காரைக்குடி மாநகராட்சி
காரைக்குடி மாநகராட்சி மார்ச் 15 2024 அன்று காரைக்குடி நகராட்சியிலிருந்து தரம் உயர்த்தப்பட்டதற்கான ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. [1]காரைக்குடி நகராட்சியானது 2013ம் ஆண்டு முதல் சிறப்பு நிலை பெரு நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பில் காரைக்குடியில் 2022 நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 234523 உள்ளது [2]. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை மூன்று லட்சத்துதிற்கு மேல் உள்ளது
உள்ளது. 100.வார்டுகளுடன் செயல்பட்டு வரும் மாநகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ. 57.05 கோடியாகும்.
காரைக்குடி நகராட்சி மற்றும் 2 பேரூராட்சிகள் மற்றும் 5 ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சியாக தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி காரைக்குடி நகராட்சியில் மாநகராட்சியோடு இணைக்கப்படும் காரைக்குடி புறநகர் பகுதிகளான கோட்டையூர், கண்டனூர் பேருராட்சிகள் மற்றும் ஊராட்சிகளான அரியக்குடி, இலுப்பைக்குடி, சங்கராபுரம், மானகிரி, கோவிலூர் ஆகிய பகுதிகளும் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் காரைக்குடி மாநகராட்சி 2.56 லட்சம் மக்கள் தொகையும் 96 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக விரிவடைகிறது. மாநகராட்சியின் மொத்த வருவாய் ரூபாய் 57.5 கோடியாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.[3]
காரைக்குடி மாநகராட்சியை இயக்கும் காரணிகள்
- மக்கள் தொகை வளர்ச்சி.
- சராசரி ஆண்டு வருமான அதிகரிப்பு.
- சாலைகளை மேம்படுத்துதல்.
- குடிநீர் வழங்குதல்.
- நிலப்பரப்பை மேம்படுத்துதல்.
- கழிவு மேலாண்மை.
- தொழில்துறை அமைப்புகளை நிறுவுதல்.
- கழிவுநீர் இணைப்பு வழங்குதல்.
மேற்கோள்கள்
- ↑ "அரசு அறிவிப்பு". இந்து தமிழ். இந்து தமிழ் (இந்து தமிழ்). 15 March 2024. https://www.hindutamil.in/news/tamilnadu/1215939-karaikudi-as-a-corporation.html. பார்த்த நாள்: 3 April 2024.
- ↑ "மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு". தினமணி. தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2022/May/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-3844557.html. பார்த்த நாள்: 14 May 2024.
- ↑ "தமிழக அரசின் அரசாணை செய்திகள்". தினகரன். தினகரன். https://www.dinakaran.com/pudukottai_namakkal_tiruvannamalai_karaikudi_4municipalities_municipalcorporation_upgradation_m-k-stalin/. பார்த்த நாள்: 3 April 2024.