ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
Jump to navigation
Jump to search
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை என்பது ஒரு சைவ நூல். இது பதினோராம் திருமுறைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று.
உலா என்பது ஒருவகைச் சிற்றிலக்கியம். கலிவெண்பாப் பாடலால் அமைவது.
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி.
காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. இராசராச சோழன் காலம்.
ஆளுடைய பிள்ளையார் என்பவர் திருஞானசம்பந்தர். நம்பியாண்டார் நம்பி இயற்றிய 10 நூல்களில் 6 நூல்கள் திருஞானசம்பந்தரின் புகழைப் பாடுபவை. அவற்றில் ஒன்று இந்த நூல்.
இந்த நூலிலுள்ள வரலாறு சேக்கிழார் பெரியபுராணம் செய்ய உதவியது.
- நூல் அமைதி
- இந்த நூலில் 143 கலிவெண்பாக் கண்ணிகள் அமைந்துள்ளன.
- பாடல் பாங்கு
- சம்பந்தர் வீதியில் உலாவந்த பாங்கு 116 கண்ணிகளில் சொல்லப்படுகின்றன. பிள்ளையார் உலா வருதலைப் பேதை முதல் பேரிளம்பெண் ஈறாக ஏழு பருவப் பெண்களும் பார்த்தனர் எனத் மொகுப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. மற்ற உலா நூல்களின் 7 பருவப்பெண்களும் தனித்தனியே வருணனை செய்யப்பட்டிருப்பர். இந்த உலாநூல் அவ்வாறு செய்யாமல் தொகுப்பாகச் சொல்லி அவர்களின் நிலை விளக்கப்பட்டுள்ளது.
காலம் கணித்த கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005