யுவராணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
யுவராணி
பிறப்பு30 நவம்பர் 1974 (1974-11-30) (அகவை 50)
இந்தியா
மற்ற பெயர்கள்யுவராணி ரவீந்திரன்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1990–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ரவீந்திரன்
(2000-இன்று வரை)

யுவராணி என்பவர் தமிழ்த் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 1990-இல் இருந்து செந்தூரப் பாண்டி (1993), பாட்ஷா (1995), செல்லக்கண்ணு (1995) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சித்தி (1999-2001) மற்றும் தென்றல் (2009-2015) போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் தொலைக்காட்சித்துறையில் மிகவும் புகழ் பெற்ற நடிகை ஆனார்.

நடிப்புத் துறை

இவர் முதல் நடிக்க ஒப்பந்தம் செய்த திரைப்படம் தம்பி ஊருக்கு புதுசு ஆனால் திரைப்படம் வெளியிடுவதற்கு தாமதம் ஆனதால் கை. பாலசந்தர் இயக்கிய அழகன் என்ற திரைப்படம் மூலம் 1991-இல் நடிப்புத்துறைக்கு அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனான மம்முட்டியும் மற்றும் நாயகியாக பானுப்பிரியா, மதுபாலா ஆகியோர் நடித்துள்ளாரர்கள். இதே ஆண்டில் தம்பி ஊருக்கு புதுசு என்ற திரைப்படத்தில் ஜெயந்தி என்ற கதாபாத்திரம் மூலம் நடிகர் செல்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனந்த் ராஜ், ஸ்ரீவித்யா, வடிவுக்கரசி, கவுண்டமணி போன்ற பலர் நடித்துள்ளார்கள். 1992-இல் இயக்குனர் எஸ்.ஏ. ராஜ்குமார் இயக்கிய புது வருஷம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

1993-இல் ஜாதி மல்லி என்ற திரைப்படத்தில் முகேஷ், குஷ்பூ, வினீத் ஆகியோருடன் நடித்துளளார். இத்திரைப்படத்தை கை. பாலசந்தர் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.[1] அதே ஆண்டில் கங்கை அமரன் இயக்கிய கோயில் காளை திரைப்படத்தில் உஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இளையராஜா இசை அமைக்க, விஜயகாந்த், கனகா, சுஜாதா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2] மற்றும் மின்மினி பூச்சிகள் என்ற திரைப்படத்தில் நடிகர் நெப்போலியனுக்கு ஜோடியாக நடித்தார். நடிகர் வெங்கடேஷ் நடித்த கோண்டப்பள்ளி ராஜா என்ற தெலுங்கு மொழித் திரைப்படம் மூலம் தெலுங்கு திரைப்படத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி நடித்த முத்தா மேஸ்திரி என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். மாபியா என்ற மலையாள மொழித் திரைப்படத்தில் சுதா என்ற கதாபாத்திரம் மூலம் மலையாளத்து திரைபபடத்துறையில் அறிமுகமானர். அதை தொடர்ந்து செந்தூரப் பாண்டி என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய்யும் ஜோடியாக நடித்துள்ளர். இந்த திரைப்படத்தில் விஜயகாந்த், கவுதமி, மனோரமா போன்ற பலர் நடித்துள்ளனர்.[3][4]

1994-இல் இயக்குனர் திலீப் குமார் இயக்கிய சின்ன மேடம் என்ற திரைப்படத்தில் ராம்கி, நதியா, வினிதா ஆகியோருடன் நடித்துள்ளார். அதே ஆண்டில் நிலா என்ற திரைப்படத்திலும் வீரமணி என்ற திரைபபடத்திலும் நடித்தார். இந்த திரைப்படத்தை பிரேம் மேனன் என்பவர் நடித்து மற்றும் இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக இவர் நடித்தார்.

1995-இல் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்க்கு தங்கையாக கீதா என்ற துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் நடித்த திரைப்படங்களில் இந்த திரைப்படம் தான் அதிக வசூல் செய்தத் திரைப்படமாகும். அதைத் தொடர்ந்து பசும்பொன் என்ற திரைப்படத்திலும் மற்றும் செல்லக்கண்ணு என்ற காதல் திரைப்படத்தில் நடிகர் விக்னேஷ்க்கு ஜோடியாக நடித்தார். தேவா இசை அமைத்துள்ளார்.

தொலைக்காட்சித் துறை

1996-இல் கை. பாலசந்தர் இயக்கிய காதல் பகடை என்ற தொலைக்காட்ச்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 1999-இல் சித்தி என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் இவருக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது.[5][6] இவர் திரைபபடங்களில் நடித்து பிரபலாமனதை விட இந்த தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஆனார்.

மேற்கோள்கள்

  1. "Kush's message about legendary director". www.apherald.com. 15 October 2019.
  2. "Adrasakka Adrasakka Adrasakka: A Tribute To Goundamani On His Birthday". silverscreen.in. 25 May 2019. Archived from the original on 14 ஆகஸ்ட் 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "விஜய்யுடன் அறிமுகமான நாயகி இப்படி ஆகிவிட்டாரே!". tamil.samayam.com. Jul 14, 2018,. {{cite web}}: Check date values in: |date= (help)CS1 maint: extra punctuation (link)
  4. "எப்படியெல்லாம் பழகி இருக்கோம்! இப்போ ஒரேயடியாக மாறிவிட்டார் விஜய்!..." /tamil.asianetnews.com. 17 October 2018.
  5. "A formula one serial". The Hindu. 2001-10-10. Archived from the original on 2009-07-04. பார்க்கப்பட்ட நாள் 2013-10-13.
  6. "Yuvarani". nettv4u.com. Archived from the original on 27 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 20 April 2015.
"https://tamilar.wiki/index.php?title=யுவராணி&oldid=23248" இருந்து மீள்விக்கப்பட்டது