மதுபாலா (தமிழ் நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மதுபாலா
Madhoo Bhung.jpg
இயற் பெயர் மதுபாலா ரகுநாத்
பிறப்பு 26 மார்ச் 1972
துணைவர் ஆனந்த் ஷா (19 பெப்ரவரி 1999)

மதுபாலா (முழுப்பெயர்: மதுபாலா ரகுநாத், பிறப்பு:மார்ச் 26, 1972) ஓர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை. மதுபாலா மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் இந்தித் திரைப்பட நடிகை மதுபாலாவின் நினைவாக பெற்றோர் இவருக்கு இந்தப்பெயர் சூட்டினர். அசோக் குமார், தேவ் ஆனந்த், மோகன்லால், மம்முட்டி, அக்க்ஷய் குமார், ரிஷி கபூர், ஜீதேந்திரா, நசிருத்தீன் ஷா, அர்ஜூன், பிரபு தேவா, பிரபு, மிதுன் சக்கரவர்த்தி, ஜாக்கி செராஃப், கோவிந்தா, அஜய் தேவ்கான், சைய்ஃப் அலி கான், நானா படேகர் எனப் பலருடன் நடித்துள்ளார்.

மதுபாலாவின் முதல் திரை அறிமுகம் மலையாளத் திரைப்படம் ஒத்தயாள் பட்டாளத்தில் நிகழ்ந்தது. தமிழ் திரைபடங்களில் முதன்முதலாக கே.பாலச்சந்தரின் "அழகன்" திரைப்படத்தில் மம்முட்டி, பானுப்பிரியா மற்றும் கீதா ஆகியோருடன் நடித்தார். இந்தித் திரைப்படங்களில் முதல் படமாக மற்றொரு புதுமுக நடிகராக அறிமுகமான அஜய் தேவ்கன்னுடன் இணையாக நடித்த "பூல் ஔர் கான்ட்டே" என்ற திரைப்படம் அமைந்தது. 1992ஆம் ஆண்டில் வெளியான மணிரத்தினத்தின் ரோஜாவில் கதாநாயகியாக நடித்தது அவரைப் பரவலாக அறிய வைத்தது. பெப்ரவரி 19,1999 அன்று ஆனந்த் ஷாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமேயா (நவம்பர் 16, 2000), கீயா (நவம்பர் 9, 2002) என்ற இரு பெண்கள் உள்ளனர்.[1] 2010-11ல் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செளந்திரவல்லி தொடரின் மூலம் தொலைக்காட்சித் தொடர்களில் அறிமுகமானார்.[2]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மதுபாலா_(தமிழ்_நடிகை)&oldid=23151" இருந்து மீள்விக்கப்பட்டது