கே. பி. சேகர்

ருத்ராபதி சேகர் என அழைக்கப்படும் கே. பி. சேகர் (K. P. Sekar) என்பவர் ஒரு தென்னிந்திய திரைப்பட பின்னணி குரல் கலைஞர் ஆவார். இவர் சாருக் கான் உள்ளிட்டவர்களுக்கு தமிழ் படங்களில் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.[1][3] இவர் தமிழக அரசிடமிருந்து தமிழக அரசு திரைப்பட விருதைப் பெற்றவர்.

கே. பி. சேகர்
தாய்மொழியில் பெயர்ருத்ராபதி சேகர் [1]
பிறப்புருத்ராபதி சேகர்
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை
பணிநடிகர் பின்னணி குரல் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1988 - தறோபோது வரை
பெற்றோர்கே. பி. ருத்ராபதி (தந்தை)[2]
வாழ்க்கைத்
துணை
காயத்திரி சேகர்
பிள்ளைகள்அக்ஷத் தேஜ்
வில்வா

தொழில்

சேகர் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கே. பி. ருத்ராபதி இயக்குனர் ஏ. பி. நாகராசன் கீழ் பணியாற்றியவர்.[1] சேகர் குழந்தை கலைஞராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் நேரடி தமிழ் படமான பவித்ரா (1994) படத்தில் அஜித் குமாரின் கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்து அதன் மூலம் அறிமுகமானார. அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்திற்காக பிரபாசுக்கு பின்னணி குரல் கொடுத்தது அதன் வழியாக தொழில் வாழ்வில் ஏற்றம் கண்டார். விவேகம் படத்திற்காக விவேக் ஒபரோய்க்கு பின்னணி குரல் கொடுத்தார்.[3] இவரது மற்ற முக்கிய படங்களாக காதல் தேசம், உள்ளம் கேட்குமே, பயணம் ஆகியவை அடங்கும். மலரினும் மெல்லிய (2011) படத்திற்காக சிறந்த ஆண் பின்னணி குரல் கலைஞருக்கான தமிழக அரசு திரைப்பட விருதை பெற்றார். இவர் முக்கியமாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும் தெலுங்கு, இந்தி, ஆங்கில படங்களுக்கு தமிழ் பின்னணி குரல் கொடுக்கிறார், இதில் மார்வெல் காமிக்ஸ் யுனிவர்ஸ் படங்களான டெட்பூல் , ஆண்ட் மேன் அண்ட் தி வாஸ்ப், எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கன. பெருவெற்றி தெலுங்கு திரைப்பட மாவீரன் படத்தின் தமிழ் மொழியாக்கத்தில் பின்னணி குரல் கொடுத்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியான சாருக் கான் தொகுப்புரை வழங்கிய இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான கௌன் பனேகா குரோர்பதி பருவம் 2 ஐ இவர் தமிழில் குரல் கொடுத்து மொழியாக்கம் செய்தார்.[1] மேலும் இவர் கொடைக்கானல், என்னை அறிந்தால், அடங்க மறு உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

சேகர் காயத்ரியை திருமணம் செய்து கொண்டார், இவருக்கு அக்ஷாந்த் தேஜ் மற்றும் வில்வா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.[1]

திரைப்படவியல்

நடிகராக

ஆண்டு படம் பாத்திரம் Ref(s)
2008 கோடைக்கானல் நந்தா
2011 பயணம் செய்தியாளர்
2015 என்னை அறிந்தால் காவல்துறை அதிகாரி
2018 அடங்க மறு நீக்கப்பட்ட காட்சி [4]
2020 சீறு கிஷோர்

