செல்லக்கண்ணு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
செல்லக்கண்ணு
இயக்கம்என். ரத்னம்
தயாரிப்புஆர். வி. மகாலிங்கம்
விஜய பன்னீர்செல்வம்
கதைகமலேஷ் குமார் (வசனம்)
திரைக்கதைஎன். ரத்னம்
இசைதேவா
நடிப்புவிக்னேஷ்
யுவராணி
ஒளிப்பதிவுஎம். சந்திரமௌலி
படத்தொகுப்புராஜன் - கிட்டன்
கலையகம்பூர்ணிமா சங்கர் என்டர்ப்ரைசஸ்
விநியோகம்பூர்ணிமா சங்கர் என்டர்ப்ரைசஸ்
வெளியீடுமே 12, 1995 (1995-05-12)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

செல்லக்கண்ணு (sellakkannu) 1995 ஆம் ஆண்டு விக்னேஷ் மற்றும் யுவராணி நடிப்பில், தேவாவின் இசையில், என். ரத்னம் இயக்கத்தில் வெளியான தமிழ் காதல் திரைப்படம்.[1][2][3]

கதைச்சுருக்கம்

உறவினர்களான செல்லக்கண்ணு (விக்னேஷ்) மற்றும் சந்திரா (யுவராணி) இருவரும் சிறுவயது முதல் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். வெளியூரில் படித்துவிட்டு ஊருக்குத் திரும்பிவரும் சந்திராவும் செல்லக்கண்ணுவும் காதலிப்பது அவர்களது பெற்றோர்களுக்குத் தெரியவருகிறது. செல்லக்கண்ணுவின் தந்தை தண்டபாணியும் (ராதாரவி) சந்திராவின் தந்தை தங்கவேலுவும் (லிவிங்ஸ்டன்) அவர்களுக்குத் திருமணம் செய்ய முடிவுசெய்கின்றனர்.

அதே ஊரைச் சேர்ந்த கைலாசத்தின் (விஜய் கிருஷ்ணா) மகன் ராஜவேல் (பிருத்விராஜ்) செய்த தவறுக்காக கிராமத் தலைவரான தண்டபாணி அவனைத் தண்டிக்கிறார். இதற்கு பழிவாங்க எண்ணும் கைலாசம் மற்றும் ராஜவேல் இருவரும் தண்டபாணிக்கும் தங்கவேலுவிற்கும் பகையை உருவாக்கத் திட்டமிடுகின்றனர். அவர்கள் திட்டப்படி தங்கவேலுவை ஒரு பிரச்சனையில் சிக்கவைக்கின்றனர். தான் நிரபராதி என்று தங்கவேலு சொல்வதை நம்பாமல் தங்கவேலுவிற்கு பஞ்சாயத்தில் தண்டனை வழங்குகிறார் தண்டபாணி. இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு திருமணம் நிறுத்தப்படுகிறது.

இதையடுத்து நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அந்த ஊரின் ஊராட்சித் தலைவர் பதவிக்கு தண்டபாணியை எதிர்த்துப் போட்டியிடும் தங்கவேல் தோற்றுவிடுகிறார். இதனால் அவர்களுக்கிடையிலான பிரிவு இன்னும் அதிகரிக்கிறது. மேலும் கோபமடையும் தங்கவேல் தன் மகள் சந்திராவை ராஜவேலுவிற்குத் திருமணம் செய்ய முடிவுசெய்கிறார். இறுதியில் ராஜவேலுவின் மோசமான நடவடிக்கைகளைப் பற்றி தங்கவேலுவிற்குத் தெரியவருகிறது. இதை அறிந்து மனம் மாறும் தங்கவேலு, தண்டபாணியின் உதவியுடன் அந்த திருமணத்தை நிறுத்துகிறார். அதன் பின் செல்லக்கண்ணுவிற்கும் சந்திராவிற்கும் திருமணம் நடந்ததா என்பது முடிவு.

நடிகர்கள்

இசை

படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர் புலமைப்பித்தன்.[4]

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 பூகம்பமா எஸ். பி. பாலசுப்ரமணியன் 4:41
2 சின்ன குருவி எஸ். பி. பாலசுப்ரமணியன், சித்ரா 4:55
3 சின்ன குருவி கல்யாண், சங்கீதா 5:02
4 கல்லு கூறிய தேவா, மனோரமா 3:17
5 ராக்கு முத்து மலேசியா வாசுதேவன், சுவர்ணலதா 4:14
6 சிக்கி கிச்சி எஸ். பி. பாலசுப்ரமணியன் , கல்யாண் 4:48
7 வண்டியிலே எஸ். பி. பாலசுப்ரமணியன் , சுவர்ணலதா 5:00

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=செல்லக்கண்ணு&oldid=33565" இருந்து மீள்விக்கப்பட்டது