எங்கே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எங்கே
எங்கே
நூலாசிரியர் இ. தியாகலிங்கம்
பதிப்பாசிரியர் ச. பொன்னுத்துரை
முதற் பதிப்பு
குரல்
கொடுத்தவர்
பிரிதா
உண்மையான
தலைப்பு
எங்கே
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
எங்கே
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
2
பொருண்மை அரசியல்
வெளியிடப்பட்டது Apr 1, 2023
இரண்டாவது பதிப்பு
ஊடக
வகை
புத்தகம், ஒலிப்புத்தகம்
பக்கங்கள் 305
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
9781447768883
முன்னைய
நூல்
திரிபு
அடுத்த
நூல்
ஒரு துளி நிழல்

எங்கே? – நாவல் முற்றிலும் வேறுபட்டதாக அமைகின்றது. இரண்டு தலைமுறைகளின் கதை. ஒருவனே மகனாகவும், அப்பனாகவும் வாழும் கதை. கதையின் ஒருபகுதி சுபனின் தந்தையாக வாழும் நோர்வே நாட்டில் நிகழ்கின்றது, அடுத்தது மகன் தேவனாய் வாழ்ந்த காரைநகரில் நிகழ்வது. பொன்னாலைப்பாலம் தொடுப்பதினாலே, நகரான ஒரு தீவின் செழுமைகளும் பெருமிதங்களும்! அதன் ஆன்மாவைச் சுவாசிக்கும் மக்கள், கடைப்பிடிக்கும் சம்பிரதாயங்கள், மரபு சார்ந்த நம்பிக்கைகள், கோயில்கள், வயல்கள், நீருக்கு ஏங்கும் கிணறுகள் மட்டுமல்ல... வலந்தலை, களபூமி, மாவெட்டை என்று அம்மண்ணின் குறிச்சிகளின் பெயர்களும் விசிறியெறியப் படுகின்றன. இவற்றுடன் மண்ணின் மைந்தரின் அரசியல் சார்பு, அவர்களைப் பாதித்த தமிழினப் பிரச்சினைகள் ஆகியன பிரசாரத் தொனியின்றி, அதேசமயம் மண்மீது கொண்ட பாசம் சற்றேனும் பழுதுபடாத நுட்பத்தில் சித்தரிக்கப்படுகின்றன. தான் பிறந்த மண்ணை, அதன் அற்புத புழுதி வாசனைகளுடனும் எழுதப்பட்ட பிறிதொரு நாவலை நான் தமிழில் இதுவரை வாசிக்கவில்லை. என்று அமரர் எஸ்.பொ அவர்களால் நவிலப்பட்ட நாவல் இது.

நோர்வே, இலங்கை, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலே உள்ள அரசியல் யதார்த்தங்கள் புகலிடத்தமிழ்க் குடும்பம் ஒன்றின் எதிர்காலம் பற்றிய இனிய கனவுகளை எவ்வாறு அலைக்கழிக்கின்றன என்று காட்டும் கதை. அகிம்சையின் அனைத்து முறையீடுகளும் தீர்ந்து போனபின் ஆயுதம் தரிக்க நேர்ந்த அவலத்தை தேவகுரு உணர்ந்திருக்கிறார். எனினும், தாயகத்தில் தோற்றுவிட்ட அகிம்சை, புகலிடத்திலாவது வெல்லும் என்ற நம்பிக்கையில், தனக்கு நேர்ந்த அவமதிப்புகளை எல்லாம் சகித்துக் கொண்டு தமது உறுதியில் நிற்கிறார். அந்த வன்முறை நொஸ்குகள், தேவகுருவின் மனித நியாயத்தை உணர்வார்களா? லேனா என்ற பெண் மனத்தில் விழுந்த நியாயத்தின் சிறுபொறி, இனவெறியில் இருண்ட அந்த நெஞ்சுக் கூட்டுக்குள் ஒளியேற்றுமா? தெரியவில்லை. என கவிஞ்ஞர் இன்குலாப்பால் வருணிக்கப்படும் இந்த நாவல் 1999 ஆண்டு வெளிவந்தது.

‘இது இலங்கையின் வடதமிழ் மாநிலத்தின் வர்த்தகர் கோட்டையாக விளங்கும் காரைநகரின் இயற்கை அழகுகளை முடியுமாப் போல எந்த நாவலும் சித்தரித்ததில்லை. புளட் இயக்கத்தின் ஒரு வரலாற்று ஆவணமாகவும் இந்நாவல் உயர்ந்துள்ளது. இதியாகலிங்கத்தின் மண்பற்றும், வரலாற்று உணர்வும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. இது அவரது நாவல்களில் ஒரு முக்கியமான படைப்பாகும்.’ என்பதாக திரு. எஸ்.பொன்னுத்துரையால் அறிமுகம் செய்யப்படுகிறது.

"https://tamilar.wiki/index.php?title=எங்கே&oldid=29184" இருந்து மீள்விக்கப்பட்டது