பின்னணி குரல் கொடுத்த பாத்திரங்கள்

தமிழ்ப் படங்கள்

ஆண்டு படம் பாத்திரம் நடிகர் குறிப்புகள் Ref(s)
1994 பவித்ரா அசோக் அஜித் குமார்
1994 இளைஞர் அணி ஹரிஷ்
1994 உங்கள் அன்பு தங்கச்சி இராஜ ரவீந்திரா
1996 காதல் தேசம் கார்த்திக் வினீத்
1996 செல்லக்கண்ணு விக்னேஷ்
1997 நந்தினி வினீத்
1999 காதலர் தினம் ராஜா குணால்
1999 மலபார் போலீஸ் அப்பாஸ்
1999 மோனிசா என் மோனோலிசா இராமன் திரிக்கா
1999 சுயம்வரம் அப்பாஸ்
2001 ஆனந்தம் அப்பாஸ்
2001 கண்ணா உன்னை தேடுகிறேன் சத்யன்
2001 ஒன் டூ திரீ ராஜூ சுந்தரம்
2002 புன்னகை தேசம் குணால்
2002 காதல் வைரஸ் தீபக் ரிச்சர்ட் ரிசி
2002 வருஷமெல்லாம் வசந்தம் ரமேஷ் குணால்
2002 பேசாத கண்ணும் பேசுமே விக்ரம் குணால்
2002 காதல் கிறுக்கன் வினீத்
2002 அற்புதம் குணால்
2003 பந்தா பரமசிவம் அப்பாஸ்
2003 எனக்கு 20 உனக்கு 18 சிறீதர் தருண் குமார்
2003 சூரி சூரியா விக்னேஷ்
2003 குறும்பு ரவி அல்லரி நரேஷ்
2004 சூப்பர் டா குணால்
2004 ஷாக் அப்பாஸ்
2005 செவ்வேல் ஜெய் ஆகாஷ்
2005 உள்ளம் கேட்குமே சாம் சாம்
2005 சின்னா விக்ரமாதத்தா
2005 பம்பரக்கண்ணாலே கௌதம் விக்ரமாதித்யா
2005 வணக்கம் தலைவா அப்பாஸ்
2006 47ஏ பெசன்ட் நகர் வரை அப்பாஸ்
2006 மனதோடு மழைக்காலம் சாம்
2006 ஒரு காதல் செய்வீர் சந்தோஷ்
2007 நண்பனின் காதலி விக்ரமாதித்யா
2008 நேபாளி பிரேம்
2008 மலரினும் மெல்லிய இளங்கோ விக்னேஷ் சிறந்த ஆண் பின்னணி குரல் கலைஞருக்கான தமிழக அரசு திரைப்பட விருது [5]
2010 பெண் சிங்கம் உதய்கிரண்
2010 குட்டி சமீர் தத்தனி
2011 பயணம் மேஜர் ரவீந்திரா அக்கினேனி நாகார்ஜுனா
2011 காசேதான் கடவுளடா சரண்
2014 நினைத்தது யாரோ ரிச்சசர்ட் ரிஷி
2015 பாகுபலி அமரேந்திர பாகுபலி பிரபாஸ்
2015 வேதாளம் அபினை கபீர் துகன் சிங்
2016 ஒரு மெல்லிய கோடு சாம்
2017 பாகுபலி 2 அமரேந்திர பாகுபலி பிரபாஸ்
2017 விவேகம் ஆரியன் சிங்கா விவேக் ஒபரோய்
2018 சொல்லிவிடவா சந்தன் குமார்
2018 பாஸ்கர் ஒரு ராஸ்கல் சஞ்சை அப்தப் சிவதசனி
2019 காஞ்சனா 3 கபீர் துகான் சிங்

