ஆள்கூறுகள்: 9°41′20″N 78°27′29″E / 9.689000°N 78.458100°E / 9.689000; 78.458100

மானாமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam
No edit summary
imported>Paramatamil
படம் சேர்க்கப்பட்டது
வரிசை 46: வரிசை 46:
===ரயில்கள்===
===ரயில்கள்===
[[File:Manamadurai Junction Platform 1.jpg|மானாமதுரை சந்திப்பு]]
'''1.[[ராமேசுவரம்]] -[[சென்னை எழும்பூர்]] விரைவு ரயில்'''(BOAT MAIL வழி: கடலூர், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர்)
'''1.[[ராமேசுவரம்]] -[[சென்னை எழும்பூர்]] விரைவு ரயில்'''(BOAT MAIL வழி: கடலூர், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர்)

06:45, 19 மார்ச்சு 2023 இல் நிலவும் திருத்தம்

மானாமதுரை நகராட்சி
மானாமதுரை நகராட்சி
அமைவிடம்: மானாமதுரை நகராட்சி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°41′20″N 78°27′29″E / 9.689000°N 78.458100°E / 9.689000; 78.458100
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
வட்டம் மானாமதுரை வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

50,257 (2021)

3,723/km2 (9,643/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

13.5 சதுர கிலோமீட்டர்கள் (5.2 sq mi)

90 மீட்டர்கள் (300 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.tnmunicipality.in/manamadurai


மானாமதுரை (Manamadurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

இது சிவகங்கைக்கு தெற்கே 18 கி.மீ. தொலைவிலும், மதுரைக்கு கிழக்கே 49 கி.மீ. தொலைவிலும், பரமக்குடிக்கு மேற்கே 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு மானாமதுரை தொடருந்து சந்திப்பு நிலையம் உள்ளது.[4]

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகராட்சி 12,032 வீடுகளும், 50,257 மக்கள்தொகையும் கொண்டது.[5]

இது 13.5 ச.கி.மீ. பரப்பும், 27 வார்டுகளும், 124 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சியானது மானாமதுரைக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

2021-இல் மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்

மானாமதுரை பேரூராட்சியை 16 அக்டோபர் 2021 அன்று மானாமதுரை நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[7][8]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9°42′N 78°29′E / 9.7°N 78.48°E / 9.7; 78.48 ஆகும்.[9] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 70 மீட்டர் (229 அடி) உயரத்தில் இருக்கின்றது.

இவ்வூரின் சிறப்பு

இப்பகுதியிலுள்ள களிமண் வளம் மிக்கதாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் கலை நயமுள்ள பொம்மைகள், பூ தொட்டி, மண் பானை, கொடியடுப்பு, செங்கல், கூரை ஓடு, கடம் எனும் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை.[10][11][12] சித்திரை திருவிழா இங்கு முக்கியமான திருவிழாவாகும். உள்ளுர் மக்கள் மற்றும் வெளியூர் மக்கம் அதிகமாக கலந்து கொள்வார்கள். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (சிப்காட்) இங்குள்ளது.

மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.[13]

போக்குவரத்து

பேருந்து

மதுரையிலிருந்து ராமேசுவரத்திற்கு 15 நிமிடத்திற்கு ஒரு விரைவு பேருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து கமுதி, சாயல்குடி, ஏர்வாடி, முதுகளதுர், ராமநாதபுரம் செல்லும் விரைவுப் பேருந்துகள் மானாமதுரை பேருந்து நிலையத்தில் நின்று செல்வது வழக்கம், மேலும் இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, அருப்புக்கோட்டை, இளையான்குடி, பரமக்குடி, தாயமங்களம், திருப்புவனம் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தொடருந்து

ரயில்கள்

மானாமதுரை சந்திப்பு

1.ராமேசுவரம் -சென்னை எழும்பூர் விரைவு ரயில்(BOAT MAIL வழி: கடலூர், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர்)

2. சென்னை எழும்பூர்-ராமேசுவரம் விரைவு ரயில்(BOAT MAIL வழி: கடலூர், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர் →திருச்சி)

3.ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் (சேது விரைவு வண்டி)(வழி: விழுப்புரம், அரியலூர்,ஶ்ரீரங்கம் →திருச்சி)

4. சென்னை எழும்பூர்-செங்கோட்டை(சிலம்பு விரைவுத் தொடருந்து)

5.கன்னியாகுமரி-புதுச்சேரி(PONDY EXPRESS)

6.திருவனந்தபுரம் சென்ட்ரல் - நாகர்கோவில்-வேளாங்கண்ணி(TVC VLNK link Express)

7.கோயம்புத்தூர்-திருப்பதி-ராமேஸ்வரம்-மதுரை-கோயம்புத்தூர் (Round trip)(Intercity Exp.)(Manamadurai Express/TPTY-RMM SF express)

8.பைசபாத்-இராமேஸ்வரம்(ஷ்ரத்தா சேது எக்ஸ்பிரஸ்)

9.புவனேசுவரம்-ராமேஸ்வரம் விரைவு தொடருந்து

10.ஓகா-ராமேஸ்வரம்

11.வாரணாசி(பனாரஸ்) - ராமேஸ்வரம் விரைவு தொடருந்து போன்ற ரயில்கள் மானாமதுரை சந்திப்பு தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது.

மருத்துவமனைகள்

  • தொழுநோய் சுகாதார மருத்துவமனை, தயாபுரம்
  • அரசு மருத்துவமனை

கல்வி நிறுவனங்கள்

பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. மானாமதுரை சந்திப்பு
  5. Manamadurai city Population Census 2011
  6. மானாமதுரை நகராட்சியின் இணையதளம்[தொடர்பிழந்த இணைப்பு]
  7. kumbakonam corporaon and 19 muniicipalites
  8. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
  9. "Manamadurai". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
  10. "மானாமதுரை மட்பாண்டம்". Archived from the original on 2016-03-04. Retrieved 2013-06-21.
  11. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pongal-keeps-pot-industry-alive/article676432.ece
  12. http://newindianexpress.com/cities/bangalore/article520709.ece?service=print
  13. மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மானாமதுரை&oldid=192817" இலிருந்து மீள்விக்கப்பட்டது