பிரித்விராஜ் சுகுமாரன்
பிரித்விராஜ் சுகுமாரன் | |
---|---|
Prithviraj Sukumaran in 2009 | |
பிறப்பு | பிரித்விராஜ் சுகுமாரன் 16 அக்டோபர் 1982 திருவனந்தபுரம், கேரளா |
பணி | நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 2002 – அறிமுகம் |
வாழ்க்கைத் துணை | சுப்ரியா மேனன் (2011-அறிமுகம்) |
உறவினர்கள் | சுகுமாரன் (அப்பா) மல்லிகா சுகுமாரன் (அம்மா) இன்ஜித் சுகுமாரன் (அண்ணா) பூர்ணிமா இன்ஜித் (அண்ணி) |
விருதுகள் | கேரள மாநில திரைப்பட விருது சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருது: சிறந்த நடிகர் – 2006, 2012 |
வலைத்தளம் | |
www.augustcinemaindia.com |
பிரித்விராஜ் சுகுமாரன் (பிறப்பு: 1982 அக்டோபர் 16) ஓர் இந்திய நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற மலையாள மொழித் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உருமி உள்ளிட்ட 80 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.
இவர் 2006 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான கேரள மாநிலத் திரைப்பட விருதை வென்றார்.
ஆரம்பகால வாழ்க்கை
பிரித்விராஜ் அக்டோபர் 16, 1982 ஆம் ஆண்டு திருவனந்தபுரம், கேரளாவில் பிறந்தார். இவரின் தந்தை சுகுமாரன் ஒரு நடிகர். தாயார் மல்லிகா சுகுமாரனும் ஒரு நடிகை ஆவார். இவருக்கு இந்திரஜித் சுகுமாரன் என்ற ஒரு மூத்த சகோதரர் உண்டு. இவர் மலையாளம், தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் மனைவி பூர்ணிமா இந்திரஜித்தும், இவரும் சில மலையாளம், தமிழ்த் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகது.
தனிப்பட்ட வாழ்க்கை
ஏப்ரல் 25, 2011ம் ஆண்டு பிபிசி இந்தியத் தொலைக்காட்சி செய்தியாளர் சுப்ரியா மேனனைத் திருமணம் செய்து கொண்டார்.
சினிமா வாழ்க்கை
மலையாளம் சினிமா
இவர் 2002 ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில் நந்தனம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து புதிய முகம், போக்கிரி ராஜா, அன்வர், உருமி உள்ளிட்ட 60க்கும் மேல் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா (கோலிவுட்)
2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, 2008 ஆம் ஆண்டு வெள்ளித்திரை 2009 ஆம் ஆண்டு நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். 2010 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ராவணன் என்ற திரைப்படத்தில் நடித்தார். தற்பொழுது வசந்தபாலன் இயக்கும் காவிய தலைவன் என்ற திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் உடன் இணைத்து நடித்தார்.
தெலுங்கு சினிமா
2010 ஆம் ஆண்டு போலிஸ் போலிஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்த சில திரைப்படங்கள் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
இந்தி சினிமா
2012 ஆம் ஆண்டு ஐய்யா என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவுரங்கசீப் என்ற திரைப்படத்திலும் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருடன் சேர்த்து அர்ஜுன் கபூர் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.
தயாரிப்பாளர்
இவர் ஆகஸ்ட் சினிமா என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்துகின்றார். இந்தத் திரைப்பட நிறுவனத்தின் மூலம் உருமி, இந்திய ரூபாய், கடல் கடன்னு ஒரு மாதுகுட்டி, டபுள் பேரல் போன்ற திரைப்படங்களை தயாரித்து பல விருதுகளையும் வென்றார்.
திரைப்படங்கள்
பின்னணி பாடகர்
இவர் புதிய முகம், தாந்தோன்னி, போக்கிரி ராஜா, அன்வர், உருமி, ஹீரோ, செவன்த் டே போன்ற திரைப்படங்களில் சில பாடல்களை பாடியுள்ளார்.
வெளி இணைப்புகள்
- ↑ "சினிம" (in மலையாளம்). மலையாளம் வார இதழ். 2013 மார்ச்சு 08 இம் மூலத்தில் இருந்து 2016-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306112038/http://malayalamvaarika.com/2013/march/08/essay4.pdf. பார்த்த நாள்: 2013 ஜூப் 10.