வண்ண ஜிகினா
வண்ண ஜிகினா | |
---|---|
இயக்கம் | நந்தா பெரியசாமி |
தயாரிப்பு | என். சுபாஷ் சந்திரபோஸ் கே. திருக்கடல் உதயம் |
இசை | ஜான் பீட்டர் |
நடிப்பு | விஜய் வசந்த் சான்யதாரா |
ஒளிப்பதிவு | பாலாஜி வி. ரங்கா |
படத்தொகுப்பு | கோபி கிருஷ்ணா |
கலையகம் | இராகுல் பிலிம்ஸ் |
விநியோகம் | திருப்பதி பிரதர்ஸ் |
வெளியீடு | 21 ஆகத்து 2015 |
ஓட்டம் | 106 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வண்ண ஜிகினா (Vanna Jigina) என்பது 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய இப்படத்தில் விஜய் வசந்த் மற்றும் சான்யதாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிங்கம்புலி, ரவி மரியா, அஸ்வின் ராஜா உள்ளிட்டோர் பிற பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். படத்திற்கான இசையை ஜான் பீட்டர்ஸ் அமைத்துள்ளார். படம் 2015 ஆகத்தில் கலவையான விமர்சனங்களுடன் வெளியானது.[1]
நடிகர்கள்
- விஜய் வசந்த் பாவாடையாக
- சான்யதாரா ஏஞ்சல் பிரியா
- சிங்கம்புலி
- ரவி மரியா
- அஸ்வின் ராஜா
- டவுட் செந்தில்
- சுகு வெங்கட் கிஷோர் குமார்
- அன்சன்பால்
- ஸ்ரீதேவி கருகமணியாக
- தேவ் ஆனந்த்
- சாய் பரத்
- ஏ. ரோசன்
- ஜியார்ஜ்
- சாய்சரன்
- ஆர். பாலகிருஷ்ணன்
- பி. பாலாஜி
- பிரீத்தி
- பவித்ரா
- ராசியா
தயாரிப்பு
இப்படமானது 2014 சூலையில் ஜிகினா என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பின்னர் படம் தணிக்கை செய்யப்படுவதற்கு முன்பு வண்ண ஜிகினா என்று பெயர் மாற்றபட்டது.[2] இயக்குனர் என். லிங்குசாமி படத்தின் உரிமைகளை வாங்கி தனது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பதாகையின் கீழ் வெளியிட முடிவு செய்ததை அடுத்து இந்த படம் மேலும் ஊடக கவனத்தை ஈர்த்தது.[3][4] சமூக ஊடகங்களை உள்ளடக்கிய ஒரு கருப்பொருளைக் கொண்ட ஜிகினா, பழைய தமிழ் படங்களின் காட்சிகளை விவரிக்கும் தொடர்ச்சியான மீம்சின் மூலம் இணையத்தில் விளம்பரப்படுத்தப்பட்டது.[5]
இசை
படத்திற்கான இசை ஜான் பீட்டர் அமைத்தார்.[6] படத்தின் இசை வெளியீடு 2015 சூலையில் நடந்தது. நிகழ்வில் காக்கா முட்டை (2015) திரைப்படத்தின் விக்னேஷ், ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.[7]
- "ரோசாபூ" - ஹரிஹரசுதன்
- "காதோடே" - சுர்ஜித், வினையதா
- "அய்யோ என் இதயத்துள்ளே" - ஜெயமூர்த்தி
வெளியீடு
இந்தப் படம் 2015 ஆகத்தில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தி இந்து நாளேட்டைட்ச் சேர்ந்த ஒரு விமர்சகர் இதை "பிற்போக்கான" என்று முத்திரை குத்தியதுடன், கரிய நிறத்தவர்களை தாழ்ந்தவர்களாக சித்தரிக்கும் கருப்பொருளை விமர்சித்தார்.[8]
குறிப்புகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-08-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150822040422/http://www.sify.com/movies/jigina-review-tamil-pivoQRbfffafj.html.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-08-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140801011228/http://www.sify.com/movies/vijay-vasanth-s-jigina-starts-rolling-news-tamil-oh5krzaifcdba.html.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-05-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150522030905/http://www.sify.com/movies/what-is-jigina-all-about-news-tamil-pftjLUfghbeeh.html.
- ↑ http://www.deccanchronicle.com/150812/entertainment-kollywood/article/jigina-carries-huge-message-lingusamy
- ↑ http://behindwoods.com/tamil-movies-cinema-news-15/jigina-uses-interesting-memes-with-ajith-vijay-and-suriya-for-its-social-media-promotions.html
- ↑ https://gaana.com/album/jigina
- ↑ http://www.behindwoods.com/tamil-movies/event-photos-pictures-stills/jigina-audio-launched-by-kaaka-muttai-kids/jigina-audio-launched-by-kaaka-muttai-kids-stills-photos-pictures.html#.ViYtCn6rTIU
- ↑ http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/jigina-a-perilous-movie-about-the-perils-of-social-network/article7566331.ece