இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டம்
மாவட்டம்
இராம்நாடு, முகவை
Pamban Bridge Train Passing.jpg
பாம்பன் பாலம்
Ramanathapuram in Tamil Nadu (India).svg.png
இராமநாதபுரம் மாவட்டம்:அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் TamilNadu Logo.svg.png தமிழ்நாடு
தலைநகரம் இராமநாதபுரம்
பகுதி தென் மாவட்டம்
ஆட்சியர்
திரு.ஜானி டாம் வர்கீஸ்
, இ.ஆ.ப.
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

திரு. இ. கார்த்திக்,
இ.கா.ப.
நகராட்சிகள் 4
வருவாய் கோட்டங்கள் 2
வட்டங்கள் 9
பேரூராட்சிகள் 7
ஊராட்சி ஒன்றியங்கள் 11
ஊராட்சிகள் 429
வருவாய் கிராமங்கள் 400
சட்டமன்றத் தொகுதிகள் 4
மக்களவைத் தொகுதிகள் 1
பரப்பளவு மொத்தம்: 4068.31 ச.கி.மீ.
ஊரகம்: 4016.86 ச.கி.மீ
நகர்ப்புறம்: 19.09 ச.கி.மீ.
வனம்: 32.36 ச.கி.மீ.
மக்கள் தொகை
(2011)
மொத்தம்: 13,53,445
ஆண்கள்: 6,82,658
பெண்கள்: 6,70,787
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இ.சீ.நே.
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
623 xxx
தொலைபேசிக்
குறியீடு

04567
வாகனப் பதிவு
TN-65
கல்வியறிவு
80.72%
இணையதளம் ramanathapuram

இராமநாதபுரம் மாவட்டம் (Ramanathapuram district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் இராமநாதபுரம் ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4068.31 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே பாக் நீரிணையும், வடக்கில் சிவகங்கை மாவட்டமும், வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும், மேற்கில் மதுரை மாவட்டமும் தென்மேற்கில் தூத்துக்குடி மாவட்டமும் அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தலமாக கருதப்படும் இராமேஸ்வரம், இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

1910ஆம் ஆண்டில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து சில பகுதிகளை பிரித்து இணைத்ததால் இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திரு. ஜெ. எப். பிரையன்ட், ஐ.சி.எஸ் முதல் மாவட்ட ஆட்சியராக இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மாவட்டம் இராம்நாட் (Ramnad) என அழைக்கப்பட்டது. இந்தப்பெயர் சுதந்திரத்திற்குப்பிறகும் தொடர்ந்தது. பின்னர் தமிழ் மரபிற்கு ஏற்ப இராமநாதபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இராமநாதபுரம், முகவை மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. வைகை ஆறு, பாக்கு நீரிணையில் தன் பயணத்தை முடிப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. 15.03.1985 அன்று, இராமநாதபுரம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது:

  1. திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை மற்றும் இளையான்குடி வட்டங்கள் கொண்ட சிவகங்கை மாவட்டம்.
  2. திருவில்லிபுத்தூர், விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் இராஜபாளையம் வட்டங்கள் உள்ளடக்கிய விருதுநகர் மாவட்டம்.
  3. திருவாடானை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம், ராமேஸ்வரம் வட்டங்கள் கொண்ட இராமநாதபுரம் மாவட்டம்.

2018இல் இராஜசிங்கமங்கலம் என்ற புதிய தாலுகா உருவாக்கப்பட்டது. 2019இன் நிலவரப்படி, இராமநாதபுரம் மாவட்டமானது கடலாடி, கீழக்கரை மற்றும் இராஜசிங்கமங்கலம் ஆகிய மூன்று வட்டங்களையும் சேர்த்து மொத்தம் ஒன்பது வட்டங்கள் கொண்டது.[1]

மாவட்ட வருவாய் நிர்வாகம்

இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி ஆகிய 2 வருவாய் கோட்டங்கள் உள்ளது. இராமநாதபுரம் வருவாய்க் கோட்டத்தில் 5 வருவாய் வட்டங்களும், பரமக்குடி வருவாய்க் கோட்டத்தில் 4 வட்டங்களும் உள்ளன. இந்த 9 வருவாய் வட்டங்களில் 38 உள்வட்டங்களும், 400 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]

இராமநாதபுரம் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்

பரமக்குடி கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்

உள்ளாட்சி நிர்வாகம்

இராமநாதபுரம் மாவட்டம் 4 நகராட்சிகளும், 7 பேரூராட்சிகளும் கொண்டது.[3]

நகராட்சிகள்

பேரூராட்சிகள்

ஊரக வளர்ச்சி நிர்வாகம்

இம்மாவட்டம் ஒரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், 11 ஊராட்சி ஒன்றியங்களும், 429 கிராம ஊராட்சிகளும் கொண்டது.[9]

ஊராட்சி ஒன்றியங்கள்

இராமநாதபுரம் மாவட்டத்தின் 11 ஊராட்சி ஒன்றியங்கள்.

