இலூயிசு கிளிக்கு
இயற்பெயர் | இலூயிசு கிளிக்கு Louise Glück |
---|---|
பிறப்புபெயர் | இலூயிசு எலிசபெத்து கிளிக்கு |
பிறந்ததிகதி | ஏப்ரல் 22, 1943 |
பணி |
|
தேசியம் | அமெரிக்கர் |
கல்வி |
|
காலம் | 1968–இன்று |
குறிப்பிடத்தக்க விருதுகள் |
|
இலூயிசு எலிசபெத்து கிளிக்கு (Louise Elisabeth Glück; /ɡlɪk/;[1][2]; பிறப்பு: ஏப்பிரல் 22, 1943) ஓர் அமெரிக்கக் கவிஞரும் கட்டுரையாளரும் ஆங்கில மொழிப் பேராசிரியரும் ஆவார். "சீரிய அழகுடன் தனி இருப்பை உலகளாவியதாக்குகிறது" என்பதில் அவரது தெளிவுநிறைந்த கவிதைக் குரலுக்காக, 2020-ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[3] இவர் தேசிய மனிதநேய பதக்கம், புலிட்சர் பரிசு உட்பட அமெரிக்காவில் வழங்கப்படும் பல முக்கிய இலக்கிய விருதுகளை வென்றுள்ளார். தேசிய புத்தக விருது, தேசிய புத்தக விமர்சகர்கள் வட்டம் விருது, மற்றும் பொலிங்கன் பரிசு போன்றவை இவர் பெற்ற மேலும் சில விருதுகளாகும். 2003 முதல் 2004 வரை, அமெரிக்காவின் கவிஞர் பரிசு பெற்றவர். கிளிக்கு பெரும்பாலும் சுயசரிதைக் கவிஞர் என்று விவரிக்கப்படுகிறார்; அவரது படைப்புகள் உணர்ச்சிக் கூர்மைக்கும், பலகாலும் வரலாறு, தொன்மக்கதைகள், தன் தனிப்பட்ட துய்ப்புணர்வுகள், உள்ளாழ்ந்து நிற்றல் போன்றவற்றிலிருந்து உள்வாங்கி தற்கால வாழ்க்கையைக் காட்டுவதாகக் கருதுகின்றார்கள்.
கிளிக்கு நியூயார்க்கு நகரில் பிறந்து நியூயார்க்கின் இலாங்கு தீவில் வளர்ந்தார். அவர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது அனோரெக்குசியா நெர்வோசாவா நோயினால் தாக்குண்டார். பின்னர் நோயில் இருந்து விடுபட்டார். அவர் சாரா இலாரன்சு கல்லூரியிலும் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் வகுப்புகள் எடுத்தார், ஆனால் பட்டம் பெறவில்லை. ஒரு எழுத்தாளராக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தது தவிர, பல நிறுவனங்களில் பாக்கள் எழுதக் கற்றுத்தரும் ஆசிரியராக பல கல்வி நிறுவனங்களில் பணி புரிந்தார்.
கிளிக்கு தனது படைப்புகளில், அதிர்ச்சி, இயற்கை, ஆசை போன்றவற்றை வெளிச்சம் ஊட்டிக் காட்டினார். இந்த பரந்த கருப்பொருள்களை ஆராய்வதில், அவரது கவிதை சோகம் மற்றும் தனிமை ஆகியவற்றின் வெளிப்படையான வெளிப்பாடுகளுக்கு பெயர் பெற்றது. அவரது கவிதைகளில், சுயசரிதை மற்றும் கிளாசிக்கல் புராணங்களுக்கு இடையில், அவரது கவிதை ஆளுமை மற்றும் உறவு குறித்தும் அறிஞர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
தற்போது, கிளிக் யேல் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகவும், உரோசன்கிரான்சு எழுத்தாளர் திட்டத்திலும் உள்ளார். இவர் மாசசூசெட்சு, கேம்பிரிட்சில் வசிக்கிறார்.[4]
தொடக்கக் கால வாழ்க்கை
இலூயிசு கிளிக்கு ஏப்ரல் 22, 1943 இல் நியூயார்க் நகரில் பிறந்தார். தானியேல் கிளிக்கிற்கும் பியாற்றிசு குரொசுபிக்கும் பிறந்து உயிர்த்திருக்கும் இரு மகள்களில் மூத்த மகள் ஆவார்.[5]
கிளிக்கின் தந்தைவழி தாத்தா பாட்டி, அமெரிக்காவுக்குக் குடியேறிய அங்கேரிய யூதர்கள். அங்கு அவர்கள் இறுதியில் நியூயார்க்கில் ஒரு மளிகை கடை வைத்திருந்தனர். கிளிக்கின் தந்தை அமெரிக்காவில் பிறந்த அவரது குடும்பத்தின் முதல் உறுப்பினர். அவர் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்டிருந்தார், ஆனால் அவரது மைத்துனருடன் வியாபாரத்தில் இறங்கினார்.[6] இணைந்து இயங்கி [எக்சு-ஆக்டோ|எக்சு-ஆக்டோ கத்தி]] யைக் கண்டுபிடித்த பின்னர் வெற்றி பெற்றனர்.[7] குளூயிக்கின் தாய் வெல்லசிலி கல்லூரியில் பட்டம் பெற்றவர். சிறு வயதிலிருந்தே, இலூயிசு கிளிக்கு தனது பெற்றோரிடமிருந்து கிரேக்கத் தொன்மக்கதைகள் பற்றிய ஒரு கல்வியையும், சோன் ஆர்க்கின் வரலாறு போன்றவற்றைப் பற்றிய அறிவையும் பெற்றார்.[8] சிறு வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார் [9]
மேற்கோள்கள்
- ↑ "Louise Glück wins Nobel Prize for Literature". October 8, 2020. https://www.bbc.com/news/entertainment-arts-54447291.
