சங்கத்தார் கலகந்தீர்த்த படலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சங்கத்தார் கலகந்தீர்த்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 55ஆவது படலமாகும். இது கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் என்பதற்கு அடுத்து வருவதாகும்.

சுருக்கம்

மதுரை தமிழ் சங்கத்தில் 48 தமிழ் புலவர்கள் இருந்தனர். அவர்களுள் பலர் அகத்தியர் எழுதிய இலக்கண நூலான அகத்தியம் என்பதன் அடிப்படையில் பல்வேறு பாடல்களைப் படித்தனர். இருப்பினும் தங்களுள் சிறந்தது எதுவென சண்டையிட்டுக் கொண்டார்கள்.

புலவர்கள் இறைவன் சொக்கநாதரிடம் சென்று தங்களுடைய பாடலில் எது சிறந்தது என உரைக்க வேண்டினர். இறைவனோ வணிகர் தனபதியின் மகனிடம் சென்று அவன் சொல்லும் தீர்ப்பினை ஏற்குமாறு கூறினார். புலவர்கள் தனபதியின் வீட்டிற்கு சென்று, ருத்ரசர்மனையை சந்தித்தனர். ருத்ரசர்மன் மதுரை சங்கத்திற்கு சென்றார். ருத்ரசர்மன் பிறவியிலேயே பேசாத பிள்ளையாக இருந்தாலும் புலவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு சரியானதற்கு தாளமிட்டுக் கேட்டார்.

நக்கீரர், கபிலர், பாணர் ஆகியோரின் பாட்டுகளே உயர்ந்தவைகள் என தீர்ப்பு அளித்தார். குற்றமுள்ள பாடல்களை சரி செய்து அவற்றை மீண்டும் அரங்கேற்றம் செய்தார். [1]

காண்க

ஆதாரங்கள்