தாம் தூம்
தாம் தூம் | |
---|---|
இயக்கம் | ஜீவா பி. சி. ஸ்ரீராம் Aneez Jeeva மணிகண்டன் |
தயாரிப்பு | சுனந்தா முரளி மனோகர் |
கதை | S. Ramakrishnan[1]. |
இசை | ஹாரிஸ் ஜெயராஜ் |
நடிப்பு | ஜெயம் ரவி கங்கனா ரனாத் லட்சுமி ராய் ஜெயராம் |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
விநியோகம் | ஐங்கரன் |
வெளியீடு | 29 ஆகஸ்டு 2008 |
ஓட்டம் | 150நிமிடம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | மில்லியன் அமெரிக்க டாலர் |
தாம் தூம் (Dhaam Dhoom) 2008 வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இது சண்டையும் காதலும் கலந்த படம். இந்தப் படத்தை மறைந்த ஜீவா எழுதி இயக்கினார். இதில் ஜெயம் ரவி, லட்சுமி ராய், கங்கனா ரனாத், ஜெயராம், ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆவார்.
கதைசுருக்கம்
இந்த படத்தின் கதை திருமணம் நிச்சயக்கப்பட்ட மருத்துவர் கெளதம் சுப்பரமணியம் ஒரு மருத்துவ மாநாட்டுக்காக உருசியா செல்கிறார். அங்கே அவர் ஒர் அழகியை கொலை செய்தாக குற்றம் சாட்டப்படுகிறார். கைதாகி மொழிதெரியாமல் துன்பப்படுகிறார். அவருக்கு சார்பாக ஒரு தமிழ் தெரிந்த வழக்கறிஞர் வாதாட நியமிக்கப்படுகிறார். ஆனால் ஆதர சூழ்நிலைகள் அவரை குற்றவாழியாக காணிப்பிக்கின்றன. அவர் காவல்துறையிடம், அவர்மீது கொலைக் குற்றம் சாட்டியவர்களிடம் இருந்து தப்பி ஓடுகிறார். எப்படி இதில் இருந்து அவர் மீள்கிறார்? இந்த கொலையில் இருந்து தப்ப இந்திய தூதரகம் உதவியதா? அவர் தமது காதலியுடன் மீண்டும் இணைவாரா? இவையே கதையின் இழைகள்.
தயாரிப்பு
இந்தப் படத்தின் பெரும் பகுதி உருசியாவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பல உருசிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
மேற்கோள்கள்
- ↑ "Dhaam Dhoom Begins Today". Indiaglitz. http://www.indiaglitz.com/channels/tamil/article/27773.html. பார்த்த நாள்: 15 December.