  1. இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம்
  2. பரமக்குடி ஊராட்சி ஒன்றியம்
  3. இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
  4. கடலாடி ஊராட்சி ஒன்றியம்
  5. கமுதி ஊராட்சி ஒன்றியம்
  6. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம்
  7. திருவாடானை ஊராட்சி ஒன்றியம்
  8. போகலூர் ஊராட்சி ஒன்றியம்
  9. மண்டபம் ஊராட்சி ஒன்றியம்
  10. நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம்
  11. திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்

மக்கள்தொகை பரம்பல்




 

மதவாரியான கணக்கீடு (2011)

  மற்றவை (0.50%)
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.ஆ. ±%
19014,42,067—    
19114,77,726+0.78%
19214,79,202+0.03%
19315,17,471+0.77%
19415,77,826+1.11%
19515,51,125−0.47%
19617,02,168+2.45%
19718,22,623+1.60%
19819,98,295+1.95%
199111,19,153+1.15%
200111,87,604+0.60%
201113,53,445+1.32%
சான்று:[10]

4068.31 ச.கி.மீ பரப்பளவு கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 13,53,445 ஆகும். அதில் ஆண்கள் 682,658 ஆகவும்; பெண்கள் 670,787 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 13.96% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 330 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 80.72% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 140,644 ஆகவுள்ளனர்.[11]

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 77.39% ஆகவும், கிறித்தவர்கள் 6.73% ஆகவும், இசுலாமியர்கள் 15.37 % ஆகவும், மற்றவர்கள் 0.50% ஆகவும் உள்ளனர்.

அரசியல் - சட்டமன்றம்

இம்மாவட்டம் பரமக்குடி, திருவாடனை, இராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் என 4 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது.

வ. எண் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1 பரமக்குடி செ. முருகேசன் திமுக
2 திருவாடனை ஆர். எம். கருமாணிக்கம் இதேகா
3 இராமநாதபுரம் காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் திமுக
4 முதுகுளத்தூர் இராஜ கண்ணப்பன் திமுக

மக்களவை

இம்மாவட்டம் ஒரு மக்களவைத் தொகுதியை கொண்டுள்ளது.

வ. எண் மக்களவைத் தொகுதி மக்களவை உறுப்பினர் கட்சி
1 இராமநாதபுரம் நவாஸ் கனி இஒமுலீ

தீவுகள்

மாநிலத்திலேயே அதிக அளவில் தீவுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அவற்றில் சில:

ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள் - ஆன்மிகத் தலங்கள்


சுற்றுலாத் தலங்கள்

 
பாம்பன் பாலத்தில் இருந்து பார்க்கும் மீன்பிடி படகுகள்
 
பாம்பன் தீவை, இந்திய நிலப்பகுதியுடன் இணைக்கும் பாம்பன் தொடருந்து பாலம்

மேற்கோள்கள்

  1. https://ramanathapuram.nic.in/ta/மாவட்டம்-பற்றி/
  2. "இராமநாதபுரம் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்களும், வருவாய் வட்டங்களும் மற்றும் வருவாய் கிராமங்களும்".
  3. மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்
  4. "கமுதி பேரூராட்சி" (PDF).
  5. "அபிராமம் பேரூராட்சி" (PDF).
  6. "தொண்டி பேரூரட்சி" (PDF).
  7. "மண்டபம் பேரூராட்சி" (PDF).
  8. "இராஜசிங்கமங்கலம் பேரூராட்சி" (PDF).
  9. "இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்புகள்".
  10. Decadal Variation In Population Since 1901
  11. "Ramanathapuram District Population Census 2011-2019, Tamil Nadu literacy sex ratio and density". www.census2011.co.in.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இராமநாதபுரம்_மாவட்டம்&oldid=70169" இருந்து மீள்விக்கப்பட்டது