பாமா (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பாமா
பிறப்புரெகிதா ராஜேந்திர குறூப்பு
1989
மண்ணார்க்காடு, கோட்டயம், கேரளா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2007 - தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
அருண் ஜெகதீஸ்

பாமா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ், மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2007 ஆம் ஆண்டில் ஏ. கே. லோகித்தாசு இயக்கிய நிவேத்யம் திரைப்படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமானார். "எல்லாம் அவன் செயல்" திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.

வாழ்க்கைச் சுருக்கம்

ராஜேந்திர குறுப்பு, ஷைலஜா ஆகியோரின் இளைய மகள் ஆவார். இவருக்கு ரேச்மிதா, ரெஞ்சிதா என இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். இவர் புனித மேரி மேல்நிலை பள்ளியிலும், மண்ணார்க்காட்டில் உள்ள குழந்தை இயேசு பள்ளியிலும் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். இவா் பெற்றோரின் அனுமதியோடு பாரத்கோபி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டாா். [1] இவர் தொலைநிலைக்கல்வி வாயிலாக இளங்கலை சமூகவியல் படிக்க தொடங்கியுள்ளார்.[2]

திரை வாழ்க்கை

இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன்னதாக, சூர்யா தொலைக்காட்சியில் தாலி என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினார். இவர் ஒரு கிறித்துவ பக்தி ஆல்பத்திலும் நடித்துள்ளார். இவர் அறிமுகமான நிவேத்யம் திரைப்படத்தின் இயக்குநரான லோகிததாசை தனது வழிகாட்டியாளராகவும் குருவாகவும் கருதுகிறார். வினயன் இயக்கத்தில் மணிக்குட்டன் நடித்த அரீந்தரன் ஒரு நிஷ்களங்கன் திரைப்படம் இவரது இரண்டாவது திரைப்படமாகும். ஜானி ஆண்டனி இயக்கிய சைக்கிள் திரைப்படத்தில் வினீத் சீனிவாசனுடன் இணைந்து நடித்தார்.

2011-ம் ஆண்டில் மலையாளத்தில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததால் இவர் தனது பார்வையை கன்னட திரையுலகிற்கு திருப்பினார். சில கன்னட திரைப்படங்களில் நடித்த பிறகுதான் மலையாளத்தில் புதுமையான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாக கூறுகிறார்..[3] இவர் எம். டி. வாசுதேவன் நாயரின் கதவீடு திரைப்படத்தில் கதாநாயகியாக ஒரு நவீன பெண் வேடத்தில் நடித்தார். வினோத் விஜயனின் டி கம்பெனி திரைப்படத்தில் முக அலங்காரம் ஏதும் செய்யாமல் ஒரு சிறிய ஆனால் முக்கியமான கதாபாத்திரத்தில் சைக்கோவாக நடித்தார்.[3] ராகேஷ் கோபனின் 100 டிகிரி செல்சியஸ் திரைப்படத்தில் கிறிஸ்துவ இல்லத்தரசியாக நடித்தார். இவர் முதல் முறையாக வினோத் மாங்கரா இயக்கிய ஒட்டமந்தாரம் திரைப்படத்தில் தன்னை விட 15 வயது அதிகமான அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார்.[4]

பின்னணி பாடகி

நடிகையாக மட்டுமல்லாமல் சில நேரங்களில் இவர் சிறந்த பின்னணி பாடகியாகவும் திகழ்கிறார். இவர் தனது முதல்பாடலை பைக் திரைப்படத்தில் ராகுல்ராஜ் இசையில் கண்ணில் கண்ணில் எனும் பாடலை பாடினாலும்கூட சில காரணங்களால் அத்திரைப்படம் திரைக்கு வராமல் போனது.[5][6] அதன்பின்னர் 2009-ல் வெளியான மாய மாதவம் எனும் பக்தி ஆல்பத்தில் பாடியுள்ளார்.[7] மேலும் சிறுவர்கள் நடித்து வெளிவரவிருக்கும் மியாவ் மியாவ் கரிம்பூச்சா திரைப்படத்தில் ஆரம்ப பாடலை பாடியுள்ளார்..[8]

விருதுகள்

  • 2007 - சிறந்த ஜோடிக்கான ஏசியாநெட் திரைப்பட விருது - நிவேத்யம் (வினு மோகனுடன் பகிர்ந்துகொள்கிறார்)[9]
  • 2007 - சிறந்த அறிமுக நடிகைக்கான சத்யன் நினைவு விருது - நிவேத்யம்[10]
  • 2007 - சிறந்த அறிமுக நடிகைக்கான திரைப்பட விமர்சகர்கள் விருது - நிவேத்யம்[11]
  • 2007 - சிறந்த நடிகைக்கான ஆலா விருது - நிவேத்யம்[12]
  • 2007 - சிறந்த அறிமுக நடிகைக்கான வனிதா நிப்பான் விருது - நிவேத்யம்[13]
  • 2008 - சிறந்த ஜோடிக்கான அம்மா திரைப்பட விருது - சைக்கிள்
  • 2009 - சிறந்த ஜோடிக்கான மாத்ருபூமி-அம்ரிதா திரைப்பட விருது - இவார் விவாகித்தரயாள் (ஜெயசூர்யாவுடன் பகிர்ந்துகொள்கிறார்)[14]

