மடை திறந்து
மடை திறந்து | |
---|---|
இயக்கம் | சத்யசிவா |
தயாரிப்பு | எஸ். என். ராஜராஜன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ரானா தக்குபாடி ரெஜினா கசாண்ட்ரா சத்யராஜ் நாசர் |
ஒளிப்பதிவு | சத்தியா பொன்மார் |
படத்தொகுப்பு | கோபி கிருஷ்ணா |
கலையகம் | கே புரொடக்சன்ஸ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு |
மடை திறந்து / 1945 (Madai Thiranthu) என்பது வெளிவராத இந்திய வரலாற்றுத் திரைப்படம் ஆகும். இப்படத்தை கழுகு புகழ் சத்யசிவா இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை கே புரொடக்சன்சின் எஸ். என் ராஜராஜன் தயாரித்துள்ளார். இப்படத்தில் ரானா தக்குபாடி, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், மேலும் சத்யராஜ், நாசர் ஆகியோர் பிற முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழில் மடை திறந்து எனவும், [1] தெலுங்கில் 1945 எனவும் படமாக்கபட்டுள்ளது.
நடிகர்கள்
- ரானா தக்குபாடி
- ரெஜினா கசாண்ட்ரா
- சத்யராஜ்
- நாசர்
- காளி வெங்கட்
- சம்பத் ராம்
- லீஷா எக்லேர்ஸ்
- சரிதா பாலகிருஷ்ணன்
- ரொமாரியோ
தயாரிப்பு - வளர்ச்சி
சத்தியசிவா 2015 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் படத்தின் எழுத்துப்பணியைத் தொடங்கினார். பின்னர் ஜீவாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினார். ஆனால் படத்துக்கான தயாரிப்பளரை கண்டறிய முடியவில்லை.[2] பாகுபலி 2 பட உரிமைகளை வாங்கிய எஸ். என். ராஜராஜன் இந்த படத்தை பெரும் செலவில் இருமொழித் திரைப்படமாக சத்யாசிவா இயக்கத்தில் கொண்டுவர முன்வந்தார்.[3] தயாரிப்பாளரின் நெருக்கம் காரணமாக ரானா தக்குபாடி கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டதால் ரெஜினா கசாண்ட்ரா கதாநாயகியாக ராணாவுடன் ஜோடி சேர தேர்வு செய்யப்பட்டார்.[4] பின்னர் நாசர், சத்யராஜ் ஆகியோரும் பிற முக்கியமான வேடங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக இயக்குனரின் கழுகு மற்றும் கழுகு 2 படங்களுக்கு ஒத்துழைத்த யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கான இசையமைப்பில் ஈடுபட்டார்.[5] சத்யா பொன்மார், கோபி கிருஷ்ணா, ஈ. தியாகராஜன் ஆகியோர் முறையே ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை இயக்கம் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் மூன்று பேரும் இயக்குநருடன் அவரது முந்தைய படங்களில் இணைந்து பணியாற்றியவர்களாவர்.[6]
நடிப்பு
இப்படத்தில் ரானா தக்குபாடி மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் [4] மேலும் பிற முக்கிய பாத்திரங்களில் மூத்த நடிகர்களான நாசர், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.[5]
படப்பிடிப்பு
2016 ஆகத்து 19 முதல் கொச்சியில் முதன்மை ஒளிப்பதிவு தொடங்கப்பட்டது. 1940 களில் சுபாஸ் சந்திரபோஸின் விடுதலை இயக்கத்தை சித்தரிக்கும் வகையில், நாசர் மற்றும் ரெஜினா கசாண்ட்ராவுக்கான பகுதிகள் எடுக்கபட்டதால், அக்கால காட்சிகளுக்காக கடற்கரையில் பெரிய அமைப்புகள் உருவாக்கபட்டன. சத்யராஜ் செப்டம்பரில் நடக்கும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ரானா தக்குபாடி பாகுபலி 2 படத்திற்கு பிறகு படப்பிடிப்பில் இணைவார் என்று கருதப்பட்டது.[7] கேரளம், இலங்கையின் கொச்சியில் 2017 அக்டோபரில் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. ராணா தகுபாடி படத்தின் ஒரு பகுதியில் சுத்தமாக மொட்டையடித்து கலந்துகொண்டார்.
