கோபி கிருஷ்ணா

கோபி கிருஷ்ணா என்பவர் ஒரு இந்திய திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ் மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். மோ. ராஜாவின் தனி ஒருவன் (2015) திரைப்படத்தில் இவர் செய்த பணிகளால் நன்கு அறியப்பட்டவரானார். அதன் பின்னர், தொழிலில் ஏற்றம் கண்டார்.[1][2][3]

கோபி கிருஷ்ணா
பிறப்பு12 சூலை 1985
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, வேதாரண்யம்
பணிதிரைப்படத் தொகுப்பு
செயற்பாட்டுக்
காலம்
2004-தற்போது வரை

தொழில்

கோபி கிருஷ்ணா சென்னை எம்.ஜி.ஆர் அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் படத்தொகுப்புக் கலையை முறையாக கற்றுக்கொண்டார். கோபி கிருஷ்ணாவின் முதல் வெற்றிப் படமானது பாலாஜி சக்திவேலின் மர்ம படமான வழக்கு எண் 18/9 (2012) ஆகும், அதைத் தொடர்ந்து இவருக்கு தமிழ் படங்களில் படத்தொகுப்பு பணி செய்ய அதிக வாய்ப்புகள் கிடைத்தன. மோ. ராஜாவின் தனி ஒருவன் (2015) திரைப்படத்தில் இவர் பணியாற்றிய பின்னர் இவர் தன் தொழில் முன்னேற்றம் கண்டார். இதன் பிறகு பெரிய திரைப்படங்களில் வாய்ப்பு பெறத்துவங்கினார். பின்னர் வெற்றிகரமான திகில் நகைச்சுவை படமான தில்லுக்கு துட்டு (2016) படத்திலும் பணியாற்றினார்.[4][5]

2017 இல், கோபி கிருஷ்ணா பல நடுத்தர செலவில் தயாரிக்கப்பட்ட தமிழ் படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றினார். வரலாற்று திரைப்படமான மடை திறந்து, திகில் படமான டோரா, நகைச்சுவைத் திரைப்படமான மன்னர் வகையறா போன்றவற்றில் பணியாற்றினார்.

திரைப்படவியல்

படத்தொகுப்பாளராக

ஆண்டு படம் இயக்குனர்
2012 வழக்கு எண் 18/9 பாலாஜி சக்திவேல்
மனம் கொத்திப் பறவை எழில்
இராட்டினம் கே. எஸ். தங்கசாமி
வாவ்வால் பசங்க சுரேஷ்
2013 குட்டிப் புலி எம். முத்தையா
தேசிங்கு ராஜா எழில்
1000 அப்புதலு (தெலுங்கு) தேஜா
2014 நேர் எதிர் எம். ஜெயப்பிரதீப்
2015 வண்ண ஜிகினா நந்தா பெரியசாமி
தனி ஒருவன் மோ. ராஜா
ஜில்லா (தெலுங்கு, மொழிபெயர்ப்பு பதிப்பு) ஆர்டி நீசன்
2016 தில்லுக்கு துட்டு ரம்பலா
அழகென்ற சொல்லுக்கு அமுதா நாகராஜன்
2017 எனக்கு வாய்த்த அடிமைகள் மகேந்திரன் ராஜாமணி
என்னோடு விளையாடு அருண் கிருஷ்ணசாமி
டோரா டாஸ் ராமசாமி
போங்கு தாஜ்
இவன் யாரென்று தெரிகிறதா எஸ். டி. சுரேஷ்குமார்
2018 மன்னர் வகையறா பூபதி பாண்டியன்
ஒரு குப்பை கதை காளி ரெங்கசாமி
மணியார் குடும்பம் தம்பி ராமையா
சேய் ராஜ் பாபு
2019 கழுகு 2 சத்யசிவா
நீயா 2 எல். சுரேஷ்
மார்க்கெட் ராஜா எம்.பி.எஸ் சரண்
2020 மாயநதி அசோக் தியாகராஜன்

குறிப்புகள்

 

"https://tamilar.wiki/index.php?title=கோபி_கிருஷ்ணா&oldid=23722" இருந்து மீள்விக்கப்பட்டது