தமிழ் மொழிமாற்று படங்கள்

ஆண்டு படம் பாத்திரம் நடிகர் Ref(s)
1995 ரங்கீலா முன்னா ஆமிர் கான்
1998 ரஷ் ஹவர் லீ கிறிஸ் டக்கர்
1999 தால் அக்சை கண்ணா
2001 பாப்பா வெங்கடேஷ்
2001 காதல் கலாட்டா வெங்கடேஷ்
2004 தேசம் சாருக் கான்
2005 மாஸ் நாகார்ஜுணா
2007 ரஷ் ஹவர் 2 லீ கிறிஸ் டக்கர்
2007 ஸ்டாலின் கோபிசந்த்
2007 டான் நாகார்ஜுணா
2008 புதுகோட்டை அழகன் நாகார்ஜுணா
2008 பெட்டைம் ஸ்டோரிஸ் ஸ்கீட்டர் ப்ரோன்சன் ஆடம் சேண்ட்லர்
2009 மாவீரன் ஹர்சா ராம் சரண்
2011 ஸ்ரீ ராம ராஜ்யம் இலட்சுமணன் சிறீகாந்த் தமிழ் பதிப்பிற்கு மட்டும்
2011 எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் சார்லஸ் சேவியர் / பேராசிரியர் எக்ஸ் ஜேம்ஸ் மாக்கவோய்
2012 பிஸ்னஸ் மேன் மகேஷ் பாபு
2013 விக்ரம்தாதா நாக சைதன்யா
2013 சென்னை எக்ஸ்பிரஸ் ராகுல் சாருக் கான் தொலைக்காட்சிக்காக மொழிமாற்றம் செய்யப்பட்டது
2014 எக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று சார்லஸ் சேவியர் / பேராசிரியர் எக்ஸ் ஜேம்ஸ் மாக்கவோய்
2014 ஹாப்பி நியூ இயர் சார்லி சாருக் கான்
2015 ஆன்ட்-மேன் ஸ்காட் லாங் / ஆண்ட் மேன் பால் ருத்
2015 ருத்ரமாதேவி அல்லு அர்ஜுன்
2015 பாஜிராவ் மஸ்தானி பாஜிராவ் ரன்வீர் சிங்
2016 தி ஆங்ரிபேர்ட்ஸ் மூவி ரெட் ஜேசன் சுதேகிஸ்
2016 கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் ஸ்காட் லாங் / ஆண்ட் மேன் பால் ருத்
2016 டெட்பூல் வேட் வில்சன் / டெட்பூல் ரையன் ரெனால்ட்சு
2016 எம். எஸ். தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி மகேந்திரசிங் தோனி சுசாந்த் சிங் ராஜ்புத்
2016 எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் சார்லஸ் சேவியர் / பேராசிரியர் எக்ஸ் ஜேம்ஸ் மாக்கவோய்
2018 நடிகையர் திலகம் விஜய் தேவரகொண்டா
2018 ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் ஸ்காட் லாங் / ஆண்ட் மேன் பால் ருத்
2018 கே.சி.எஃப் அத்தியாயம் ஒன்று ராக்கி யாஷ்
2018 என்பேரு சூர்யா என் வீடு இந்தியா அல்லு அர்ஜுன்
2018 பத்மாவத் அலாவுதீன் கில்சி ரன்வீர் சிங்
2018 வெனம் கார்ல்டன் டிரேக் / ரியோட் ரிஸ் அகமது
2019 அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் ஸ்காட் லாங் / ஆண்ட் மேன் பால் ருத்
2019 தி ஆங்கிபேர்ட்ஸ் மூவி 2 ரெட் ஜேசன் சுதேகிஸ்
2019 அவனே ஸ்ரீமன்னாராயணன் ஆய்வாளர் நாராயணன் ரக்சித் செட்டி
2019 எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் சார்லஸ் சேவியர் / பேராசிரியர் எக்ஸ் ஜேம்ஸ் மாக்கவோய்
2019 சாஹோ அசோக் சக்ரவர்த்தி பிரபாஸ் தமிழ் பதிப்பிற்கு குரல்
2019 குருக்ஷேத்ரம் துரியோதனன் தர்சன்
2020 வைகுந்தபுரம் பண்டு அல்லு அர்ஜுண்
2021 செம திமிரு துருவ் சர்ஜா

தமிழ் தொலைக்காட்சி மொழிமாற்று தொடர்கள்

ஆண்டு தொடர் பங்கு Ref(s)
2007 கௌன் பனேகா குரோர்பதி சாருக் கான்
2009 டிராகன் பால் இசட் ஜோர்டான்

குறிப்புகள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "அமரேந்திர பாகுபலியாகிய நான் - சேகர்". cinema.vikatan. 1 May 2017. பார்க்கப்பட்ட நாள் 26 May 2019.
  2. https://www.rediff.com/movies/2007//jan/25shekar.htm
  3. 3.0 3.1 "Deadpool, the funny Tamil Guy - Sekar". cinemaexpress. 8 April 2018. பார்க்கப்பட்ட நாள் 26 May 2019.
  4. https://www.youtube.com/watch?v=OABJNSJw0j4
  5. "தமிழக அரசின் திரை விருதுகள் அறிவிப்பு" [Tamil Nadu Government announces the State Film Awards] (in Tamil). filmibeat.com. 29 September 2009. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://tamilar.wiki/index.php?title=கே._பி._சேகர்&oldid=21671" இருந்து மீள்விக்கப்பட்டது