டி. ராஜேந்தர்
விஜய டி. ராஜேந்தர் | |
---|---|
விஜய டி. ராஜேந்தர் | |
பிறப்பு | மே 9, 1955 இளையாளூர் மயிலாடுதுறை[1] |
வேறு பெயர் | டி. ஆர் |
தொழில் | நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், அரசியல்வாதி, பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர் |
நடிப்புக் காலம் | 1980 இலிருந்து தற்போது வரை |
துணைவர் | உசா ராஜேந்தர் |
பிள்ளைகள் | சிலம்பரசன் குறளரசன் இலக்கியா |
டி. ராஜேந்தர் (T. Rajendar, பிறப்பு: 9 மே 1955) ஓர் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், பாடகரும், இசைக் கலைஞரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார்.[2] வீராசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகன் சிலம்பரசன் ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.
டி. ராஜேந்தர் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும்.
அரசியல் வாழ்க்கை
திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996 இல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். திமுகவிலிருந்து விலகி 1991 இல் தாயக மறுமலர்ச்சி கழகம் என்று கட்சியையும் 2004 இல் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார்.[3][4]
திரைப்படப் பட்டியல்
மேற்கோள்கள்
- ↑ "Thesingu Rajendar - IMDb". http://www.imdb.com/name/nm0707388.
- ↑ "டி.ஆர். பிறந்த நாள்: தனி வழியில் சென்று வென்றவர்!" (in ta). https://www.dinamani.com/cinema/special/2020/may/09/happy-birthday-t-rajendar-3413923.html.
- ↑ திமுகவில் மீண்டும் இணைந்தார் -The Hindu
- ↑ "தி.மு.கவில் இணைந்தார் டி.ராஜேந்தர்: ல.தி.மு.க கலைப்பு". தட்ஸ் தமிழ். http://tamil.oneindia.in/news/tamilnadu/ldmk-leader-t-rajendar-joins-dmk-190391.html. பார்த்த நாள்: 28 திசம்பர் 2013.
- நடிகர் தொடர்பான குறுங்கட்டுரைகள்
- தமிழ்த் திரைப்பட நடிகர்கள்
- வாழும் நபர்கள்
- தமிழக அரசியல்வாதிகள்
- மயிலாடுதுறை மாவட்ட நபர்கள்
- 1955 பிறப்புகள்
- தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள்
- தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்கள்
- தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்
- தமிழ்நாட்டு இசைக்கலைஞர்கள்
- 11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்
- தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழ முன்னாள் மாணவர்கள்