ஜெயம் ரவி
Jump to navigation
Jump to search
ஜெயம் ரவி | |
---|---|
இயற் பெயர் | ரவி மோகன் |
பிறப்பு | செப்டம்பர் 10, 1980 திருமங்கலம், தமிழ்நாடு, இந்தியா |
குறிப்பிடத்தக்க படங்கள் | ஜெயம் (2003) எம். குமரன் தா/பெ மகாலஷ்மி (2004) உனக்கும் எனக்கும் (2006) |
ஜெயம் ரவி (Jayam Ravi) (பிறப்பு - செப்டம்பர் 10, 1980), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மதுரை திருமங்கலத்தில் மோகன் இரவியாக பிறந்தார்.[1] இவரது தந்தை படத்தொகுப்பாளர் மோகன், ஒரு தமிழ் ராவுத்தர் ஆவார்.[2] இவரது தாயார் ஆந்திராவை சேர்ந்தவர்.
திரை வரலாறு
ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்ற திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | உடன் நடித்தவர்கள் | இயக்குனர் | பாத்திரப் பெயர் | குறிப்பு |
---|---|---|---|---|---|
2018 | டிக் டிக் டிக் (2018 திரைப்படம்) | சக்தி சௌந்தர்ராஜன் | எம். வாசுதேவன் | ||
2015 | பூலோகம் | த்ரிஷா, பிரகாஷ் ராஜ் | என். கல்யாணகிருஷ்ணன் | பூலோகம் | |
தனி ஒருவன் | அரவிந்த்சாமி, நயன்தாரா | மோகன் ராஜா | மித்திரன் | ||
ரோமியோ ஜூலியட் | ஹன்சிகா மோட்வானி | கார்த்திக் | |||
2014 | பூலோகம் | பூலோகம் | |||
2014 | நிமிர்ந்து நில் | அமலா பால் | சமுத்திரக்கனி | ||
2014 | நினைத்தது யாரோ | கௌரவத் தோற்றம் | |||
2013 | ஆதிபகவன் | நீத்து சந்திரா | அமீர் | ||
2011 | எங்கேயும் காதல் | ஹன்சிகா மோட்வானி | பிரபுதேவா | கமல் | |
2010 | தில்லாலங்கடி | தமன்னா | ராஜா | கிருஷ்ணா | தெலுங்கு திரைப்பட மறு உருவாக்கம் |
2009 | பேராண்மை | ஜனநாதன் | |||
2008 | தாம் தூம் | கங்கனா ரனாத் | ஜீவா | கௌதம் | |
2008 | சந்தோஷ் சுப்பிரமணியம் | ஜெனிலியா | ராஜா | சந்தோஷ் | பொம்மரில்லு தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம் |
2007 | தீபாவளி | பாவனா | எழில் | பில்லு | |
2006 | சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் | த்ரிஷா | எம். ராஜா | சந்தோஷ் | தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம் |
2006 | இதயத் திருடன் | காம்னா ஜெத்மலானி | சரண் | மஹேஷ் | |
2005 | மழை | ஷ்ரியா | ராஜ்குமார் | அர்ஜீன் | தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம் |
2005 | தாஸ் | ரேணுகா மேனன் | பாபு யோகேஷ்வரன் | அந்தோணி தாஸ் | |
2004 | எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி | அசின் | எம். ராஜா | குமரன் | |
2003 | ஜெயம் | சதா | எம். ராஜா | ரவி |
மேற்கோள்கள்
- ↑ T, Manigandan K.. "HBD Jayam Ravi: ஜெயம் ரவி குழந்தை நட்சத்திரமாக நடித்த தமிழ் படம் எது தெரியுமா?" (in ta) இம் மூலத்தில் இருந்து 17 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231117142736/https://tamil.hindustantimes.com/entertainment/do-you-know-which-tamil-film-starred-jayam-ravi-as-a-child-artist-131694253986742.html.
- ↑ "Lovable Madurai People". Ananda Vikatan (Chennai, India). 14 September 2011 இம் மூலத்தில் இருந்து 8 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140408231532/http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=10297&r_frm=search.
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Jayam Ravi
- முகநூலில் ஜெயம் ரவி
- {{Twitter}} template missing ID and not present in Wikidata.