நடித்த திரைப்படங்கள்

எண் ஆண்டு படம் மொழி பாத்திரம் குறிப்புகள்
1 2007 நிவேத்யம் மலையாளம் சத்யபாமா (அறிமுகம்)
2 ஹரீந்த்ரன் ஒரு நிஷ்களங்கன் மலையாளம் இந்து
3 சைக்கிள் மலையாளம் அன்னீ
4 2008 எல்லாம் அவன் செயல் தமிழ் சிந்தாமணி
5 ஒன் வே டிக்கெட் மலையாளம் சுனந்தா
6 2009 கலர்ஸ் மலையாளம் பூஜா
7 இவர் விவாஹிதராயால் மலையாளம் காவ்யா
8 ஒரு பிளாக் அன்ட் வொய்ட் குடும்பம் மலையாளம் மின்னு
9 2010 சகுடும்பம் சியாமலா மலையாளம் நந்தனா
10 நீலாம்பரி மலையாளம் பார்வதி
11 கூட்டுக்கார் மலையாளம் அஸ்வதி
12 காலேஜ் டேஸ் மலையாளம் அதிரா
13 மொதலசலா கன்னடம் தீபு
14 2011 ஜனபிரியன் மலையாளம் மீரா
15 மஞ்சிவாடு தெலுங்கு இந்து
16 செவனீஸ் மலையாளம் கௌரி
17 ஸ்வப்ன சஞ்சாரி மலையாளம் அஸ்வதி
18 2012 ஷைலூ கன்னடம் ஷைலூ
19 சேவற்கொடி தமிழ் வள்ளி
20 ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா மலையாளம் அபிராமி
21 ஒந்து க்‌ஷாநாதல்லி கன்னடம் திவ்யா
22 101 வெட்டிங்ஸ் மலையாளம் ருகியா
23 2013 ஆட்டோ ராஜா கன்னடம் ராதா, ராணி
24 பர்ஃபி கன்னடம் குஷி
25 அப்பய்யா கன்னடம் கௌரி
26 டீ கம்பெனி மலையாளம் ஜீனா
27 கதவீடு மலையாளம் ஜீனா
28 அம்பரா கன்னடம் அருந்ததி
29 2014 கொந்தயும் பூநூலும் மலையாளம் அம்ரிதா
30 நாக்கு பென்றா நாக்கூ டாகா மலையாளம் சுபா
31 100 டிகிரி செல்சியஸ் மலையாளம் நான்சி
32 ராமானுஜன் தமிழ்/ஆங்கிலம் ஜானகியம்மாள்
33 ஒற்றமந்தாரம் மலையாளம் கலா
34 கண்ணீரினும் மதுரம் மலையாளம் அமீனா
35 கிலாஃபத் மலையாளம்
36 ஸ்வப்னங்களில் ஹைசல் மேரி மலையாளம் ஹைசல் மேரி

சான்றுகள்

  1. http://www.spiderkerala.net/resources/7421-Actress-Bhama-Profile-Biography-with-official.aspx
  2. മലയാളത്തിന്റെ ഭാമസൗന്ദര്യത്തിനും പ്രണയമുണ്ട്. பக். 12,13,14. http://malayalamemagazine.com/LIVEStyle/February2013/. பார்த்த நாள்: 19 July 2014. 
  3. 3.0 3.1 "Finally, I'm getting my due in Malayalam: Bhamaa - The Times of India". The Times Of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/malayalam/news-and-interviews/Finally-Im-getting-my-due-in-Malayalam-Bhamaa/articleshow/21858576.cms. 
  4. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news-and-interviews/I-am-on-the-right-track-Bhamaa/articleshow/35296278.cms
  5. "Bhama turns Playback singer - Malayalam Movie News". IndiaGlitz. 2008-05-26.
  6. "Bhama Takes to Singing!". Nowrunning.com. 2008-05-31. Archived from the original on 2012-10-23. பார்க்கப்பட்ட நாள் 2014-07-19.
  7. "Bhama turns a singer - Malayalam Movie News". IndiaGlitz. 2009-10-05.
  8. January 15, 2012 By Jiji Ann Cherian DC Kochi (2012-01-15). "Bhama, the girl next door". Deccan Chronicle. Archived from the original on 2012-01-17. பார்க்கப்பட்ட நாள் 2014-07-19.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  9. "Kerala / Thiruvananthapuram News : Ujala-Asianet film awards announced". Chennai, India: The Hindu. 2008-01-13 இம் மூலத்தில் இருந்து 2008-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080116112601/http://www.hindu.com/2008/01/13/stories/2008011353790500.htm. 
  10. "Kerala / Kollam News : Sathyan memorial film awards announced". Chennai, India: The Hindu. 2007-11-07 இம் மூலத்தில் இருந்து 2007-11-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071110002254/http://www.hindu.com/2007/11/07/stories/2007110753840300.htm. 
  11. PTI Jan 31, 2008, 09.13pm IST (2008-01-31). "`Ore Kadal', `Thaniye' share critics award for best film - Economic Times". Articles.economictimes.indiatimes.com. http://articles.economictimes.indiatimes.com/2008-01-31/news/28412366_1_playback-singer-special-award-critics-awards. 
  12. "Kerala / Kozhikode News : ‘Thaniye’ bags Ala award". Chennai, India: The Hindu. 2008-01-17 இம் மூலத்தில் இருந்து 2008-06-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080602190616/http://www.hindu.com/2008/01/17/stories/2008011750200200.htm. 
  13. "Vanitha awards for Mammootty, Meera Jasmine - Malayalam Movie News". IndiaGlitz. 2008-02-07.
  14. "Welcome to Amrita TV". Amritatv.com. Archived from the original on 2012-12-16. பார்க்கப்பட்ட நாள் 2014-07-19.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பாமா_(நடிகை)&oldid=23034" இருந்து மீள்விக்கப்பட்டது