ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர்
A. R. A. M. Abubucker
மூதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1947–1952
பின்னவர்எம். ஈ. எச். முகம்மது அலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1912-03-31)31 மார்ச்சு 1912
தேசியம்இலங்கைச் சோனகர்

அப்துல் ரசாக் அலிம் முகம்மது அபூபக்கர் (Abdul Razak Alim Mohamed Abubucker, 31 மார்ச் 1912[1] - ) இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

அரசியலில்

அபூபக்கர் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மூதூர் தொகுதியில் போட்டியிட்டு 3,480 வாக்குகளுடன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2] 1952 தேர்தலில் மூதூர் தொகுதியில் போட்டியிட்டு சுயேட்சை வேட்பாளர் எம். ஈ. எச். முகம்மது அலி என்பவரிடம் 2,721 வாக்குகளால் தோற்றார்.[3] இவர் மீண்டும் மார்ச் 1960 தேர்தலில் இலங்கை சனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 298 வாக்குகள் மட்டுமே பெற்று தோற்றார்.[4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஏ._ஆர்._ஏ._எம்._அபூபக்கர்&oldid=24756" இருந்து மீள்விக்கப்பட்டது