நவ்யா நாயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நவ்யா நாயர்
நவ்யா நாயர்
இயற்பெயர்/
அறியும் பெயர்
நவ்யா நாயர்
பிறந்ததிகதி 14 அக்டோபர் 1985 (1985-10-14) (அகவை 39)[சான்று தேவை]
பிறந்தஇடம் கேரளா, இந்தியா
பணி நடிகை, நடன கலைஞர்
செயற்பட்ட ஆண்டுகள் 2001–தற்பொழுதுவரை
செயற்பட்ட ஆண்டுகள் 2001–தற்பொழுதுவரை
துணைவர் சந்தோஷ் மேனன் (2010–தற்பொழுது வரை)
பிள்ளைகள் சாய் கிருஷ்ணா

நவ்யா நாயர் (Navya Nair) என்ற தனது மேடைப் பெயரால் பரவலாக அறியப்படும் இவரின் இயற்பெயர் தன்யா வீணா என்பதாகும். மலையாள , தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்துள்ள ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். சிறந்த நடிகைக்கான கேரளா மாநில திரைப்பட விருதை இரண்டு முறையும், கலைமாமணி விருதையும் வென்றவர்.

தனிப்பட்ட வாழ்க்கை

1985 நவம்பர் 14 அன்று ராஜு மற்றம் வீனா ராஜுவிற்கு, ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிப்பாடுவிற்கு அருகில் உள்ள ஒரு கிராமமான செப்பாடில் பிறந்தார். திரைப்பட இயக்குனர் கே.மது அவருக்கு மாமா உறவுமுறை ஆகும்.

இவர் 10 ஆம் வகுப்பு வரை பெத்தானி பாலிகமடம் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் எம்.எஸ்.எம். உயர்நிலைப்பள்ளியில் படித்தார். அங்கு அவரது தாயார் ஆசிரியராக இருந்தார். பின்னர் வணிக மேலாண்மையில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

21 ஜனவரி 2010 இல், மும்பை சார்ந்த தொழிலதிபர் சந்தோஷ் மேனனை திருமணம் செய்து கொண்டார்.[1] இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற ஒரு மகன் உண்டு.

திரைப்பட வாழ்க்கை

பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே திலீப் நடிகருடன் கதாநாயகியாக இஷ்டம் என்ற படத்தில் 2001 இல் நடித்தார். பின்னர் அவருடன் இணைந்து பல படங்களில் நடித்தார்.

நந்தவனம் என்ற மலையாளத் திரைப்படத்தில் 'பாலாமணி' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரளா மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த நடிகைக்கான கௌரவமான பிலிம்பேர் விருதுகள் 2002 ஆம் ஆண்டில் பெற்றார்.[2] மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி, ஜெயராம், திலீப், ப்ரித்விராஜ் மற்றும் ஜெயசூர்யா ஆகியருடன் ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் அழகிய தீயே படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்ற 2009 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ஆடும் கூத்து படம் இவர் நடித்ததில் குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

  1. "South Indian Beauty Navya Nair Married!". indiglamour. 2010 இம் மூலத்தில் இருந்து 24 ஜனவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100124080730/http://www.indiglamour.com/s3cms/article/Malayalam/South-Indian-Beauty-Navya-Nair-Married!20100121. பார்த்த நாள்: 21 January 2010. 
  2. "State film awards presented". The Hindu (Chennai, India). 4 December 2003 இம் மூலத்தில் இருந்து 11 மார்ச் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040311031032/http://www.hindu.com/2003/12/04/stories/2003120404870400.htm. பார்த்த நாள்: 26 May 2007. 

வெளி இணைப்புகள்

Wikilogo.JPG
தமிழர்விக்கி பொதுவகத்தில்,
நவ்யா நாயர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=நவ்யா_நாயர்&oldid=22973" இருந்து மீள்விக்கப்பட்டது