லீஷா எக்லேர்ஸ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

லீஷா எக்லேர்ஸ் (Leesha Eclairs) என்பவர் ஒரு இந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். குறிப்பாக இவர் தமிழ் தயாரிப்புகளில் பணியாற்றியுள்ளார்.

தொழில்

லீஷா எக்லேர்ஸ் நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படிப்பை முடித்தார்.[1] 2016 ஆம் ஆண்டின் இறுதியில், இவர் ஒரே நேரத்தில் ஏழு திரைப்படங்களில் பணிபுரிந்தார். அந்த ஏழு படங்களில் மிக முக்கியமான மற்றும் இவரது முதல் வெளியீடாக, பலே வெள்ளையத்தேவா (2016) படம் வந்தது. அந்த படத்தில் இவர் எதிரியின் மகளாக நடித்தார். மற்ற படங்களாக விஜய் வசந்திற்கு ஜோடியாக வெளியிடப்படாத திகில் படமான மை டியர் லிசாவும் , நிதின் சத்யவுடன் இணைந்து நடித்த சிரிக்க விடலாமா என்ற நகைச்சுவை நாடகப் படமும் அடங்கும். சமூக நாடகப்படமான பொது நலன் கருதி (2019) இல் இவர் குழும நடிகர்களிடையே ஒருவராக தோன்றினார். அதில் சந்தோஷ் பிரதாப்பின் கதாபாத்திரத்தின் மீது காதல் கொண்டவராக நடித்தார்.[2][3][4]

2018 அக்டோபரில், லீஷா நடித்த முதல் தொலைக்காட்சிப் தொடரான கண்மணி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கியது. இந்தத் தொடரில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், மேலும் இந்த தொடருக்காக லீஷா இடம்பெறும் காட்சிகள் ஜார்ஜியா மற்றும் இந்தியாவில் படமாக்கபட்டன.[5]

லீஷா சத்யசிவாவின் இரட்டை மொழிப் படமான மடை திறந்து (2020) படத்தில் நடித்தார். அதில் இவர் ஒரு பாரம்பரிய தென்னிந்திய பெண்ணாக நடித்தார்.வெளியிட்டுகுத் தயாராக உள்ள பிரியமுடன் பிரியா என்ற காதல் நாடகப் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[6][7]

திரைப்படவியல்

தொலைக்காட்சி

ஆண்டு பெயர் பங்கு மொழி குறிப்புகள்
2018 - 2020 கண்மணி சௌந்தர்யா தமிழ்

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2016 பலே வெள்ளையத் தேவா பிரியா தமிழ்
2019 பொது நலன் கருதி தமிழ்
2020 மடை திறந்து பூர்வி தமிழ் தயாரிப்பிற்குப்பின்
2020 1945 தெலுங்கு தயாரிப்பிற்குப்பின்
2020 மை டியர் லிசா லிசா தமிழ் தயாரிப்பிற்குப்பின்
2020 பிரியமுடன் பிரியா பிரியா தமிழ் தயாரிப்பிற்குப்பின்
2020 சிரிக்க விடலாமா தமிழ் தயாரிப்பிற்குப்பின்
2020 ஈடிலி தமிழ் தயாரிப்பிற்குப்பின்

குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=லீஷா_எக்லேர்ஸ்&oldid=23381" இருந்து மீள்விக்கப்பட்டது