அரங்கத்தில் நிர்வாணம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அரங்கத்தில் நிர்வாணம்
அரங்கத்தில் நிர்வாணம்
நூலாசிரியர் இ. தியாகலிங்கம்
பதிப்பாசிரியர் இ. தியாகலிங்கம்
முதற் பதிப்பு
குரல்
கொடுத்தவர்
கஸ்தூரி
உண்மையான
தலைப்பு
அரங்கத்தில் நிர்வாணம்
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
அரங்கத்தில் நிர்வாணம்
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
2
பொருண்மை குடும்ப வாழ்க்கை
வெளியிடப்பட்டது May 23, 2016
முதலாவது பதிப்பு
ஊடக
வகை
புத்தகம், ஒலிப்புத்தகம்
பக்கங்கள் 132
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
9781667160184
முன்னைய
நூல்
சர்வ உரூபிகரம்
அடுத்த
நூல்
வப்பு நாய்

ஈழத்தைவிட்டு புலம் பெயர்ந்த எமது முதற் பரம்பரையின் வாழ்வு அனுபவம் எப்படி இருந்ததென்பதைப் பொறுத்து அவர்கள் சமுதாய எல்லைகள் வகுக்கப்பட்டன. அவர்கள் புலம்பெயர்ந்த போதும், தாங்கள் சிறுபிராயத்தில், தமது நாட்டில் கற்ற சமுதாய எல்லைகளைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தனர். கடைப் பிடிக்க போராடுகின்றனர். அந்த எல்லைகளே உலகில் உன்னதமானது என்பதை வலுவாக நம்புகின்றனர். தங்களது அதே சமுதாய எல்லைகளை தங்கள் பிள்ளைகள் மேலும் கண்மூடித்தனமாய் திணிக்கின்றனர். தங்களால் எது சரியான எல்லை என்று கணிக்கப்படுகிறதோ அதற்குள் அவர்களும் நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்நாவலில் விட்டுக்கொடுப்பில்லாத எதிர்பார்ப்பு உறவின் முறிவுகளை வரவழைக்கின்றது. எமது இரண்டாம் தலைமுறையினரிடம் எங்கள் கலாசாரத்தைத் திணிப்பதற்குக் காட்டும் அக்கறையை அவர்களோடு சேர்ந்து, அவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் ஊட்டுவதில், அவர்களின் பால்யப் பிராயத்தில் செலவிடத்; தவறிவிடுகிறோம் என்பதை வலிமையாகச் சொல்லமுனைகின்றது. தனிமையில் அல்லது நிறுவனங்களில் காலத்தை போக்கும் பிள்ளைகள், தொலைக்காட்சி, நண்பர்கள், ஆசிரியர் என்பதாக அவர்களின் சமுதாயத்தில் ஒன்றி அந்த எல்லைகளை வரித்துக் கொள்கிறார்கள். சங்கீதமோ தமிழ் வகுப்புகளோ அவர்கள் சிந்திக்கும் மொழியையும், சிந்திக்கும் விதத்தையும், இந்தச் சமுதாயத்தைப் பார்க்கும் முறையையும் மாற்றிவிட முடியாதுள்ளது. பிள்ளைகள் பெரியவர்கள் ஆனவுடன் அவர்கள் பெற்றோரின் கட்டுப்பாட்டை மீறி தமது எல்லைகளுக்குள் உள்ள சுதந்திரத்தை எடுக்க இது வழிவகுக்கின்றது. பெற்றோரால் அதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. விருப்பம் வேறு திணிப்பு வேறு. அதுவும் இங்கு எதையும் யார் மீதும் திணிக்க முடியாது. அது சட்ட விரோதம்கூட. அப்படித் திணித்தால் அவர்கள் பதின்ம வயது தாண்டியதும் தங்கள் சுதந்திரத்தை தாங்களே எடுத்துக் கொள்வார்கள். புகலிடத்தில் உள்ளவர்கள் தங்கள் வருங்காலச் சந்ததிகளைப் புரிந்து தங்களைத் தாயார் செய்து கொண்டால் வருங்காலச் சமுதாயத்தோடான உறவைப் பேணிக் கொள்ளலாம். மாற்றம் காலத்தின் கட்டாயம். அதற்கு மாறாக வளைந்து கொடுக்காவிட்டால் அவர்கள் வேறு ஒரு பிரபஞ்சத்தை நோக்கிப் பயணிக்கலாம். நாங்கள் என்ன செய்யப் போகின்றோம்? இந்நாவல் ஒரு விவாதத்தின் தொடக்கமாக இருக்கின்றது.

"https://tamilar.wiki/index.php?title=அரங்கத்தில்_நிர்வாணம்&oldid=16222" இருந்து மீள்விக்கப்பட்டது