ஆ இ ஈ சுப்ரமணியம் தமிழ்
அயன் தாஸ் தமிழ் பரிந்துரை - சிறந்த துணை நடிகருக்கான

பிலிம்பேர் விருது – தமிழ்

மலை மலை பழனிவேல் தமிழ்
கந்தசாமி பரந்தாமன் தமிழ்

2010 முதல் தற்போது வரை

ஆண்டு எண், திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2010 அசல் மிராசி தமிழ்
தம்பிக்கு எந்த ஊரு குமாரசாமி தமிழ்
ப்ரமணி வர்க்கிசான் ஜோசப் மலையாளம் சிறப்புத் தோற்றம்
டார்லிங் ஹனுமந்த ராவ் தெலுங்கு
மாஞ்சா வேலு கௌதம் கணேஷ் தமிழ் சிறப்புத் தோற்றம்
மகனே என் மருமகனே அவராகவே தமிழ் சிறப்புத் தோற்றம்
ராவணன் சிங்கரசன் தமிழ்
தில்லாலங்கடி கிருஷ்ணாவின் அப்பாவாக தமிழ்
பெஸ்ட் ஆப் லக் விநாயக நாயக்கர் மலையாளம்
ஆரஞ்சு ஜானுவின் அப்பாவாக தெலுங்கு
2011 பாஸ் சேதுநாதன் ஐயர் கன்னடம்
தம்பிக்கோட்டை சண்முகம் தமிழ்
ஆடுபுலி பாக்யநாதன் தமிழ்
பொன்னர் சங்கர் சோழ மன்னன் தமிழ்
சக்தி மகாதேவராயர் தெலுங்கு
சங்கரன் கோயில் தமிழ்
பெஜவாடா காளி பிரசாத் தெலுங்கு
2012 3 ராமுவின் அப்பாவாக தமிழ்
தருவு யமா தெலுங்கு
ஊ கொடத்தாரா? உலிக்கி படத்தாரா? ராயுடு தெலுங்கு
மிரட்டல் சங்கர் தாதா தமிழ்
தூனீகா தூனீகா ராமசாமி தெலுங்கு
தேனிகைனா ரெடி வீர நரசிம்ம நாயுடு தெலுங்கு
2013 ஓங்கோல் கீதா நாராயணா தெலுங்கு
ஷேடோ தெலுங்கு
டிராகுலா 2012 மலையாளம்
ஆல் இன் ஆல் அழகு ராஜா முத்துகிருஷ்ணன் தமிழ்
2014 என்னமோ நடக்குது பார்த்திபன் தமிழ்
என்னமோ ஏதோ சக்கரவர்த்தி தமிழ்
உயிருக்கு உயிராக ரங்கசாமி தமிழ்
திரிஷ்யா பண்ணீ ராவ் கன்னடம்
கத்தி தமிழ்
கயல் தமிழ்
பவர் கன்னடம்
2015 காசு பணம் துட்டு தமிழ்
ஆம்பள தமிழ்
காக்கி சட்டை தமிழ்
எதிரி எண் 3 தமிழ்
புலி தமிழ்
அப்படக்கரு தமிழ்
தானா தமிழ்
2016 தெறி சிபி சக்ரவர்த்தி தமிழ்
வெற்றிவேல் ராஜமாணிக்கம் தமிழ்
உன்னோடு கா ஜெயவேல் தமிழ்
மீன் குழம்பும் மண் பானையும் அண்ணாமலை தமிழ் 200வது படம்
2017 முப்பரிமாணம் அவராகவே தமிழ் சிறப்பு தோற்றம்
7 நாட்கள் விஜய் ரகுநாத் தமிழ்
வீடேவடு ஜகந்நாதன் தெலுங்கு
யார் இவன் ஜகந்நாதன் தமிழ்
2018 மன்னர் வகையறா தமிழ்
உத்தரவு மகாராஜா தமிழ் படப்பிடிப்பில்
ஜானி தமிழ் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பிரபு_(நடிகர்)&oldid=21962" இருந்து மீள்விக்கப்பட்டது