வேளாங்கண்ணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வேளாங்கண்ணி
—  பேரூராட்சி  —
வேளாங்கண்ணி
இருப்பிடம்: வேளாங்கண்ணி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°40′54.8″N 79°50′37.3″E / 10.681889°N 79.843694°E / 10.681889; 79.843694Coordinates: 10°40′54.8″N 79°50′37.3″E / 10.681889°N 79.843694°E / 10.681889; 79.843694
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
வட்டம் கீழ்வேளூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
பெருந்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன்
மக்கள் தொகை 11,108 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


29 மீட்டர்கள் (95 அடி)

குறியீடுகள்


வேளாங்கண்ணி (Velankanni), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில், கீழ்வேளூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், சிறப்புநிலை பேரூராட்சியும் ஆகும். இங்கு தூய ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்ளது. வேளாங்கண்ணி நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

அமைவிடம்

நாகப்பட்டினத்திற்கு தெற்கில் 13 கிமீ தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாங்கண்னி அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

15 வார்டுகளும் கொண்ட இப்பேரூராட்சி நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2753 வீடுகளும், 11,108 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்

வேளாங்கண்ணி தமிழகத்திலும் இந்திய நாட்டிலும் தலைசிறந்த கத்தோலிக்க திருத்தலமாக விளங்குகிறது. அன்னை மரியா காட்சி கொடுத்த இடத்தில் கட்டப்பட்டுள்ள தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. எல்லாச் சமயங்களைச் சேர்ந்த திருப்பயணிகளும் அங்குச் சென்று, அன்னை மரியாவுக்குப் பொருத்தனைகள் செலுத்தி, காணிக்கைகள் அளித்து, செபங்கள் ஒப்புக்கொடுக்கிறார்கள். நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்வோர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவது கண்டு நன்றிக் காணிக்கைகளும் வழங்குகிறார்கள்.

படத் தொகுப்பு

Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வரும்.,
Velankanni
என்பதின் ஊடகங்கள் Wikimedia-விலும் உள்ளன.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-10-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
  4. Velankanni Population Census 2011
  5. Velankanni Town Panchayat

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:நாகப்பட்டினம் மாவட்டம்

"https://tamilar.wiki/index.php?title=வேளாங்கண்ணி&oldid=119996" இருந்து மீள்விக்கப்பட்டது