- ↑ "Say How? - National Library Service for the Blind and Print Disabled". அமெரிக்கக் காங்கிரசு நூலகம். https://www.loc.gov/nls/about/organization/standards-guidelines/efgh/#g. பார்த்த நாள்: October 8, 2020.
- ↑ "Summary of the 2020 Nobel Prize in Literature" இம் மூலத்தில் இருந்து October 8, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201008121718/https://www.nobelprize.org/prizes/literature/2020/summary/.
- ↑ "Louise Glück | Authors | Macmillan" (in en-US). https://us.macmillan.com/author/.
- ↑ Morris, Daniel (2006). The Poetry of Louise Glück: A Thematic Introduction. Columbia: University of Missouri Press. பக். 25. https://archive.org/details/poetrylouisegluc00morr.
- ↑ Glück, Louise (1994). Proofs & Theories: Essays on Poetry. New York: The Ecco Press. பக். 5.
- ↑ Weeks, Linton (29 August 2003). "Gluck to be Poet Laureate". The Washington Post. https://www.washingtonpost.com/archive/lifestyle/2003/08/29/gluck-to-be-poet-laureate/c168beab-27d5-4b4d-8156-e5b6dbe99598/.
- ↑ Glück, Louise. Proofs & Theories: Essays on Poetry. பக். 7.
- ↑ Glück, Louise. Proofs & Theories: Essays on Poetry. பக். 8.
வெளி இணைப்புகள்
- அவெர்னோவின் முழு உரையும் தி மிதக்கும் நூலகத்தில் கிடைக்கிறது
- காங்கிரசின் நூலகத்திலிருந்து இலூயிசு குளூயிக்கு இணையவழி வளங்கள்
- இலூயிசு குளூயிக்கின் தன்வரலாறு, அமெரிக்க அகாடமி ஆஃப் சாதனை பற்றிய நேர்காணல்
- குளூயிக்கின் இயேல் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் உள்ள குறிப்புகள்
- பாசுட்டன் பல்கலைக்கழக கிரியேட்டிவ் எழுத்துத் துறையில் குளூயிக்கின் வாழ்க்கைக் குறிப்புகள்
- Poets.org இல் இலூயிசு குளூயிக்கு
- இலூயிசு குளூயிக்கு: தற்கால அமெரிக்கக் கவிதைகள், ஆங்கிலத் துறை, அர்பானா-சாம்பேனில் இல்லினாய் பல்கலைக்கழகத்திலிருந்து இணையவழி வளங்கள்
- உரையாடலில் இலூயிசு குளூயிக்கு பரணிடப்பட்டது 2016-12-29 at the வந்தவழி இயந்திரம்
- கிரிஃபின் கவிதை பரிசு வாழ்க்கை வரலாறு
- காணொலி - கிரிஃபின் கவிதை பரிசு வாசிப்பு
- இலூயிசு குளூயிக்கு - நான் கருதுவதை மட்டுமே நேசிக்க முடியுமா?
- லூயிஸ் க்ளூக் பேப்பர்ஸ் . அமெரிக்க இலக்கியத்தின் இயேல் தொகுப்பு, பீனிக்கு அரிய புத்தகம், கையெழுத்து நூலகம்.
- Louise Glück Online resources from the Library of Congress
- Louise Glück Papers. Yale Collection of American Literature, Beinecke Rare Book and Manuscript Library.