சென்னை எக்ஸ்பிரஸ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சென்னை எக்ஸ்பிரஸ்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்ரோஹித் ஷெட்டி
தயாரிப்புகவுரி கான்
ரோனி ஸ்க்ரூவாலா
சித்தார்த் ராய் கபூர்
திரைக்கதையூனுஸ் சஜவால்
ராபின் பட்
கதைசொல்லிசாருக் கான்
நடிப்புதீபிகா படுகோண்
சாருக் கான்
ஓட்டம்141 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
தமிழ்
ஆக்கச்செலவு115 கோடி (US$14 மில்லியன்)
மொத்த வருவாய்423 கோடி (US$53 மில்லியன்)

சென்னை எக்ஸ்பிரஸ் 2013ம் ஆண்டு வெளியான தமிழ் மற்றும் இந்தி மொழி திரைப்படம்.

வெளியான

கதாநாயகன் ராகுலின் பெற்றோர் விபத்தில் இறந்துவிடவே, அவனை தாத்தா வளர்க்கிறார். அவன் தாத்தாவிற்கு நூறாவது பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். அவர் அந்த நாளிலேயே இறக்கிறார். ராகுலின் குடும்பத்தினர் மும்பையில் இனிப்பு கடை வைத்திருக்கின்றனர். தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைக்குமாறு அவன் பாட்டி சொல்கிறார். ஆனால், ராகுல் தன் நண்பர்களுடன் கோவாவிற்கு போகும் திட்டத்தில் இருக்கிறான். அங்கேயே கரைத்துவிடலாம் என்றும் கருதுகிறான். தன் பாட்டியை ஏமாற்ற, சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுகிறான். அந்த ரயில் சென்னைக்கு போகாது என்பது அவன் பாட்டிக்கு தெரிகிறது. சென்னை சென்று, அங்கிருந்து சாலைவழியாக ராமேஸ்வரம் செல்வதாக வாக்களிக்கிறான். அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி நண்பர்களுடன் கோவா செல்லலாம் என்று நினைக்கிறான். அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி நண்பர்களை சந்திக்கிறான். அஸ்தியை ரயிலில் மறந்து வைத்துவிட்டதை நினைக்கிறான். அதை எடுத்துக் கொண்டு இறங்க வருகிறான். ரயில் நகர்கிறது. அதற்குள் மீனா ரயிலைப் பிடிக்க ஓடி வருகிறாள். அவளைத் தொடர்ந்து, அவளது அண்ணங்களும் ரயிலில் ஏறுகின்றனர். அனைவரையும் ஏற்றி விடுகிறான். அவளுக்கு இந்தி தெரியாது என்று நினைத்துக் கொண்டு, தன் நண்பனிடம் அவளைப் பற்றி வர்ணிக்கிறான். அவள் இந்தியில் பேசவே, மலைத்துப் போகிறான். ராகுலும் மீனாவும் ரயில் பயணத்திலேயே தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். தனக்கு விருப்பம் இல்லாதவனுடன் திருமணம் செய்ய தந்தை வற்புறுத்துவதாகவும், பிடிக்காமல் தப்பித்து வந்ததையும் கூறுகிறாள். அஸ்தியைக் கரைக்க வந்ததை கூறுகிறான் ராகுல். அவள் தன் அண்ணன்களுக்கு தெரியாமல் தப்பிக்க வழி யோசிக்கிறாள். அவனிடம் அவன் கைபேசியை தருமாறு வேண்டுகிறாள். அவளது முழுப் பெயர் மீனலோச்சனி அழகுசுந்தரம் என அறிகிறான். அவர்கள் நாயகியின் ஊரை அடைந்தவுடன், அவள் தந்தையிடம் ராகுலை தன் காதலன் என அறிமுகப்படுத்துகிறாள். அவள் தந்தை பெரிய நாட்டாண்மையாக இருக்கிறார். ஏற்கனவே, தங்கபலி என்பவனுடன் மீனலோச்சனிக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்திருந்தார் அவள் தந்தை. தங்கபலியும் வந்துசேர்கிறான். ராகுலை சண்டையிட வருமாறு அழைக்கிறான். ராகுலும் மீனாவும் தப்பிக்கின்றனர். மீனாவிடம் சில தமிழ் சொற்களை கற்றுக் கொள்கிறான் ராகுல். இருவரும் மற்றொரு ஊருக்கு சென்றவுடன், அங்கே திருமணம் செய்கின்றனர். இருவரும் மீனாவின் ஊருக்கு திரும்புகின்றனர். அவர்கள் இருவரையும் மீனாவின் தந்தை ஏற்றுக்கொள்கிறார். காதலை எதுவும் தடுக்க முடியாது என்பதே கதைக்களமாக இருக்கிறது.

நடிகர்கள்

இசை

சென்னை எக்ஸ்பிரஸ்
பாடல்
விஷால் -சேகர்
வெளியீடு1 சூலை 2013 (2013-07-01)
ஒலிப்பதிவு2012–2013
இசைப் பாணிதிரைப்படப் பாடல்
நீளம்39:34
மொழிஇந்தி
இசைத்தட்டு நிறுவனம்T-Series
விஷால் -சேகர் காலவரிசை
'கிப்பி
(2013)
சென்னை எக்ஸ்பிரஸ் 'கோரி தேரே பியார் மெயின்
(2013)
Tracklist
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "1 2 3 4 கெட் ஆன் தி டான்சு புளோர்"  விஷால் சேகர், கம்சிகா ஐயர் 3:48
2. "தீத்லி"  கோபி சுந்தர், சின்மயி 5:50
3. "தேரா ராஸ்தா சோட்டூம் நா"  அனுஷா மணி, அமிதாப் பட்டாச்சாரியா 4:13
4. "காஷ்மீர் மெயின் தூ கன்னியாகுமாரி"  சுனிதி சவுகான், அரிஜித் சிங், நீதி மோகன் 5:07
5. "ரெடி ஸ்டெடி போ"  விஷால் தத்லானி, என்கோரிMachas With Attitude, Enkore, Natalie Di Luccio 4:50
6. "சென்னை எக்சுபிரசு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜோனிதா காந்தி 3:37
7. "தீத்லி"  சோகிப் கான், பீனிக்சு (டப்ஸ்டெப்) 3:40
8. "சென்னை எக்சுபிரசு (மேஷப்)"  DJ Kiran Kamath 3:53
9. "Lungi Dance"  Yo Yo Honey Singh 4:36
மொத்த நீளம்:
39:34

சான்றுகள்

இணைப்புகள்

வார்ப்புரு:கே. சுபாஷ் திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=சென்னை_எக்ஸ்பிரஸ்&oldid=29501" இருந்து மீள்விக்கப்பட்டது