வட்டங்கள்
Jump to navigation
Jump to search
வட்டம் அல்லது தாலுகா இந்தியாவின் மாவட்ட வருவாய்த் துறையின் ஒரு நிருவாகப் பிரிவு. மாவட்டத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகிறது. இந்த அமைப்பு வருவாய் வட்டம் எனப்படுகிறது. இந்த வட்டாட்சியில் உள்வட்டங்களும், வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்பின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் ஒருவரும் அவருக்கு உதவி புரிவதற்காகச் சில மண்டல துணை வட்டாட்சியர்களும், வருவாய் ஆய்வாளர்களும், எழுத்தர்களும், கிராம நிர்வாக அலுவலர்களும் ,அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் எனப்படுகிறது.[1][2][3]
வட்டாட்சியர் அலுவலகத்தின் பணிகள்
- மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தும் அனைத்து வருவாய்த்துறை சார்பான அரசுப் பணிகளும் வட்டாட்சியர் அலுவலகத்தின் வழியாக வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
- கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் போன்றவர்களின் பரிந்துரைகளின் பேரில் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ், நில உடமைச் சான்றிதழ் போன்று பல சான்றிதழ்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.
- வட்டாட்சி அமைப்புக்குள் மக்களிடையே பிரச்சனைகள் ஏதும் வந்து சட்டம் , ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்படாதவாறு முன்கூட்டியே செயல்படுவதற்கு வாய்ப்பாக இரண்டாம் நிலை நீதித்துறை நடுவராகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.
- வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகளின் செயல்பாடுகளின் மீதான புகார்களை விசாரித்து இவருடைய கட்டுப்பாட்டுக்குள் வரும் அதிகாரங்களைக் கொண்டு கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.
- மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்ட வளர்ச்சி அதிகாரி ஆகியோர் போன்றவர்களுக்கு வருவாய்த்துறைப் பணிகளில் உதவுகிறார்.
இதையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "tehsil".. Oxford University Press.
- ↑ Dutt, Ashok K.; Noble, Allen G.; Costa, Frank J.; Thakur, Sudhir K.; Thakur, Rajiv; Sharma, Hari S. (15 October 2015). Spatial Diversity and Dynamics in Resources and Urban Development: Volume 1: Regional Resources. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789401797719 – via Google Books.
- ↑ Rajiv Balakrishnan (2007), Participatory Pathways: People's Participation in Development Initiatives, Pearson Education India, pp. 65–, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-0034-1