வெளியீடு
படத்தின் முதல் தோற்றம் 27 அக்டோபர் 2019 அன்று வெளியிடப்பட்டது, அதே நேரத்தில் படம் 24 சனவரி 2020 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கபட்டது.[6]
சர்ச்சை
படத்தின் முதல் தோற்றம் வெளியான பிறகு, தயாரிப்பாளர் ராஜராஜன் தனக்கு தரவேண்டிய தொகைய தரவில்லை என்று கூறி, ராணா தக்குபாடி தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்தார். மேலும் பட வெளியீடு குறித்த அறிவிப்பானது பணம் திரட்டுவதற்கும், அதிகமான மக்களை 'ஏமாற்றுவதற்கும்' ஒரு வழியாகப் பயன்படுத்துகிறார் என்று குறிப்பிட்டார். படத்தின் பணிகள் இன்னும் 'முடிக்கப்படவில்லை' என்றும் ராணா தகுபாடி கூறினார். நடிகரின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தயாரிப்பாளர் ராஜராஜன் ட்விட்டரில் பதிலளித்தார். படம் முடிந்ததா இல்லையா என இறுதி முடிவு எடுப்பது இயக்குநரின் தனி உரிமை. இதற்கு ராணா தகுபாடி கட்டைவிரல் புன்னகையுடன் பதிலளித்து, உரையாடலைத் தொடராமல் நிறுத்தினார். அவர் தனக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையைப் பெறுவதற்கு அவர் சட்ட வழியை மேற்கொள்வாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.[8][9]
இசை
இப்படத்தோடு மூன்றாவது முறையாக இயக்குனருடன் இணைந்த யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை மோகன ராஜா, அருள் காமராஜ் எழுதியுள்ளனர். இசை உரிமைகளை முசிக் 247 பெற்றுள்ளது.[6]
குறிப்புகள்
- ↑ Prakash, Upadhyaya (28 September 2016). "Baahubali star Rana Daggubati denies working with Mohanlal". IB Times. http://www.ibtimes.co.in/baahubali-star-rana-daggubati-denies-working-mohanlal-695769. பார்த்த நாள்: 18 October 2016..
- ↑ "Jiiva's next with Sathyasiva will be a period flick". Behindwoods. 23 October 2015.
- ↑ "K Productions Rajarajan to release 'Baahubali 2' in TN". Sify. 16 August 2016. Archived from the original on 19 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 August 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 4.0 4.1 Sharanya, C R (6 August 2016). "Regina Cassandra to play the lead in Rana’s film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Regina-Cassandra-to-play-the-lead-in-Ranas-film/articleshow/53557543.cms. பார்த்த நாள்: 29 August 2016.
- ↑ 5.0 5.1 Sharanya, C R (25 August 2016). "Sathyaraj, Nasser to join Rana’s film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sathyaraj-Nasser-to-join-Ranas-film/articleshow/53844315.cms. பார்த்த நாள்: 29 August 2016.
- ↑ 6.0 6.1 6.2 "The first look poster of Baahubali star's next is here". Behindwoods. 27 October 2019. https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/the-first-look-poster-of-rana-daggubatis-upcoming-period-film-is-here.html. பார்த்த நாள்: 28 October 2019.
- ↑ "Rajarajan bags TN theatrical rights of Baahubali 2". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 17 August 2016. http://www.newindianexpress.com/entertainment/tamil/Rajarajan-bags-TN-theatrical-rights-of-Baahubali-2/2016/08/17/article3582690.ece. பார்த்த நாள்: 29 August 2016.
- ↑ Kurian, Joel (27 October 2019). "Rana Daggubati Fumes At '1945' Makers As They Announce Launch Event". Republic.. https://www.republicworld.com/entertainment-news/others/rana-daggubati-fumes-at-1945-makers-as-they-announce-launch-event.html. பார்த்த நாள்: 28 October 2019.
- ↑ "Rana Daggubati accuses 1945 producer Rajarajan of non-payment of dues, calls it an unfinished film". India Today. 28 October 2019. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/rana-daggubati-accuses-1945-producer-rajarajan-of-non-payment-of-dues-calls-it-an-unfinished-film-1613332-2019-10-28. பார்த்த நாள்: 28 October 2019.