இரும்பு பூக்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இரும்பு பூக்கள்
இயக்கம்ஜி. எம். குமார்
தயாரிப்புஆர். புஷ்பா
கதைஜி. எம். குமார்
இசைம. சு. விசுவநாதன்
இளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஇளவரசன்
படத்தொகுப்புசியாம்
வின்செண்ட்
கலையகம்புஷ்பாலயம் மூவிஸ்
வெளியீடுபெப்ரவரி 16, 1991 (1991-02-16)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரும்பு பூக்கள் (Irumbu Pookkal) என்பது 1991ஆம் ஆண்டு வெளியான தமிழ் துப்பறியும் திரைப்படம் ஆகும். ஜி. எம். குமார் இயக்கிய இப்படத்தில் கார்த்திக், பல்லவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஆர். புஷ்பா தயாரித்த இப்படத்திற்கு இளையராஜா மற்றும் ம. சு. விசுவநாதன் ஆகியோர் இசை அமைத்தனர் மற்றும் 16, பிப்ரவரி, 1991 அன்று வெளியானது.[1]

கதை

போரில் கால் இழந்த ஒரு ராணுவ அதிகாரி ( பிரபு ) தனது கிராமத்திற்கு திரும்ப வருகிறார். அவர் இறந்ததாக சொல்லப்பட்ட கடிதத்தைப் பெற்ற அவரது மனைவி தற்கொலை செய்து கொள்கிறாள். அவரது குழந்தைகளும், அவரது உறவினரும் ( ரேகா ) ஓய்வூதியம பெறுவதற்காக கிராம அரசியல்வாதியிடம் கையொப்பம் கேட்கின்றர். ஆனால் அவரது உறவினரை தன்னுடன் ஒரு இரவைக் கழிக்குமாறு அந்த ஊழல் அரசியல்வாதி கேட்கிறார். இதற்கு மறுக்கும் அவள் பின்னர் தற்கொலை செய்து கொள்கிறாள். இதனால் அவர் சிறைக்கு அனுப்பப்படுகிறார். அங்கு காவல் அதிகாரிகள் அவரைக் கொல்கின்றனர். அவரது மகன் தர்மா காவல் அதிகாரியைக் கொன்று பழிவாங்குகிறான். பின்னர் அவன் சிறைக்கு அனுப்பப்பட்டு அங்கேயே வளர்கிறான்.

தர்மமா ( கார்த்திக் ) சிறையில் பிரபலமான பாடகராகவும், அவனது சகோதரி நிருபராகவும் ஆகிறாரகள். கே. பாலசுப்பிரமணியம் (சத்யஜித்) என்ற பிரபலமற்ற அரசியல்வாதி அமைச்சராக முயற்சிக்கிறார். அவரது கட்சியின் பலவீனம் என்பது போதிய பெண்கள் வாக்காளர்களின் ஆதரவு இல்லாதது ஆகும். எனவே அவர் தனது கட்சியின் பெண் உறுப்பினர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்கிறார், பின்னர் ஆளும் கட்சி ஆதரவாளர்களால் அவர்களைக் கொன்று பாலியல் பலாத்காரம் செய்கிறார். இந்த குற்றத்தை ஆளும் கட்சி மீது பகிரங்கமாக சுமத்துகிறார். கூட்டத்தின் போது தர்மாவின் சகோதரியும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதன்பிறகு, கே. பாலசுப்பிரமணியம் தேர்தலில் வெற்றி பெறுகிறார். பெண்ணிய பத்திரிகையாளரும் படுகொலைக்கு ஒரே சாட்சியுமான சித்ரா ( பல்லவி ) தர்மாவின் உதவியுடன் அரசியல்வாதியை பழிவாங்க முயற்சிக்கிறார்.

நடிகர்கள்

இசை

இப்படத்தின் பின்னணி இசை, பாடலுக்கான இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவும், ம. சு. விசுவநாதனும் மேற்கொண்டனர். 1991 இல் வெளியிடப்பட்ட படத்தின் இசைப்பதிவில் 4 பாடல்கள் உள்ளன.[2][3][4]

எண் பாடல் பாடகர் (கள்) இசையமைப்பாளர் பாடல் வரிகள் காலம்
1 'ஏழை உனக்கு' ஏ. ஆர். ஷேக் முகமது ம. சு. விசுவநாதன் கங்கை அமரன் 3:47
2 'முத்ததான முத்தம்' எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 4:41
3 'நானும் கூட' மனோ இளையராஜா 4:23
4 'ரெட்டை குருவி' மனோ, பி. சுசீலா 4:39

குறிப்புகள்

  1. "Filmography of irumbu pookkal". cinesouth.com. Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2012-12-25.
  2. "Irumbu Pookkal Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-25.
  3. "Irumbu Pookal". hummaa.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-25.
  4. "Irumbu Pookal – Illaiyaraja". thiraipaadal.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-25.
"https://tamilar.wiki/index.php?title=இரும்பு_பூக்கள்&oldid=30829" இருந்து மீள்விக்கப்பட்டது